(Reading time: 13 - 25 minutes)

“நீ என்ன சொன்னியோ அதுதான் உன் பிரச்சினை. ஆனால் ஆரம்பத்தில் உன்னை நாங்க ஷ்யாம், அஷ்வின் படிக்கும் ஸ்கூலில் தான் போட்டோம். மிஸ் சொன்னதை செய்யலைன்னு திட்டினது எல்லாம் வச்சு நீ ஸ்கூல் போக மாட்டேன்னு அடம் பிடிச்ச. அப்போ நாங்க உன்னை சமாதானபடுத்தி ஸ்கூலுக்கு அனுப்ப, நீ அங்கே மயக்கம் போட்டு விழுந்துட்ட. அப்போ உனக்கு கை கால் நடுங்கினதாவும் சொன்னாங்க. அதில் ஸ்கூலில் பயந்து உன்னை டி.சி. வாங்கிக்க சொல்லிட்டாங்க. நாங்க வேறே ஸ்கூலில் கேட்டப்போ, அவங்க பழைய ஸ்கூலில் என்ன பிரச்சினைன்னு கேட்டப்போ, நாங்க சொன்னத கேட்டு அங்கே விசாரிக்க, அங்குள்ள டீசெர்ஸ் உன்னை பற்றி என்ன சொன்னாங்களோ, இவங்களும் சேர்க்க மாட்டேன்னு சொல்லிடாங்க.”

“ஒஹ்.. அப்புறம் என்ன அச்சு?

“நாங்க என்ன செய்யறதுன்னு கவலைபட்டப்போ, ஷ்யாம்தான் உன் நிலையை பற்றி நெட்லே சர்ச் பண்ணி பார்த்துட்டு, ஸ்பெஷல் ஸ்கூலில் சேர்க்க சொன்னான். நாங்க எல்லாம் தயங்கினப்ப, அவன் தான் எங்களுக்கு தைரியம் சொல்லி, இதில் உள்ள நன்மைகள் எல்லாம் எடுத்து சொன்னான். முக்கியமா உனக்கு பீஸ்புல்லா இருக்கும் என்று சொன்னான். அதற்கு பிறகு நாங்க உன்னை அங்கே சேர்த்தோம். அவன் சொன்ன மாதிரி நீயும் சந்தோஷமா போக ஆரம்பிச்ச. அதுக்கு பிறகு உன் சம்பந்தப்பட்ட விஷயங்கள அவன்கிட்டே கேட்டு செஞ்சோம். “

“ஹ்ம்ம்.. ஆனால் நார்மல் காலேஜ்லே படிக்கிறப்போ நிறைய பேர் எங்கிட்ட வித்தியாசமா தான் நடந்துகிட்டாங்க. அப்போ மட்டும் ஏன் என்னை அங்கே சேர்த்தீங்க?

“அதற்கும் அவன் தான் காரணம். நீயும் மற்றவர்களை மாதிரி வெளியில் வரணும் என்று நினைத்தான். இப்போ ஓரளவு உனக்கும் விவரம் தெரிந்து விட்டது. அதனால் தான் நீ எல்லாவற்றையும் பேஸ் பண்ண வேண்டும் என்று எண்ணினோம். “

“அத்தை, ஷ்யாம் அத்தான் பொசிஷன் எனக்கு தெரியும். இப்போ பரிதாபத்தில் என்னை கல்யாணம் பண்ணிகிட்டா அவர் ரெபுடேஷன் குறையாதா? அப்படி குறையும் போது என் மேல் இருந்த பரிதாபம் போய், சரவணன் மாதிரி பேசமாட்டார்ன்னு என்ன நிச்சயம். அதை விட நான் அப்பா, அம்மாவோடு இருந்து விடுவேனே”

இதுவரை மைதிலி பேசிக் கொண்டுருக்க, இப்போது சபரி “இல்லை மிதுமா, அவன மாதிரி உன்னை புரிஞ்சவங்க யாரும் கிடையாது. எங்களுக்கே சில விஷயங்கள் உன்னை பற்றி புரியாத போது, அவன் தான் எங்களுக்கு புரியவைத்தான். அவனுக்கு நீ என்றால் தனி தான். நீ பயப்படும் படி நடக்காது. “ என்று எடுத்து சொல்லி புரிய வைத்தார்.

மைதிலியும் “ஷ்யாமிற்கு உன் மேல் பரிதாபம் இல்லைடா. அவனிடம் கேட்டால் அவளுக்கு என்ன குறை பரிதாபப்பட என்று தான் கேட்பான். உன்மேல் அவனுக்கு பாசம், நேசம் அக்கறை எல்லாமே இருக்கிறது. அதனால் தான் நான் இந்த முடிவு எடுத்தேன்”

ஏனோ இத்தனை எடுத்து சொன்ன பின்னும் அவளுக்கு கொஞ்சம் பயம், தயக்கம் இரண்டும் இருந்தது. அவள் தன் அன்னையை பார்க்க, அவரின் முகம்  காத்து இருந்தது. மைதிலியோ அமைதியாக அவளை பார்த்து இருந்தார்.

பின் முடிவு செய்தவளாக, “ஷ்யாம் அத்தானிற்கு சம்மதம் என்றால் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அத்தானை யாரும் கட்டாயபடுத்தக் கூடாது” என்று கூறினாள்.

அவளின் பதிலை கேட்ட சபரியும், மைதிலியும்  அவளை அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

வெளியே வந்து எல்லோரிடமும் சொல்ல, எல்லோருக்குமே சந்தோஷம். முரளியும், ராமும் உள்ளே வந்து அவளிடம் மீண்டும் ஒரு தரம் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டனர்.

இனி, ஷ்யாமிடம் பேச ராம், மைதிலி இருவரும் சென்றனர். ஷ்யாம் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்.

உள்ளே வந்த ராமை பார்த்து “என்னபா? கையில், காலில் விழுந்து அந்த பொ.. “ என்று ஆரம்பித்தவன், சற்று நிதானித்து “அந்த சரவணனையும், அவன் அம்மாவையும் சமாதானபடுத்திடீங்களா? இவர் செய்யற தியாகத்திற்கு ஈடா நாம என்ன செய்யணுமாம்? அதையும் சொல்லிட்டாங்களா?” என்று பொரிந்து தள்ளினான்.

மைதிலியும் ராமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மைதிலி “ஏன்டா , இப்போ எங்களை என்ன செய்ய சொல்றே? கல்யாணத்தை நிறுத்தனும்னு சொல்றியா?

“ஏன் நிறுத்தினா என்ன தப்பு? இப்போவே இவ்வளவு பண்றவங்க நாளைக்கு நம்ம மித்துவ என்ன செய்யவும் தயங்க மாட்டாங்க. அப்படி எதுக்கு இந்த கல்யாணம் நடக்கணும்?

“ஒஹ். அப்படி நிறுத்தினா வேறே யாரு அவளை கல்யாணம் பண்ணிப்பாங்க? அப்படியே வர்றவங்களும், இப்போ நின்ன கல்யாணத்துக்கும் சேர்த்து அவளைத்தான் பேசுவாங்க. அந்த வேதனை வேறே அந்த பொண்ணு தாங்கணுமா?

“இப்படியே எத்தனை காலத்துக்கு சொல்லிட்ருக்க போறீங்க? காலம் மாறிட்டு இருக்கு. தனக்கு வரவங்களோட பாஸ்ட் பற்றி நிறைய பேர் கவலைப்படுவது இல்லை. ப்ரெசென்ட், பியுச்சர் பற்றி தான் பார்க்கறாங்க.”

“ஆனால் குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் அப்படி இருப்பாங்கன்னு சொல்றதுக்கு இல்லையே?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.