(Reading time: 8 - 16 minutes)

கதவை திறந்தது திஷானி தான்.பார்த்தவுடனேயே இருவருக்குமே திருப்தி தான்.அத்தனை களையான முகம்..அதற்குள் அவளின் பேச்சு அவர்களை நடப்புலகிற்கு கொண்டு வந்தது..

சாரி ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுடேனா..சொல்லுங்க யாரை பாக்கனும்?”

அம்மா இருக்காங்களாம்மா?”

..இருக்காங்க ஆன்ட்டி வாங்க வாங்க அங்கிள்.”

ம்மா இங்க வாயேன்

உள்ளிருந்த மெலிந்த தேகமாய் நடுத்தர வயது பெண்மணி வெளியே வர சாரதா சிநேகமாய் புன்னகைத்தார்.

நாங்க நரேன் வீட்டு பக்கத்துல இருக்கோம்..”

நரேன்ஓ அந்த தம்பிங்களா.சொல்லுங்க என்ன விஷயம்.நா இப்போ எங்கேயும் வேலைக்கு போறதில்ல..”,,என்றார் தயக்கமாய்.

ம்ம் தெரியும் நாங்க வந்ததே வேற விஷயம் ..”,என ஓரமாய் நின்ற திஷானியை பார்த்தவர்,

இன்னைக்கு ஸ்கூல்க்கு போகலையாம்மா?”

இல்ல ஆன்ட்டி அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் லீவ் எடுத்துகிட்டேன்..”

..”,இருவரையும் மாறி மாறி பார்த்தவர் வரவழைத்த தைரியத்தோடு,

நாங்க உங்க பொண்ணு திஷானிய எங்க பையன் அபினவ்க்கு கேட்டு வந்துருக்கோம்..”

கேட்டவரின் முகம் மகிழ்ச்சியில் பிரகசித்தாலும் தன் மகளை கண்ட அடுத்த நொடி முகம் வாடிவிட்டது..

அம்மாவ ஏன்ம்மா முறைக்குற..எதுவாயிருந்தாலும் எங்ககிட்ட பேசு..அதுக்காக தான வந்துருக்கோம்..”

ஆன்ட்டி தப்பா எடுத்துக்காதீங்க..உங்களுக்கு யாரு என்ன சொல்லி இங்க வந்துருக்கீங்களோ எனக்கு தெரில..ஆனா என்னை நேர்ல பாத்த அப்பறமும் உங்க முடிவுல மாற்றம் இல்லைனா..ஒரே விஷயம் தான் இருக்க முடியும்..உங்க பையனுக்கும் என்னை மாதிரியே??சாரி தப்பா எடுத்துகாதீங்க..”

ம்ம் நீ கேக்க வர்றது புரியுதும்மா..ஆனா அப்படியெல்லாம் எதுவும் இல்ல..உன்னைபத்தி எல்லாம் தெரிஞ்சும் வந்ததுக்கு காரணம் என் பையனுக்கு உன்னை பிடிச்சுருக்கு அது மட்டும் தான்..”

முதன் முறையாய் திஷானியின் மனம் தடுமாற்றம் அடைந்தது..

என்னை ஒருத்தனுக்கு பிடிச்சுருக்கா..இவங்க சரியா தான் பேசுறாங்களா??”,அவளின் குழப்பமும் நியாயம் தானே..அவள் சொந்த பந்தங்களே அவள் திருமணப் பேச்சை அவள் அன்னை எடுத்தாலே என்னென்ன பேசுவார்கள் என்று அறிந்தது தானே..மீண்டும் சாரதாவின் குரல் அவளை நடப்பிற்கு அழைத்து வந்தது..

என் பையன் பேரு அபினவ்.சாப்ட்வேர்ல ப்ராஜெக்ட் மேனேஜரா இருக்கான்..உன்னை தற்செயலா பாத்துட்டு வந்து எங்ககிட்ட சொன்னான்..நரேன்ட்ட விசாரிச்சோம் எங்களுக்கும் திருப்தியா இருக்கவே சரி நேர்ல பாத்து பேசிடுவோமேனு வந்தோம்..”

ஆன்ட்டி..”

திஷானி ஒரு நிமிஷம் உள்ளே வாயேன்..மன்னிச்சுருங்க இதோ வந்துடுரேன்..”,என அவள் கைப்பிடித்து அவள் அன்னை உள்ளே அழைத்துச் சென்றார்..

என்னம்மா இது வந்துருக்கவங்க முன்னாடி..”

திஷானி நா உன்னை கையெடுத்து கும்பிட்டு கேக்குறேன்..இதுக்கு முடியாதுநு மட்டும் சொல்லிடாத.நீ சொன்னத கேட்டு இத்தனை நாள் நானா கல்யாண பேச்சை எடுக்காம தான இருந்தேன்.இப்போ தானா வந்த சம்மந்தத்தை நீ கெடுத்துடாத திஷானி.எனக்காக நீ இதை மட்டும் பண்ணு”,என மகளின் முன் கைகூப்பி நிற்க வெளியில் அவர்களையும் வைத்துக் கொண்டு அதற்கு மேல் விவாதம் பண்ண தோன்றாதவளாய்,

இப்போ என்ன பண்ணணும்ங்கிற

அடுத்த பத்து நிமிடத்தில் அழகிய பட்டுப் புடவையில் வெளியே வந்தவளைப் பார்த்தவர்களுக்கு இன்னுமாய் மனம் நிறைந்து போனது.

இங்க வந்து உக்காரும்மா..”

ஆன்ட்டி..”

இங்க பாரு திஷானி உன் தயக்கம் பயம் எல்லாமே எங்களுக்கு புரியுது.இதில் எந்த விதமான கட்டாயமும் கிடையாது.உன் சம்மதம் எங்களுக்கு ரொம்பவே முக்கியம்.என் பையனை பார்த்து பேசு அப்பறமா உன் முடிவ சொல்லு.என்ன சொல்ற?”

இத்தனை தன்மையாய் தெளிவாய் பேசுபவர்களை அவமதித்து பேச தோன்றவில்லை அவளுக்கு.சரி யென தலையசைத்து வைத்தாள்.

அவளின் நம்பரை பெற்றுக் கொண்டு அவர்கள் வெளியே செல்ல அவளின் தாய்க்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி.விளக்கின் முன் சென்று அத்தனை தெய்வதிற்கும் வேண்டினார்.மகனுக்கு போன் செய்து விஷயத்தை தெரிவிக்க அவனுக்குமே அக்காவிற்கு நல்ல காலம் பிறந்துவிடும் என்ற நம்பிக்கையில் உவகை கொண்டான்.

மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன் தாய் தந்தை முகத்தை பார்க்க அதிலிருந்து ஒன்றையும் கண்டு பிடிக்க முடியாமல் தனதறைக்குச் சென்று உடைமாற்றி வந்தான்.சாப்பாட்டு மேஜையில் மூவருமாய் இரவு உணவுக்காக அமர அபி செய்கையால் தாயிடம் என்னவாயிற்று என கேட்க அதை கவனித்த அவன்தந்தையோ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.