(Reading time: 14 - 27 minutes)

“நல்லான்னா?.. எந்த லெவல் தீபன்?...” கேட்பவனும் சற்றே குதர்க்கமாக கேட்டிட, வேகமாக தீபனும் தன்னிடம் கேள்வி கேட்டவனை நோக்கி நடக்க துவங்க,

அவன் சற்றே பின்னடைந்து, “தீபன் என்ன பண்ணுறீங்க…” எனக் கேட்க,

“இல்ல நீங்க தான கேட்டீங்க?.. எந்த லெவல்னு.. அதான் அதை ப்ரூவ் பண்ணலாம்னு…” என அவனும் சிரித்தவாறே சொல்லிட,

“சார் நீங்க அடிக்கவேண்டியது மைக் டைசன் மாதிரி ப்ளேயர்ஸை… என்னை மாதிரி ஓமக்குச்சியை அடிச்சி உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க சார்…” என அவனும் பம்மிட, தீபனோ சிரித்தான்…

“இதுக்குத்தான் வாயைக்கொடுத்து மாட்டிக்கக்கூடாதுன்னு சொல்லுறது… இனியாவது திருந்து…” என அந்த பெண் தன்னருகே நின்று கொண்டிருப்பவனிடம் கூற,

“நீ சாருவை கலாய்ச்சப்போ, தீபன் இருந்திருக்கணும்… உன் நல்ல நேரம் நீ தப்பிச்சிட்ட….” என அவனும் அவளை வெறுப்பேற்ற,

அவளோ, “சரி சரி… விடு… விடு… சாரு வெயிட் பண்ணுறாங்க… சாரு பாட்டைக் கேட்போம்… பாடுங்க சாரு…” என பேச்சை திசை திருப்ப, அவளும் சரி என்றாள்…

“நீங்க அவார்ட் வாங்க காரணமா இருந்த அந்த பாட்டையே பாடணும்னு எங்க எல்லாரோட ரெக்வஸ்ட்… சோ ப்ளீஸ்…” என அவள் எடுத்துக்கொடுக்க, அரங்கத்திலுள்ளவர்களும் ஆம் என்றனர் கோரசாய்..

அந்நேரம் கௌஷிக்கை நோக்கி கேமரா வைத்திட, அவன் விருட்டென எழுந்து கொண்டான்… பக்கத்தில் உள்ளவர்களிடம் எதையோ உரைத்தவன், போனை காதினில் வைத்தவாறு விருவிருவென்று அந்த அரங்கத்தை விட்டு வெளியேற, கேமரா அவன் போகும் திசையையும், சாருவையுமே மாறி மாறி காட்டியது…

ஆ…. ஆ…. ஆ…

சூரியனாய் என்னவனும்

தலைநிமிரா பூ இவளும்

காதலெனும் உலகிற்குள்ளே

சஞ்சரித்து வலம் வரவே…

இறைவன் அவன் வகுத்த விதி...

இயல்பினதாய் தொடர்கிறதே…

தாமரையே ஆயினுமே

வருணனது துளி சேராதே….

இயற்கையே உதாரணமாக

நம் பந்தம் மட்டும் விதிவிலக்கா?...

கனவுகள் ஆயிரம் கண்டாலும்

நனவில் நான்காண முடியலையே…

என் நினைவுகள் உனைசேரவும்

வரம் எதுவும் வாங்கலையோ…

விரும்பி நீயும், இசைந்து நானும்

ஸ்வரமும் மீட்டும் நாள் ஈடேறிடுமா ஆ……..”

அவள் பாடி முடித்ததும், விசிலோசை பறக்க, வெளியே தனது காரில் அவளின் முகத்தினை எண்ணியபடி அமர்ந்திருந்தான் கௌஷிக் தன்னையே நொந்தவனாய்…

“கௌஷிக்… கண்ணா… என்னாச்சுப்பா?...”

கல்யாணியின் குரல் அருகே கேட்டிட, சட்டென காருக்கு வெளியே பார்த்தான் கௌஷிக்…

“அம்மா… என்னம்மா வந்துட்டீங்க?...”

“போதும்ப்பா… பார்த்தவரைக்கும் மனசு நிறைஞ்சிட்டு… அதுவே எனக்கு போதும்…”

அவரின் வார்த்தைகளில் இருந்திட்ட உணர்வை அவனால் புரிந்து கொள்ள முடிந்திட்டது தெளிவாகவே…

“ஃபக்ஷன் முடிஞ்சதும் வந்திருக்கலாமேம்மா…”

“இல்ல கண்ணா… நீயே வந்த பிறகு, இனி எனக்கென்ன வேலை அங்க?…”

“அம்மா…”

“ஆமாப்பா… இந்த அவார்டுக்கு ஸ்பான்சர் என்ற முறையில் நீ வர வேண்டிய நிர்பந்தம்… அதனால நீ வந்த... அதுவுமில்லாம தீபன் வார்த்தைக்கும் நீ மரியாதை கொடுத்து தான் நீ இங்க வந்திருக்கன்னு அம்மா நம்புறேன்ப்பா…”

“இரண்டுமே நிஜம் தான்ம்மா… என்னோட வலி, என்னோடவே போகட்டும்ம்மா… மத்தவங்களை அது காயப்படுத்துறதை நான் விரும்பலைம்மா… அதனால தான்மா இங்க வர சம்மதிச்சேன்…“

“எனக்கு புரியுது கண்ணா… வீட்டுக்குப் போகலாமாப்பா?...”

“சரிம்மா…”

அவன் காரை எடுக்கப்போகும் நேரத்தில், “சாரு பாடினதை கேட்கக்கூடாதுன்னு தானப்பா வெளிய வந்துட்ட?...” அவர் அவனிடம் வினவிட,

“கேட்டா வெளியவே வரமுடியாதும்மா…” என அவன் மனம் உரைத்திட, வெளியே தாயிடம் எதுவுமே கூறாமல் அமைதி காத்தான் அவன்…

பின்னர், “என்னால மத்தவங்க காயப்படக்கூடாதுன்னு தான் நான் இங்க வந்தேன்ம்மா… ஆனா அதே நேரத்துல என்னோட சில விஷயங்களையும் என்னால மாத்திக்க முடியலைம்மா… அதான் வெளியே வந்துட்டேன்…” என கூறிட,

மகன் எதை சொல்கிறான் என புரிந்து கொண்டவர்,

“நீ சொன்ன மாதிரி அவளும் எப்படி கண்ணா ஃப்ரெண்ட் இல்லன்னு சொன்னா?... எனக்கு அது புரியவே இல்லை…” என அவனிடம் சொல்லிட,

“அவங்களுக்கு நான் யாருமே இல்லைதானம்மா… ஈவன் ஃப்ரெண்ட் டூ… அதே போல எனக்கும் அவங்க ஃப்ரெண்ட் இல்லையே…” அவன் இயல்பாய் அவரிடம் கூறிவிட்டு,

“அவ எனக்கு ஃப்ரெண்ட் இல்லைம்மா… ஃப்ரெண்டுக்கும் மேல…” என மனதிற்குள் கூறியபடி காரை எடுத்திட, கல்யாணியோ யோசனையில் ஆழ்ந்திட்டார் மெல்ல…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 18

Episode # 20

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.