(Reading time: 8 - 16 minutes)

தலையாட்டினான் மதி  வேந்தன்.

அதன் பிறகு  தனது மூன்று குழந்தைககளுக்கும் உணவை ஊட்டிவிட்டு சென்றால் அன்னம்.

இப்படியே தேனின் பள்ளி வாழ்க்கை தொடங்கியது.அவளை பார்த்துக் கொள்ள இருவர் இருக்க அவள் அவர்கள் இருக்கும் தையிரியத்தில்  பள்ளி வாழ்கையை நன்கு ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்..

அன்னம் தனது மூன்று பிள்ளைகளுக்கும் உணவு எடுத்து செல்வது வாடிக்கையானது.

ப்படியே நாட்கள் மாதங்களாக மாற அரையாண்டு  விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து நான்கு நாட்கள் ஆகி இருந்தன.

பிரேக்கில் தேன்நிலாவின் வகுப்பு பக்கம் சென்றவனது கண்களில் மரத்தடியில் அமர்ந்திருந்த தேன்நிலா பட்டாள்.

அவளது பக்கத்தில் வேலன் அமர்ந்துக் கொண்டிருக்க,அவளது இன்னொரு புறம் கயல் அமர்ந்திருந்தாள்.

இவர்கள் இருவர் தான் தேனின் நண்பர்களாக இருந்தனர்.

அவர்களது அருகில் சென்றான் மதிவேந்தன்.

“என்ன நிலா என்ன பண்றீங்க இங்க..”என்று கேட்டான் மதிவேந்தன்.

தேன்நிலாவோ அமைதியாக இருக்க,வேலன் வாய் திறந்தான்.

“அண்ணா,எங்களுக்கு ஒரு சந்தேகம்ணா..”என்று வேலன் சொல்ல என்ன என்பது போல் மதிவேந்தன் பார்த்தான்.

“அண்ணா விதை போட்டா முளைக்கும் தான..”என்று கேட்க

“விதை போட்டா மரம் முளைக்கும்டா கண்டிப்பா..”என்று கூறினான் வேந்தன்.

“ஐய்யையோ,அப்ப தேனு உன் வயிற்றிலிருந்து கண்டிப்பா மரம் முளைக்க போது போ...”என்று கூறினான் வேந்தன்.

அதைக் கேட்ட கயல்,”வேலா அப்ப தேனு தலைக்கு மேல மரம் போகுமா..,அப்ப காது,வாய் வழிய கிளையெல்லாம் வருமா..”என்று இன்னும் சொல்லிக்  கொண்டே போக

அதை தனது கற்பனை திறனின் மூலம் நினைத்து பார்த்த தேனின் கண்கள் பிதியை வெளியிட கைகளோ அவளது வயிற்றை தடவிக் கொண்டிருந்தது.

“பைசா பிலிம் வாங்கி,அப்பாவோட வேட்டியில

        கண்ணாடி லென்ஸ் வச்சி சினிமா காமிச்சோமே

அண்ணாச்சி கடையில தான்,எண்ணையில தீ குளிச்ச

        பரோட்டாவுக்கு பாதி சொத்தை நாங்க அழிச்சோமே..”

அதை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.அவனும் ஒரு காலத்தில் நம்பியவன் தானே.

“நிலா அதெல்லாம் முளைக்காது ” என்று மதிவேந்தன் சொல்ல

“இல்லை மச்சான் நீ  பொய் சொல்லுற ,மரம் முளைக்க போது என்னோட வயிற்றிலிருந்து..” என்று கூறினால் தேன்நிலா.

மதிவேந்தன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவன் சொல்வது  எதையும் தேன்நிலா நம்புவதாக இல்லை.

எவ்வளவோ சொல்லி பார்த்தவன்,ஒரு முடிவுக்கு வந்தவனாய் “நிலா,நீ என்ன விதைய முழுங்கன..”என்று கேட்க

“அந்த  தாத்தா கடையில இளந்தஜாம் வாங்கினேன் மச்சான்,அதுல இருந்த கொட்டையை தான் நான் முழுங்கிட்டேன்...”என்று தேன் நிலா கூற

அந்த கடைக்கு சென்று அதை வாங்கி வந்தான் மதிவேந்தன்.

“நிலா, நான் சொன்னத நீ நம்பல இல்லை,இப்ப நானும் இந்த கொட்டையை முழுங்குறேன், அப்பொழுதாவது நம்பு..”என்று கூறியவன் அந்த இளந்த ஜாமில்

இருந்த இளந்தங் கொட்டையை தேடி வெளியில் எடுத்தான்.

“மச்சான் வேணாம்..”என்று தேன் நிலா கூறுவதை கேட்காதவன் அதை முழுங்கினான்.

அதை பார்த்தவள் அப்பொழுதுதான் மதிவேந்தன் சொல்லுவதை நம்ப

ஆரமித்தாள்.

“அப்ப மரம் முளைக்காத மச்சான்..”என்று அவள் கேட்க

“முளைக்காது நிலா,அதுக்குனு கொட்டையை முழுங்க கூடாது..”என்று மதிவேந்தன் கூற

சரி என்பதை போல் தலையாட்டியவள் முழுமையாக அந்த பயத்திலிருந்து வெளியில் வரவில்லை என்றாலும் அவளது பயம் குறைந்திருந்தது.

அதன்பிறகு தான் வாங்கி வந்த இளந்த பொடியை ஆளுக்கு ஒன்றாக மூன்று பேரிடமும் தந்துவிட்டு சென்றான்.

அன்று மாலையே தனது அன்னையிடம் கேட்டு தெரிந்த பின்பு தான் தேன்நிலா முழுமையாக

அதை நம்பினாள்.அதன் பிறகே அந்த பயத்திலிருந்து வெளியில் வந்தாள்.

தேன்நிலா ஐந்தாவது முடிபதற்குள் அவள் நம்பும் பல விசயங்கள் விளையாட்டு தனமானவை என்று புரிந்துக் கொண்டாள்.

தேன்நிலா  இரண்டாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்தாள்.ஒருநாள் வெளியில் சென்றிருந்த கதிரேசன் வீட்டிற்கு வரும்பொழுது வீடே அமைதியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.