கலையரசி படுத்ததும் உறங்கியிருந்தார். அழுத களைப்பில் உறக்கம் வெகு சீக்கிரமாகவே அவரை ஆட்கொண்டிருந்தது. ஆனால் அருள்மொழிக்கு தான் உறக்கம் வரவில்லை. எதையெதையோ நினைத்து படுத்திருந்தவளுக்கு தூக்கம் வர மறுத்தது என்றால், இதில் மகியின் அழைப்பு வேறு அவளை இன்னும் கோபப்படுத்தியிருந்தது.
பேச்சினால் தன்னை சமாதானப்படுத்திட முடியும் என்று நினைத்துவிட்டானா? அவனை மன்னிக்கவே முடியாது? அவன் செய்த காரியம் அப்படி? அவளது கல்யாணம் நல்லப்படியா நடக்குமா? என்ற ஒரு நிலைக்கு அவளை ஆளாக்கியதில் மகிக்கும் கண்டிப்பாக பங்கு உண்டு. இதற்கும் அவளுக்கு கல்யாணம் செய்து வைக்கச் சொல்லி அவள் கேட்டாளா? ஆனாலும் அப்படி ஒரு நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள்.
இப்போது அம்மாவை சமாதனப்படுத்தி சாப்பிட வைத்தாகிவிட்டது. இருந்தும் அவளுக்கு கல்யாணம் முடியும் வரை அவர் மனம் நிம்மதியை நாடாது. கணவன் இல்லாமல் அண்ணனின் ஆதரவில் இருப்பதால், நல்லப்படியாக இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடித்து விட வேண்டியது தான் அவரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு.
ஆனால் அருள்மொழிக்கு இன்னும் மேலும் படிக்க வேண்டும். ஒரு நல்ல வேலையில் சேர்ந்து கொஞ்சம் காலமாவது சம்பாதித்து மாமாவின் பார்த்தை குறைக்க வேண்டுமென்பது தான் அவளின் ஆசை. சிறு வயதிலிருந்தே அவரை பார்த்து வளர்ந்தவள் ஆயிற்றே, ஒற்றை ஆளாக இருந்து அவரின் சம்பாதியத்தில் தான் இந்த குடும்பமே இதுவரை ஓடியது. இரண்டு தங்கைகளின் திருமணம், அவரின் பிள்ளைகளோடு சேர்த்து தங்கையின் பிள்ளைகள் என நால்வரின் படிப்பு, தங்கையின் மகள்களையும் சேர்த்து மூன்று பேருக்கும் சீர் செய்து திருமணம். இது அனைத்துமே அவரின் பொறுப்பு தான், இதற்கும் அவர் தமிழ் பேராசிரியர், தனியாக ட்யூஷன் எடுத்து வேறு வழியில் பணம் சம்பாதிப்பதும் கூட கஷ்டம்.
இத்தனை கஷ்டத்திலும் அவள் மாமா என்றும் யாரிடமும் ஒரு முக சுளிப்பை காட்டியதில்லை. மகியும் இப்போது தான் தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறான். தான் மட்டும் ஒரு ஆணாக இருந்திருந்தால், மாமாவின் பார்த்தை தானும் கொஞ்சம் சுமந்திருக்கலாம், ஆனாலும் பெண்ணாக இருந்தால் என்ன? முடிந்தவரை கொஞ்சகாலம் வீட்டில் இருந்து மாமாவின் பாரத்தை குறைக்கலாமே என்ற நினைப்பு தான் அவளுக்கு எப்போதும் உண்டு.
ஆனால் அவளது நினைப்பை தவிடுபொடியாக்கி, அவளுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை செய்துவிட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளிய சுடரொளியை, அந்த அவனை நினைக்கும் போது அவளுக்கு எப்போதும் கோபம் தான் வரும். இதில் அந்த வரிசையில் மகியும் சேர்ந்துக் கொண்டது தான் அவளுக்கு மிகவும் வருத்தமாகவும் கோபமாகவும் இருந்தது.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.