(Reading time: 9 - 17 minutes)

“ராஜா இதுல டாக்டர் கொடுத்த மருந்து இருக்கு... போட்டுட்டு ரெஸ்ட் எடுங்க... ரெண்டு நாள் மெடிக்கல் லீவ் கொடுத்திருக்காங்க... அதனால ப்ளீஸ் ரெஸ்ட் எடுங்க....”

“தேங்க்ஸ் மதி சார்... காலேஜ்ல எக்ஸாம் டைம்... ஸோ லீவ் எடுக்கறது கஷ்டம்... அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்டுவேன்....”

“இல்லை ராஜா... இந்தக் ரெண்டு கேஸ் முடியறவரை நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.... மயூரி வீட்டு மேல கை வைக்க முடியாததால அவங்க டார்கெட் நீங்களாத்தான் இருப்பீங்க...”

“புரியுது மதி சார்... பாரதி இந்த கேஸ்ன்னு இல்லை... இன்னும் எதிர்காலத்துல இதைப்போல நிறைய கேஸஸ் வரலாம்... அவ எனக்காக பார்த்துட்டு அதை எல்லாம் எடுக்காம இருக்க முடியாது... அதே மாதிரி எனக்கு என்ன ஆபத்து வருமோன்னு பயந்துட்டு நானும் வீட்டுலையே இருக்கறதும் நடக்காது... அதனால நான் இனி ரொம்ப கவனமா இருப்பேன்...”

“ராஜா பேசாம ஆள் மாதிரி கராத்தே, டேக்வாண்டோன்னு உங்க ஆள் மாதிரி கத்துக்கோங்க...”

“இது என்ன சினிமாவா மதி சார்... ஒரே சீன்ல பயந்த சுபாவம் உடையவன் அப்படியே மாறி பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிக்க... இப்போதான் ஜன்னல் வழியா வெளிய குதிக்க ட்ரை பண்ணி இருக்கேன்... மத்ததுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச வருஷம் ஆகும்....”

“ஜோக்ஸ் அபார்ட்... ராஜா இந்த கேஸ் முடியறவரை உங்களுக்கு ஷேடோ protection கொடுக்க ஏற்பாடு பண்ணி இருக்கேன்... ஸோ நீங்க கவலைப்படாம இருங்க....”

“மதி சார்... டோன்ட் வொர்ரி... நான் ராஜா வீட்டுலதான் அவர் கூட தங்கப்போறேன்... அதே மாதிரி பாரதி மயூரி வீட்டுல இருக்கப்போறா... ஸோ ஒண்ணும் பிரச்சனை இருக்காது... இந்த வாரத்துக்குள்ள ரெண்டு கேஸும் முடிவுக்கு வந்தா நல்லா இருக்கும்...”, சாரங்கன் சொல்ல, அதை ஆமோதித்தபடியே அனைவரும் வெளியில் சென்றார்கள்...

மறுநாள் காலையில் கோர்ட் கூட அனைவரும் அவரவர் இருக்கையில் அமர, நரேஷ் கூண்டிற்கு அழைத்து வரப்பட்டான்...

திரு. அம்பலவாணர் அவர்களே... நீங்கள் உங்கள் கட்சிக்காரர் சார்பாக ஏதேனும் தெரிவிக்க வேண்டுமா...”

“மாண்புமிகு நீதிபதி அவர்களே.... நரேஷ் ஒரு புகழ் பெற்ற நடிகர்... அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட பலர் இருக்க வாய்ப்புள்ளது... அவர் மீது களங்கம் சுமத்த வேண்டும் என்றேக்கூட வேறு யாரேனும் அவரின் வீட்டில் அந்தக் காணொளிகளை வைத்திருக்க வாய்ப்புள்ளது.... ஆகவே இதை நீங்கள் தீர விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்....”, நரேஷ் தப்பு செய்திருப்பான் என்று தெரிந்தபின்னும் வாங்கிய பணத்திற்கு வஞ்சம் வைக்காமல் வாதாடினார் அம்பலவாணர்...

“மாண்புமிகு நீதிபதி அவர்களே, திரு. அம்பலவாணர் அனைத்து காணொளிகளையும் பார்த்தாரா என்று தெரியவில்லை... அதில் ஒரு சிலதில் இருப்பது இந்த நரேஷ்... திரைப்படங்களில் நடிப்பதை விட இதில் உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருந்தார்....”

“வெறும் காணொளி மட்டுமே ஒருவரின் தன்மையைக் கூறாது... அது மார்பிங்காக கூட இருக்க வாய்ப்புள்ளது....”

“மறுபடி இதையே சொல்லி இந்த வழக்கை இன்னும் எத்தனை நாட்களுக்கு இழுக்க வக்கீல் முயல்கிறார் என்று தெரியவில்லை... ஏற்கனவே நரேஷ் அந்த CDக்களை வெளிநாட்டில் விற்றதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பித்துள்ளோம்... அதுவும் தவிர பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக ராணி புகார் அளித்துள்ளார்...”

“இது எல்லாம் ஏன் ஜோடிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது.....”

“திரு. அம்பவாணர் அவர்களே... நரேஷ் அந்த வெளிநாட்டினருடன் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகத் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளான்.... அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.... அங்கு ஏலேக்ட்ரோனிக்ஸ் கடை என்ற பெயரில் ஆபாச வீடியோ விற்பனைதான் நடந்து வருகிறது... அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம்...”

“இந்த நரேஷால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஏராளம் பேர்... ராணி விஷயம் வெளியில் தெரிந்தது... நம் நாட்டில்தான் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விட, அந்தக் கொடுமைக்கு ஆளானவர்கள்தானே அதிக கொடுமைக்கு ஆளாகிறார்கள்... இந்த சமூகம் அவர்களைத்தானே ஒழுங்காக இருக்கும்படி பேசுகிறது... ஆறு வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டபோது, அவளின் பெற்றோர் அவளுக்கு ஒழுங்காக உடை அணிவிக்காத காரணத்தால்தான் அந்த சம்பவம் நடந்தது என்று அறிவுபூர்வமாக பேசிய சமூகத்தில்தானே நாம் வாழ்கிறோம்... இந்த மாதிரி பழி சொல்லிற்கு பயந்தே நரேஷ் விஷயத்தில் நிறைய பேர் வெளியில் சொல்லவில்லை...”

“அதற்கு என்ன ஆதாரம்...”, அம்பலவாணர் இடை புகுந்தார்...

“கண்டிப்பாக எங்களிடம் அதற்கு ஆதாரம் இல்லை அம்பலவாணர் அவர்களே... எங்களுக்கு தொலைபேசி வழியாகவும், கைப்பேசி வழியாகவும் நரேஷைப் பற்றி கூறினார்களே தவிர, யாரும் தைரியமாக புகார் கொடுக்க வரவில்லை... நேரில் வந்த ஓரிருவரும் தங்கள் பெயர் வெளியில் வரக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார்கள்... இவர்கள் வெளியில் வரவேண்டும் என்றால் நம் சமூகம் மாறவேண்டும்... வன்கொடுமைக்கு ஆளானவர்களை தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்று இல்லை... அவர்களை மேலும் மேலும் பேசி காயப்படுத்தாமல் இருந்தாலே போதும்... கணம் நீதிபதி அவர்களே... நாங்கள் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களின் படி நரேஷிற்கு உச்சபட்ச தண்டனை வழங்க அவனால் பாதிக்கப்பட்ட அனைவரின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்....”, பாரதி தன் தரப்பு வாதங்களை முன் வைத்துவிட்டு அமர, நரேஷ் அவளை பார்த்து முறைத்தான்....

நீதிபதி குனிந்து தீர்ப்பு எழுத ஆரம்பிக்க,  டுமீல் என்று துப்பாக்கி சுடும் ஓசை அனைவரின் காதையும் கிழித்தது....

தொடரும்

Episode 33

Episode 35

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.