(Reading time: 16 - 32 minutes)

மேகலா தன் தட்டில் உணவினை போட்டு உண்ண தொடங்கினாள். "இந்த முறை நீ நிச்சயம் டைரக்டர் ஆகிடுவியாடா?"

வசந்த் மேகலாவை நோக்கினான். "என் திறமை மேல உனக்கு என்ன சந்தேகம்?"

"உன் திறமை மேல எல்லாம் நம்பிக்கை இருக்கு. நீ இரண்டு மூணு தடவை இப்படி தான் தயாரிப்பாளரை பாக்க போறேன், டைரக்டராக போறேன்னு சொன்ன, நடக்கல. அதான் கேட்டேன்"

வசந்த் என்ன சொல்வதென்று யோசித்தான்.  

"சொல்லுடா டைரக்டர் ஆகிடுவல்ல?"

"இந்த முறை நடந்தே தீரும்"

"நீ டைரக்டர் ஆகிட்டா எனக்கு என்னடா வாங்கி தருவ?"

"உனக்கு மோதிரம் வாங்கி தரேன் அக்கா"

"மாமா எனக்கு?"

"உனக்கு பொம்மை"

"அப்போ அமேலியா அக்காவுக்கு"

வசந்தின் மகிழ்ச்சி முகம் மாறியது.

"ஏய் நிலா! உன் ஸ்கூல் புத்தகத்தை எல்லாம் தயாரா எடுத்து வை" என்று அதட்டினாள் மேகலா. நிலா அமேலியாவை சொன்னது அவளுக்கு பிடிக்கவில்லை.  

"நாளைக்கு தானம்மா ஸ்கூல்"

"நீ இப்பவே எடுத்து வை. அப்புறம் காலையில இதை காணோம், அதை காணோம்னு என்னை தான் தொந்தரவு பண்ணுவ"

நிலா தனது புத்தகங்களைத் தேடத் தொடங்கினாள். மேகலா உண்டு முடித்துவிட்டு .மீதமிருந்த தனது சிறு சிறு வேலைகளையும் முடித்தாள். மணி பத்தை நெருங்கியது.

"அமேலியா வரஞ்சிட்டியா?" என்று நோட்டுப் புத்தகத்தை வாங்கி புரட்டிப் பார்த்தாள். இன்னும் நிறைய படங்கள் பாக்கி இருந்தன. "ஐயோ! இது எல்லாம் வரைய இன்னும் நேரமாகும் போலயே"

"நீ போய் தூங்கு அக்கா டயர்டா இருப்ப"

அமேலியாவையும் வசந்தையும் தனியாக விட்டுவிட்டு அவளால் எப்படி உறங்க முடியும். தூக்கம் அவள் கண்களை தட்டியது. 'என்ன செய்வது? என்ன நடந்துவிட போகிறது? நாம இங்கே தானே இருக்கோம். கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்'

"நிலா வாடி தூங்கலாம்"

"என்னுடைய புக்ஸ் நிறைய காணோம். நீ போ, நான் தேடுறேன்"

நிலா இங்கிருப்பதும் சரி தான் என எண்ணிய மேகலா, தன் அறையை நோக்கி நடந்தாள்.

நிலா தன் புத்தகங்களை கட்டில், சோபா, டைனிங் டேபிள் அடியில் என இருக்கும் சந்து பொந்துகளில் தேடி எடுத்து வந்தாள். ஆயினும் ஒரு நோட்டு புத்தகம் குறைந்தது.  

"மாமா என் சைன்ஸ் நோட்டு புத்தகத்தை பாத்தியா?"

"இது தான் எனக்கு வேலையா? போடி"

நிலா எங்கு தேடியும் அந்த நோட்டு புத்தகம் கிடைக்கவில்லை. மாடியில் ஏறி வசந்தின் அறைக்கு சென்றாள். படுக்கையின் ஓரத்தில் நோட்டு புத்தகம் இருந்தது.  

"மாமா மாமா" என்று கத்தியபடி படியில் இருந்து இறங்கினாள்.

"என்ன?"

"உன் ரூம்ல தான் இந்த நோட்டு புத்தகம் இருந்துச்சு. ஏன் திருடி வச்சிருக்க?"

"அதான் கிடைச்சிடுச்சுல கிளம்பு"

"நான் சைன்ஸ் டெஸ்ட்ல நல்ல மார்க் வாங்கினது பிடிக்காம ஒளிச்சு வச்சிருக்க"

"நீ? நல்ல மார்க்? நம்பிட்டேன்"

"நம்பலான நீயே பாரு" என நோட்டுப் புத்தகத்தை திறந்து தான் வாங்கிய மதிப்பெண்ணை வசந்திடம் காட்டினாள்.

"பாரு"

"பாத்து எழுதி மார்க் வாங்கிருப்ப" என அடுத்த பக்கத்தை எதேச்சையாக திருப்பியபோது அமேலியாவின் ஓவியம் இருந்தது.

நிச்சயதார்த்தம் மட்டுமே ஆகி இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற உண்மையை அந்த ஓவியம் வசந்திற்கு உணர்த்தியபோது, அவனது இதயத்துடிப்பு எகிறியது. திடீரென ஏற்பட்ட சந்தோசம் அவனை திக்குமுக்காட வைத்து, சோபாவில் இருந்து குதித்து எழுந்தான். நோட்டுப் புத்தகத்தோடு சென்று அமேலியாவின் அருகில் இருந்த நாற்காலியில்  அமர்ந்தான். அமேலியா திடுக்கிட்டு வசந்தையும் அவனது கையிலிருந்த தனது ஓவியத்தையும் பார்த்தாள். இருவரின் விழிகளும் சந்தித்தன.

"உனக்கு கல்யாணம் ஆகலையா?" சைகையில் கேட்டான்.

"இல்லை" என்பது போல் தலையசைத்தாள்.

"ஓ காட்! கை கொடு" என்று அவள் கையைப் பிடித்து குலுக்கினான்.

அமேலியா வெட்கப்பட்டாள்.

"ஆமா, இதென்ன? I LCWF UCY" வசந்த் குழம்பினான். "என்னவோ ட்ரை பண்ணிருக்க. உன்கிட்ட திரும்பவும் ஒண்ணு சொல்லணும். ஐ லவ் யூ!"

அமேலியாவின் வெட்கம் அதிகமாகியது.

டைனிங் டேபிள் அடியில் இருந்து வெளியே வந்தாள் நிலா.

தொடரும்...

Episode # 48

Episode # 50

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.