(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 34 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

தியும், ராஜாவும் உள்நுழையும்போது அந்த அறையே மிக அமைதியாக இருந்தது.... அவர்களை திரும்பிப் பார்த்த சாரங்கன் ராஜாவின் தலை மற்றும் கையிலிருந்த கட்டுகளைப் பார்த்து பதறி அடித்து எழப் பார்க்க, மதி அவனை உட்காருமாறு சைகை செய்துவிட்டு பின்னிருந்த வரிசையில் சென்று ராஜாவுடன் அமர்ந்து கொண்டான்.... ராஜா விட்டான் என்ற செய்தியை ஏற்கனவே பாரதிக்கு மதி சொல்லியிருந்த காரணத்தால் அவள் இவர்கள் புறம் திரும்பாமல் நரேஷின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்....

நரேஷின் முகத்தைத்தான் மதியும் அறைக்குள் நுழைந்ததிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான்.... ராஜாவைப் பார்த்து அவன் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை... இப்பொழுது மதி குழம்பிவிட்டான்.... இவன் கடத்தவில்லை என்றால் இது யார் வேலையாக இருக்கும்... ஒரு வேளை நாராயணனோ என்று யோசித்தபடியே வழக்கை கவனிக்க ஆரம்பித்தான்...

கட்டிலைத் திறந்தவுடன் அங்கிருந்த அனைவரும் என்ன இது என்பதுபோல் அதிர்ச்சியுடன் பார்க்க ஆரம்பித்தார்கள்....

அந்தக் கட்டிலினுள் இருந்தவை முக்கால்வாசி செக்ஸ் torture செய்யும் கருவிகள், அதைத் தவிர நிறைய கயிறுகள், ஆண்கள், பெண்கள் அணியும் கவர்ச்சிமிகு ஆடைகள்.... போதை மருந்து பொருட்கள், மற்றும் இன்ஜெக்ஷன் போடும் ஊசிகள்...

இதிலேயே நரேஷ் எப்பாடிப்பட்டவன் என்பது ஓரளவிற்கு புலப்பட, அடுத்த அடுத்த காட்சிகள் இன்னும் அவனை மோசமானவனாக காட்டியது...

ஏகப்பட்ட cdக்கள் அனைத்தும் அவன் பெண்கள், குழந்தைகளை வைத்து ஆபாசமாக எடுத்தது....

ஒரு ஒரு காட்சியாக வர வர நரேஷின் மனைவியால் அதைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.... இத்தனை ஆண்டுகளாக இப்படிப்பட்ட ஒருவனுடனா வாழ்ந்து வந்தோம் என்று மனதிற்குள் வெடித்து அழுதாள்...

அடுத்ததாக பாரதி அந்தக் கட்டிலின் உள்ளிருந்த சில புகைப்படங்களையும், cdக்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார்...

அந்த புகைப்படங்கள் அனைத்தும் ஆறு வயதிலிருந்து முப்பது வயதிற்குள் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை மிக மிக ஆபாசமான முறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.... cdக்கள் அனைத்தும் அவர்களை செக்ஸ் டார்ச்சர் செய்யும்போது எடுக்கப்பட்டதால் அதை தனியாக பார்க்கும்படி பாரதி நீதிபதியிடம் வேண்டுகோள் விடுக்க, நீதிபதி அதை ஏற்றுக்கொண்டார்...

“கணம் நீதிபதி அவர்களே, நீங்கள் இதுவரை பார்த்தது அனைத்தும் இந்த நரேஷின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள்தான்.... நான் அங்கு சென்று வந்த பின் வருமானவரித்துறையினர் சோதனையிட்டு இதைப் போல் மேலும் பல cd மற்றும் போட்டோக்களை கைப்பற்றியுள்ளனர்.... அதற்கான ஆதாரம்....”, வருமான வரித்துறையினர் அளித்த ஆவணங்கள் பற்றிய அறிக்கையை நீதிபதியிடம் அளித்தாள் பாரதி....

“கணம் நீதிபதி அவர்களே, இதை நான் ஆட்சேபிக்கிறேன்... எதிர்கட்சி வக்கீல் சமர்ப்பித்த cdக்கள் என் கட்சிக்காரருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டது... ஆகவே அதிலிருக்கும் விஷயங்களை முழுமையாக அறிந்துகொள்ள அவருக்கு பூரண உரிமை இருக்கிறது... ஆகவே அதை அவர் முன்னிலையிலேயே தாங்கள் பார்க்க வேண்டுகிறேன்...”

“மன்னிக்க வேண்டும் யுவர் ஹானர்... அதில் பல இளம் பெண்களின் அந்தரங்கம் சம்மந்தப்பட்டு  உள்ளது.... ஆகவே இத்தனை பேர் உள்ள சபையில் அதை ஒளிபரப்ப வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...”

நீதிபதி அம்பலவாணரிடம் தன்னுடன் சேர்ந்து நரேஷ் சார்பாக அவர் அந்தக் காணொளியை பார்க்கலாம் என்று கூறி வழக்கை மறுநாளிற்கு ஒத்திவைத்தார்.....

கோர்ட் அறையில் இருந்த அனைவரும் கலைய ஆரம்பித்தனர்....  நரேஷின் மனைவி கண்களில் நீர் வடிந்தபடியே அவனை பார்த்தபடி இருந்தாள்....

சாரங்கன் பாரதியிடம் ராஜா அமர்ந்திருப்பதை காட்ட, அவனருகில் விரைந்தாள் பாரதி....

“ஹே ராஜா என்னாச்சு... எப்படி இப்படி அடிப்பட்டுச்சு...”, அவனின் காயங்களை பார்த்து பாரதி பதைபதைக்க...

“ஒண்ணும் இல்லைம்மா... சின்ன அடிதான்...”

“தலைலேர்ந்து கால் வரைக்கும் எல்லா இடத்துலயும் கட்டு போட்டிருக்கு... இது உங்களுக்கு சின்ன அடியா... ஒழுங்கா என்ன ஆச்சுன்னு சொல்லுங்க...”

ராஜா அங்கு நடந்ததைக் கூற தன்னால்தான் இப்படி ஆகிவிட்டதாக பாரதி வருந்த ராஜா அவளை ஆறுதல்படுத்த சாரங்கனும், மதியும் இவர்களை சிரித்தபடியே பார்த்திருந்தார்கள்...

“எத்தனை உருக்கமா உருகிப் போய் பேசிட்டு இருக்கோம்... என்ன சிரிப்பு வேண்டி இருக்கு bad fellows....”, பாரதி காய சாரங்கன் இன்னும் பெரும் குரலில் சிரித்தான்....

“டேய் சப்பாணி வேணாம்... வெறுப்பேத்தாத.... இது சோக சீன்... சிரிச்சுட்டு இருக்க...”

“பக்கி... அங்க பாரு ராஜாவே நீ பண்ற அலம்பல பார்த்துட்டு சிரிச்சுட்டு இருக்கார்... எங்களை சொல்லாத...”

“என்ன ராஜா நீங்க நான் எவ்ளோ பீலிங்க்ஸ்ல இருக்கேன்... இந்த தடிமாடு கூட சேர்ந்துட்டு சிரிக்கறீங்க...”

“I’m ok பாரதி... சின்ன சின்ன காயம்தான்... சீக்கிரம் ஆறிடும்.... டோன்ட் வொர்ரி....”

“எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிப்போகும்.... ஆனா உனக்கு ஒரு காயம்ன்னா அது உன் உடம்பு தாங்குமா.... அபிராமி அபிராமி...  ச்சே ச்சே ராஜா ராஜா....”, சாரங்கன் கமல் வாய்ஸ்ல் கலாய்க்க, பாரதி அவன் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள்....

“ப்ச் என்ன பாரதி இது... தலைல அடிக்காத...”, ராஜா பாரதியைக் கடிய சாரங்கன் அவளை மேலும் வெறுப்பேற்றினான்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.