(Reading time: 13 - 25 minutes)

“எனக்கும் ஷ்யாம் அண்ணாதான் எல்லாம். சோ நானும் முன்னாடி நிப்பேன். அண்ணா நான் சொல்றது கரெக்ட் தானே”

ஷ்யாம் சிரித்துக் கொண்டே “சரிதான்” என்று கூற, இவர்களின் கலாட்டாக்களில் மித்ராவின் முகம் மெல்ல சிவக்க ஆரம்பித்தது. அதை கவனித்த மித்ராவின் பாட்டி மிகவும் சந்தோஷமாகினார்.

“முரளி, நாளைக்கு காலையில் கடை திறந்ததும் முதலில் ஷ்யாமிற்கு “ என்றவர் “இல்லை. மாப்பிள்ளைக்கு மோதிரம், செயின் ரெண்டும் வாங்கி வா. அவருக்கு நாம் கொடுக்க வேண்டிய ட்ரெஸ்சும் எடுத்து விடு”

“பாட்டி. நான் உங்களுக்கு ஷ்யாம் தான். அது எல்லாம் எதற்கு பாட்டி ? ‘ என்றான்.

அப்போது ஜகன்னாதனும் “ராம், இதுவரை வேறு. சூர்யா க்ரூப்ஸ் எம்.டி. கல்யாணம் என்றால் எல்லோரையும் கூப்பிடனுமே. என்ன செய்ய போகிறாய்?”

அவர் கேட்கும் முன் ராம் திட்டம் முழுமையும் தயார் செய்து விட்டான்.

“ஷ்யாம், உன் பிரெண்ட்ஸ் யாரும் வெளியூரில் இருந்து வர வேண்டி இருக்கிறதா?”

“அப்பா, அது “ என்று ஒரு நிமிடம் தயங்கியவன் “இல்லை. எல்லோருக்கும் தீடிர் கல்யாணம் என்று காரணம் எப்படி சொல்வது “ என்று கேட்டான்.

“பாட்டி, தாத்தா விருப்பம் என்று சொல்லிவிடு. “

“சரிப்பா. என் பிரெண்ட்ஸ் லோக்கலில் உள்ளவர்கள் போன் செய்தால் வந்து விடுவார்கள். மற்றவர்களை பின்னாடி பார்த்துக் கொள்ளலாம்.”

“குட் “என்ற ராம் “அப்பா , சொந்தக்காரர்களை பொறுத்தவரை ஏற்கனவே இருக்கிறார்கள். ஓரளவு முக்கியமான பிசினஸ் பீபிள்க்கு அழைப்பு கொடுத்து இருக்கிறோம். மீதி உள்ளவர்களுக்கு போனில் அழைக்க சொல்லி என் பி.ஏ விடம் சொல்லி விடுகிறேன். நம்ம ஸ்டாப்ஸ்க்கு நாளைக்கு கம்பெனி செலவில் மதிய விருந்து ஏற்பாடு செய்து விடுவோம். இந்த வாரக் கடைசியில் அவர்களை நாம் குடும்பத்தோடு அழைத்து வரவேற்பு வைத்து விடுவோம்” என்று ஏற்பாடுகளை பற்றி கூறினான்.

எல்லோரும் சம்மதிக்க, “இப்போ இங்கே என்ன என்ன மாற்றம் செய்யணும்?” என்று கேட்டுக் கொண்டே மைதிலி பக்கம் திரும்ப, அவள் ஏற்கனவே தன் உதவியாளரை அழைத்து

“வாசலில் உள்ள டிஜிட்டல் போர்டில் ஷ்யாம் பேர் , போட்டோ போட்டுடுங்க. அதோட வெல்கம் போர்டுலே சூர்யா க்ரூப்ஸ் ஜகந்நாதன், கௌசல்யா பேர் மாத்திடுங்க. ஸ்டேஜ் டிசைன் இருக்கட்டும். அதில் அங்கே அங்கே ஆர்கிட் பூக்கள் மட்டும் சேர்க்க ஆர்டர் செய்துடுங்க. மற்றவை எல்லாம் அப்படியே இருக்கட்டும். மெனு மட்டும் நாளைக்கு காலையில் ஹெட் குக் வந்து என்னை பார்க்க சொல்லிடுங்க”

என்று பரபரப்பாக உத்தரவிட்டுக் கொண்டு இருக்க, கேட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கும் கல்யாண பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.