(Reading time: 18 - 35 minutes)

அவள் சொல்லி முடிக்கவில்லை அவள் சொன்னதில் எது அவர் காதில் விழுந்ததோ தாத்தாவின் உடல் சடக்கென அதிர்ந்தது

அத்தனை பேரும் நடுங்கியே போயினர். ஏனோ இன்னும் அதிக வேகத்தில் ஏறி ஏறி இறங்கியது அவரது மார்பு கூடு. யாரிடமும் அசைவே இல்லை. ஷங்கர் டாக்டரை அழைக்க ஓட எல்லாரும் தாத்தாவையே பார்த்திருக்க மருத்துவர் வருவதற்குள்ளாகவே மெல்ல மெல்ல அவர் சுவாசம் சீராக துவங்கியது போல் தோன்ற ஆரம்பித்தது அனுராதாவுக்கு.

அரை மணி நேரம் கடக்க அவரை பரிசோதிக்க வந்த மருத்துவருக்கே கொஞ்சம் ஆச்சர்யம்தான்.

‘வெரி குட். நல்ல முன்னேற்றம்’ என்றார் மகிழ்ச்சி கலந்த குரலில்

‘நிஜமாவா டாக்டர்?’ கூவினாள் அனுராதா.

‘நிஜமாதான்மா. உங்க குரல் எல்லாம் இங்கே கேட்டுட்டே இருக்கில்ல அதனாலேயே அவருக்கு கொஞ்சம் தெம்பு வந்திருக்கு. இனி நம்பிக்கையோட இருங்க’ புன்னகைத்தார் மருத்துவர்

அனுவின் கண்களில் சந்தோஷ மழை ‘நீ இப்போ கிளம்பு அனு’ இது பெரியப்பா ‘நாளைக்கு கல்யாணம் பண்ணிட்டு ஹரிஷோட வா’

‘நாளைக்கு உனக்கு கல்யாணமாமா? மருத்துவரே வியப்புடன் கேட்க அவள் மெல்ல தலை அசைக்க

‘எங்கே?’

‘கோவையிலே’

‘அப்படியா? சரி நீ கிளம்புமா. தாத்தா நல்லா ஆயிடுவார் நீ தைரியமா கிளம்பு. நீங்க மட்டும் அவரோட இருங்க சார் மத்தவங்க எல்லாரும் கிளம்பட்டும்’ இங்கே நடக்கும் கதை தெரியாமல் சொல்லிவிட்டு சென்று விட்டார் மருத்துவர்,

‘நான் மட்டும் போய்க்குவேன் பெரியப்பா. டாக்சி மட்டும் வர சொல்லுங்க. நான் சொன்னா ஹரிஷ் பாதி வழியிலே வந்திடுவான். நீங்க தைரியமாக இருங்க’ சொன்னாள் அவள் தாத்தாவை ஒரு நிம்மதி பார்வை பார்த்துக்கொண்டே.

நேரம் இரவு ஏழை தொட்டிருந்தது.

டாக்சி வாசலில் வந்து நிற்க கிளம்ப தயாரானாள் அனுராதா. அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் லோசனா. தனது பொருட்களை எல்லாம் தேடி எடுத்துக்கொண்டு அனு கிளம்ப, .தான் மடியில் போட்டு வளர்த்த மகள் அவளது திருமணத்திற்கு தன்னந்தனியாக கிளம்புவதை பார்க்க ஏனோ மனம் கேட்கவில்லை பெரியம்மாவுக்கு.

‘அனு... ‘பல நாட்களுக்கு பிறகு பெயர் சொல்லி அழைத்தார் அவளை. திடுக்கிட்டு திரும்பினாள் அனு.

‘இந்தா குங்குமம் வெச்சுக்கோ’ தனது கைப்பையிலிருந்து குங்குமத்தை தேடி எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டார் அவர். அவள் சட்டென அவர் பாதம் தொட்டு வணங்க

‘சந்தோஷமா இரு. பத்திரமா போயிட்டுவா. முடிஞ்சப்போ போன் பண்ணு’ அவர் அவள் கன்னம் தட்ட சந்தோஷ கண்ணீருடன் தலை அசைத்துவிட்டு பெரியப்பாவிடமும் ஆசி பெற்றுக்கொண்டு அவள் கிளம்ப

‘தாத்தாவுக்கு நல்லா ஆயிடுச்சுன்னா நான் காலையிலே ஓடி வந்திடுவேன்’ தைரியமா இரு சொன்னார் பெரியப்பா.

அவள் டேக்ஸியில் ஏற ‘நானும் உன் கூட வரேன்’ என்றான் ஷங்கர்.

‘நீ... நீயா.. வேண்டாம்.. அங்கே ஏதாவது ப்ராப்ளம் வரும்’ அனு தவிக்க

‘நீ என் தங்கச்சி அனு. உன்னை தனியா அனுப்ப என் மனசு கேட்கலை. அதுவும் ராத்திரி நேரத்திலே. நான் உங்க வீட்டுக்கெல்லாம் வரலை தாயே அந்த தெரு முனையிலே இறங்கிட்டு உன்னை அனுப்பி விட்டுடறேன். சத்தியமா. அப்பா சொல்லுங்கபா’ என்றபடியே அவன் பெரியப்பாவை பார்க்க அவருக்கும் அவளை தனியாக அனுப்ப மனமில்லாததால் கொஞ்சம் யோசனையுடனே தலை அசைத்தார்.

‘சரிமா.. அவன் உள்ளே வரமாட்டான். கூட வரட்டும்’ என்றார் அவர்.

அவன் அப்படி அங்கே சென்று எதுவும் பிரச்சனை கொடுக்க மாட்டான் என்று ஒரு நம்பிக்கை அவருக்கு. ஆனாலும் அவனை யோசனையுடனே பார்த்தது இன்னொரு ஜீவன். அவள் கீதா. அவன் மீது நம்பிக்கை இல்லை அவளுக்கு.

‘நானும் வரேன் அனு’ என்றாள் அவள் சட்டென. அப்படி அவன் ஏதும் பிரச்சனை கொடுத்தால் அதை தன்னாலே சமாளிக்க முடியுமென்ற நம்பிக்கை இருந்தது கீதாவுக்கு. சில நிமிட விவாதத்திற்கு பிறகு அவளும் ஏறி அமர்ந்துக்கொண்டாள் டேக்ஸியில்.

டாக்சி நகர ஆரம்பிக்க தன்னவனை அழைத்தாள் அனு

‘லவ் யூ அனும்மா..’ என்றது மறுமுனை

‘லவ் யூ ஹரிஷ்’ கிசுகிசுத்தாள் இவள் ‘நான் கிளம்பிட்டேன் ‘

‘அப்பாடா’ என்றான் நிம்மதி மூச்சுடன் ‘எப்போ வருவே?

‘இன்னும் டூ ஹவர்ஸ்லே..’

‘டூ ஹவர்ஸா?’ கேட்டவனுக்குள் சட்டென பொறி தட்டியது அவள் இத்தனை நேரம் எங்கிருந்தாள் என.

ஹேய்... என்ன அனும்மா.. சொல்லி இருக்கலாம் இல்ல. தாத்தாக்கு என்ன ஆச்சு? அவன் கேட்க வியந்துதான் போனாள் பெண்.

‘இப்போ பரவாயில்லை ஹரிஷ்’

‘நிஜமாவா. நான் வேணும்னா புறப்பட்டு வரவா?

‘இல்ல ஹரிஷ். நான் கிளம்பிட்டேன். வந்திடுவேன். இப்போ கொஞ்சம் நல்லா ஆயிட்டார்’

‘நிஜமா நல்லா இருக்கார் இல்ல’

‘நிஜமா நல்லா இருக்கார்’

சரி சீக்கிரம் வாடி பொண்டாட்டி. நான் வெயிட் பண்ணிட்டே இருக்கேன்’ அவன் சந்தோஷ குரலில் சொல்ல அவள் முகமும் மலர்ந்து போய் நின்றது. டாக்சி கோவை நோக்கி பறந்துக்கொண்டு இருந்தது.

2 or 3 epis to go

 

தொடரும்...

Episode 14

Episode 16

{kunena_discuss:1147}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.