Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (7 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதி - 5.0 out of 5 based on 7 votes

ஆனால் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல், எந்த இலக்குமில்லாமல் ஒரு சில மணி நேரங்கள் காரை எங்கெங்கோ ஓட்டிக் கொண்டு சுற்றியவன், விடிந்து வெளிச்சம் வர தொடங்கவும் வேறு வழி இன்றி வீட்டை நோக்கி சென்றான்.  

அவன் வீட்டினுள் நுழைந்த போது அவனின் எதிரே தன் ட்ரேட்மார்க் புன்னகையுடன் வந்த சுபாஷினி,

“என்ன ஆகாஷ் இது... கல்யாண மாப்பிள்ளை எங்கே போயிட்ட? இப்படியா இந்த டைம்ல நைட் எல்லாம் வேலை செய்றது??” என்றார்.

அம்மாவின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சி அவனை என்னவோ செய்தது...

“சரி, சரி.. நீயே டையர்டா வந்திருப்ப, உன்னை போய் நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன் பார்... போ, போய் ரெஸ்ட் எடு... நானும் அப்பாவும் எல்லா வேலையும் பார்த்துக்குறோம்... பூக்கு சொல்லிட்டாரான்னு தெரியலையே... ஜோதி கிட்ட நகை பத்தியும் பேசனும்...”

“அம்மா...”

“என்ன கண்ணா?”

“இந்த கல்யாணம் நடக்காதும்மா... வேண்டாம்... வேலையை எல்லாம் நிறுத்திடுங்க...”

“என்னது...?” என்று அதிர்ந்த சுபாஷினி, உடனேயே பழைய புன்னகை தோன்ற,

“ஹேய், ஹேய் அம்மாட்ட விளையாடுறீயா???? நல்ல பையன்...!!! இதுல எல்லாம் விளையாடக் கூடாது... போ, போய் ரெஸ்ட் எடு...” என்றார்.

“இல்லம்மா... நான் சீரியஸா சொல்றேன்... இந்த கல்யாணம் வேண்டாம்...”

“என்னப்பா... எந்த நேரத்துல, என்ன பேசுற?”

“எனக்கு... என்... மனசில... வேற ஒருத்தி... இருக்காம்மா... இந்த கல்யாணம் வேண்டாம்...”

அடுத்த வினாடி அவனின் கன்னம் தீ பட்டது போல எரிந்தது.

அம்மா அவனை அறைந்திருப்பது புரியவே அவனுக்கு சில பல வினாடிகள் தேவைப்பட்டது!

Episode # 01

Go to Vaanum mannum katti kondathe story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதிDevi 2018-08-19 18:00
Interesting Prologue,. idhu kadhai aarambama? illai naduvil varuma .. :Q: waiting
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதிsaaru 2018-07-20 14:17
Nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதிBindu Vinod 2018-08-02 18:25
Thanks pa Saaru :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதிsasi 2018-06-17 10:58
வாழ்த்துக்கள் மேம் கதையின் முன்னுரையே சிறப்பாக இருக்கிறது கதையும் அமர்க்களமாகவே இருக்கும் :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதிBindu Vinod 2018-07-18 10:29
Thanks pa Sasi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதிNanthini 2018-06-17 08:22
Prologue ellam koduthu kalakureenga :-) Muthal athiyaaythai padika arvamaaga irukkirathu.

Vazhthukkal Binds.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதிBindu Vinod 2018-07-18 10:29
:-) Recent time'la niraiya Mary Higgins Clarke novels padichen Nands. Avanga stories ellathileyum ippadi oru prologue iruku. Athai padikum pothu ennanu oru curiosity varum.
Matha series'leyum ippadi koduthiruken but prologue'nu sonnathu illai. Antha vagaiyila ithu first time.

Eppo kadaisiya unga wishes'oda story start seithenu theriyalai. Intah time kalakiduvom :D

Thank you so much :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதிmadhumathi9 2018-06-17 08:12
Mudhal page padikkum podhu kathai eppadi poguthu ena ennam thondriyathu, irandaavatbu page padithavudan puriya thodangiyathu.nice epi.nalla thodakkam (y) :thnkx: :clap: :GL: 4 next epi. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதிBindu Vinod 2018-07-18 10:27
Thanks pa Madhumathi :-)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 20 Sep 2019 18:40
மாலையில் வீட்டை அடைந்தப் போது ஆகாஷின் மனம் பாறாங்கல்லாய் கனத்துக் கொண்டிருந்தது.

சினேகாவிடம் நேராக பேசும் அவசியம் இல்லாமல் இருக்க தான் அருணை நடுவில் இழுந்து வந்திருந்தான்.

அன்று ஆபிசில் இருந்து கிளம்புவதற்கு முன் சினேகாவின் வேலை பற்றி அருணிடம் கேட்டு தெரிந்துக் கொண்டிருந்தான்.

சினேகா அவன் எதிர்பார்த்ததை விட வேகமாக வேலையை செய்திருந்தாள்.

நாளை அருண் ‘ரெவியூ’ செய்து எல்லாம் சரியாக இருந்தால்...

“ஆகாஷ், காருல உட்கார்ந்து என்ன செய்துட்டு இருக்க? உனக்காக தான் வெயிட் செய்துட்டு இருக்கோம், டைம் ஆச்சு, கிளம்பனும்...
*********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 14 Sep 2019 08:06
அவளுடன் நடந்துக் கொண்டிருந்த மகாலக்ஷ்மி எதுவோ பேசுவது காதில் விழுந்தாலும் சினேகாவின் கருத்தில் பதியவில்லை.

அவளின் மனம் இன்னும் ஆகாஷின் அறையிலேயே தங்கி இருந்தது.

ஆகாஷின் அந்த பார்வை அவளை இப்போதும் என்னவோ செய்துக் கொண்டிருந்தது...

அந்த பார்வையின் பொருள் என்ன???

அவள் மனம் சொன்ன விளக்கத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

ஆகாஷுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பது அவளுக்கும் தெரியும்... ஆனாலும் அவனை தவறாக நினைக்க அவளுக்கு மனம் வரவில்லை...

**************

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-23
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 06 Sep 2019 20:07
“ஐ ஆம் ரியல்லி சாரி சார். அப்பாக்கு ரொம்ப சீரியஸ்ன்னு தெரிஞ்சப்புறம் போகாம இருக்க முடியலை”

ஆகாஷ் யோசனையுடன் பிரபாகரை பார்த்தான்.

“இந்த டெட்லைனை கவனிக்காம விட்டது தான் இப்போ பிரச்சனை சார். கவர்ன்மென்ட் நார்ம்ஸ் படி ப்ளான் அப்ரூவல் வாங்கின அஞ்சு வருஷத்துல டெவலப்மன்ட் ஆரம்பிக்கனும்... இல்லைனா திரும்ப அப்ரூவல் வாங்கனும்... அதுல நிறைய தலைவலி வர சான்சஸ் இருக்கு... இந்த ஃபைல்ல எல்லாமே ரெடியா இருக்கு ஆனா நான் எப்போ திரும்ப வருவேன்னு சொல்ல முடியலை சார்...”

ஆகாஷ் நெற்றியை தேய்த்துக் கொண்டான்...

**************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-22
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 23 Aug 2019 20:53
“ரொம்ப தேங்க்ஸ்ங்க அக்ஷரா”

காரின் கதவை கையில் பிடித்தபடி, உள்ளே இருந்த அக்ஷராவிடம் சொன்னாள் சினேகா.

“இன்னும் இந்த தேங்க்ஸ் ஃபார்மாலிட்டி எல்லாம் வேண்டாம் சினேகா. அப்படியே தேங்க்ஸ் சொல்லனும்னாலும் நான் தான் உங்க கிட்ட சொல்லனும். நேத்தைக்கு எனக்காக ஷாப்பிங் வந்ததுக்கு, இன்னைக்கு லீவ் போட்டதுக்கு, எல்லாத்துக்கும் தேங்க்ஸ்” என்று தன் பாணியில் சொன்னாள் அக்ஷரா.

சினேகா பதில் சொல்ல வாயை திறக்கவும், அவளை தடுத்து விட்டு மீண்டும் பேசினாள் அக்ஷரா.

************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-21
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 09 Aug 2019 19:28
சாலையில் பார்வையை வைத்திருந்த ஆகாஷ், முதலில் அம்மாவின் பார்வையை கவனிக்கவே இல்லை. அவனின் மனம் சினேகாவையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது.

இன்று முழுவதும் அவனின் பக்கத்திலேயே இருந்தும், வெகு தூரத்தில் இருக்கிறாள் அவள்...

ட்ராபிக் சிக்னலில் காரை நிறுத்தி விட்டு, ஒரு பெருமூச்சுடன் திரும்பியவன், அப்போது தான் அம்மாவின் கண்கள் தன் பக்கம் இருப்பதைக் கவனித்தான்.

“என்னம்மா?”

**********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-20

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top