(Reading time: 14 - 27 minutes)

“சரி சாரு நீங்களே சொல்லுங்க… எப்படி அந்த கெமிஸ்ட்ரி இவ்வளவு பெர்ஃபெக்டா அழகா வந்துச்சு?...”

“தெரியலை…” என்றபடி அவள் அழகாய் புன்னகைக்க,

“கமான் சாரு… சொல்லுங்க…”

“நிஜமாவே தெரியலை…”

“இப்படி சொன்னா எப்படி சாரு?...”

“…..” அவள் புன்னகையை தவிர வேறெதுவும் பதிலாய் கொடுக்காமல் இருந்திட,

“ஓகே… கௌஷிக்… இப்போ நீங்க சொல்லுங்க… பொதுவா இப்படி காசிப்ல மாட்டுறவங்க ஃபர்ஸ்ட் நாங்க ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான்னு சொல்லிட்டு ஃபைனலா லவ்வை சொல்லுவாங்க… ஹ்ம்ம்.. நீங்களும் ஃப்ரெண்ட்ஸ் தானா?...”

கேட்டு முடித்ததும், அரங்கம் எங்கும் கூச்சல் அதிகரிக்க,

“என்னடா அவார்ட் ஃபங்க்ஷன்ல இப்படி கூப்பிட்டு வச்சு கேட்குறாங்கன்னு எதுவும் நினைச்சிக்காதீங்க… மக்கள் நினைக்குறதை தான் நான் கேட்டேன்…” அந்த பெண்ணும் தன் நிலையை விளக்கி கூறிட,

“வீ ஆர் நாட் எ ஃப்ரெண்ட்ஸ்…” என்றான் கௌஷிக் பட்டென்று…

“என்ன கௌஷிக் சொல்லுறீங்க?.. ஃப்ரெண்ட்ஸே இல்லையா?..”

“யெஸ்… தட்ஸ் த ட்ரூத் டூ…”

“சாரு கௌஷிக் சொல்லுறது நிஜம் தானா?..”

“யெஸ்…” என அவள் இதழ் உரைத்தபோது, அவள் மனமோ, “யெஸ் வீ ஆர் நாட் ஃப்ரெண்ட்ஸ்… மோர் தேன் தேட்…” என கூறிட, கௌஷிக்கையே அவள் விழிகள் ஆராய்ந்தது அவனும் இவ்வாறு எண்ணுகிறானா என்று…

சாருவும் ஆம் என்றதும், கேள்விக்கேட்டுக்கொண்டிருந்த பெண்ணிற்கே, சப்பென்று ஆகிட,

“அட போங்கப்பா….” என்றபடி, அவளும் முகத்தை தொங்கப்போட்டுக்கொள்ள,

“தேங்க் யூ…” என்றபடி கௌஷிக் முதலில் அங்கிருந்து இறங்க, அடுத்து சாரு இறங்கினாள்…

பின்னர் சில அவார்டுகளுக்குப் பிறகு,

“அடுத்த அவார்ட் நமக்கெல்லாம் ரொம்பவே பிடிச்ச ஒரு மனிதருக்கான அவார்ட்… யெஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது… இந்த விருதை கொடுக்க யாரை கூப்பிடன்னு யோசிச்சப்போ, அவரோட ஃபேமிலியையே கூப்பிடலாம்னு தோணுச்சு… சோ, ப்ளீஸ் கம் ஆன் டூ ஸ்டேஜ், சகுந்தலா மேம், தீபன், அண்ட் சாரு…”

முதலில் சகுந்தலா வேகமாக மேடைக்கு செல்ல, அடுத்து தீபனும், சாருவும் பின்னே சென்றனர் சற்று இடைவெளி விட்டே…

“இந்தியாவின் பிரபல கர்நாடக இசை பாடகரும், நம்ம பேவரிட் ஸ்டாரும், தமிழ்த் திரையுலகின் மூத்த பாடகருமான திரு. ஸ்ரீநிவாஸ் ஐயா அவர்களை அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம்…”

அழைப்பு வந்தவுடன் கரகோஷங்கள் முழங்கிட, அவர் இருகைகுவித்து வணங்கியபடி மேடை ஏறி நிற்க,

சாருவும், தீபனும் அவரின் கால்களில் விழுந்து வணங்கி எழ, அவர் அவர்கள் இருவரின் சிரசிலும் தன் கரத்தை வைத்து வாழ்த்தி, மகிழ,

சகுந்தலாவினையே விருதினை கொடுக்க சொன்னாள் சாரு… தீபனும் சாருவும் அருகில் நின்றனரே தவிர அவ்விருதினை கொடுக்கவில்லை… அதனை தொட சகுந்தலா சம்மதிக்க மாட்டார் என்று தெரிந்தே அவர்கள் இருவரும் அதனை தொடவில்லை…

மரியாதை நிமித்தமாய் உடனிருந்தனரே தவிர, வேறெதுவும் செய்யவில்லை…

அரங்கத்திலுள்ளவர்கள் அனைவரும் எழுந்து அவருக்கு மரியாதை கொடுத்தனர்…

ஸ்ரீனிவாஸ் அவர்களிடம் மைக்கை கொடுத்த போது, “நான் பெரிசா எதுவும் சாதிச்சிடலை… ஏதோ கொஞ்சம் பாட்டு பாடியிருக்குறேன்… அவ்வளவுதான்…” என சொன்னதும் அனைவரின் கைத்தட்டல் ஒலி பலமாய் கேட்டது…

அவரினை ஒரு பாடல் பாடும்படி கேட்டுக்கொண்டபோது, அவர் சாருவையும் உடன் பாட சொல்ல, அவளோ முதலில் அவரும், பின்னர் தானும் பாடுவதாக கூறினாள்…

கர்நாடக இசையில் அவர் அற்புதமாய் பாடல் பாடி முடித்திட, அரங்கத்தில் உள்ளவர்கள் எழுந்து நின்று கைத்தட்டி தங்களது சந்தோஷத்தையும், மரியாதையையும் வெளிப்படுத்த, அவர் இரு கைகுவித்து வணங்கினார் புன்னகையுடன் “நன்றி…” என்றபடி…

அவர் பாடி முடித்ததும், அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு, சகுந்தலா அவரை கீழே அழைத்து செல்ல, மேடையில் நின்றிருந்த தீபனை பார்த்த தொகுப்பாளினி,

“ஹலோ தீபன்…” என்றாள்…

“ஹலோ…” என்றபடி அவனும் கூற,

“மக்களே, திரு… ஸ்ரீனிவாஸ் அவர்களின் தங்கை புதல்வனும், புதல்வியும் தான் இந்த சாருவும் தீபனும்… சாரு தன் மாமாவைப்போலவே இசைத்துறையில் கால் பதிச்சிட்டாங்க… விருதும் வாங்கிட்டாங்க… பட் தீபன் மெடல் வாங்கப்போறார்… யெஸ்… ஹீ இஸ் எ கிக் பாக்ஸிங்க் சேம்பியன்… நெக்ஸ்ட் வீக் அமெரிக்கால நடக்கப்போற டோர்னமென்ட்க்கு இந்தியா சார்பா கலந்துக்கப்போற நம்ம இந்திய வீரர்களில் நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த தீபனும் ஒருவர்…” என அங்கிருந்தவர்களிடம் அவனைப் பற்றி கூறியவள்,

“தீபன் ப்ராக்டிஸ் எல்லாம் எந்த லெவல்ல எப்படி போயிட்டிருக்கு?...” என அவளருகில் இருந்தவன் கேட்டிட,

“நல்லா போயிட்டிருக்கு….” என்றான் தீபனும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.