(Reading time: 13 - 25 minutes)

“சும்மா சாக்கு சொல்லாதீங்கம்மா? அப்படி ஒருத்தன தேடுறது நம்ம பொறுப்புன்னு எடுத்துக்க வேண்டியதுதான்”

இப்போது ராம் “அப்படி ஒருத்தனை நாங்க தேடிட்டோம். “ என்று கூறினான்.

அவனை ஆச்சர்யமாக பார்த்தவன் “அப்படி யாருப்பா பார்த்தீங்க? உடனே போய் பேச வேண்டியது தானே?” என்றான்.

“அவனிடம் தான் பேசிட்டு இருக்கோம்” என்று கூற, முதலில் புரியாமல் முழித்தவன் இப்போது திகைத்து நின்றான்.

மைதிலி “என்னடா சொல்ற? நீ மைதிலிய கல்யாணம் பண்ணிக்கறியா? என்று தெளிவாக கேட்டார்.

அப்போதும் திகைப்பு விலகாதவனாக “நான் மித்துவ அப்படி நினைத்தது இல்லையேம்மா” என்றான்.

“இனிமேல் நினைத்துக் கொள்” என்று இலகுவாக கூறினார் மைதிலி.

“அம்மா,  மிதுவின் மனநிலை புரியாமல் பேசறீங்களே? சரவணனை பற்றின அதிர்ச்சியில் இருந்தே அவள் விலகியிருக்க மாட்டாள். ஏன் அவளை போட்டு குழப்பறீங்க? கொஞ்ச நாள் அமைதியா விட்டுட்டு, பிறகு பேசலாமே?

அப்போது மைதிலி, ராம் இருவரும் இரண்டு காரணங்களை கூற, அதைக் கேட்டவன், மீண்டும் சற்று நேரம் யோசித்தான். பிறகு

“இதை பற்றி மித்துவிடம் கேட்டு விட்டீர்களா? என்ன சொன்னாள்?

“அவளுக்கு சம்மதம் தான்”

“அப்படி சொல்லியிருக்க மாட்டாளே”

“சரிடா, அத்தானுக்கு சம்மதம் என்றால் எனக்கு பிரச்சினையில்லை அப்படின்னு சொன்னாள் போதுமா?

தன் அம்மா, அப்பாவை பார்த்தவன் “இது சரியா வருமா?” என்று கேட்டான். இப்போது ஷ்யாம் எல்லாவற்றிலும் வேகம் காட்டும் சூர்யா க்ரூப்ஸ் எம்.டியாக தெரியவில்லை இருவருக்கும். ஸ்கூலில் வந்து அம்மா, அப்பாவிடம் தெரியாததை கேட்கும் சிறு பிள்ளையாக தெரிந்தான்.

ராம் அவனை அணைத்து “எல்லாம் சரியா வரும்டா. எங்களுக்கு உன் மேலும் , மித்ராவின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. தயங்காதே” என்று கூறினான்.

மைதிலியும் அவனை அணைத்து , “ராம் சொல்றது சரிதாண்டா. சீக்கிரம் எல்லாம் சரியாகும் பாரு” என்று சொன்னாள்.

ஒரு தெளிவிற்கு வந்தவனாக “சரிம்மா, நான் மிதுவிடம் நேரில் ஒருமுறை கேட்டு விடுகிறேன். அதற்கு பின் மேற்கொண்டு பேசலாம்” என்றான். சரி என்று மூவரும் மித்ராவின் அறைக்கு சென்றனர்.

அங்கே எல்லோரும் ஷ்யாமின் முடிவை எதிர்பார்த்து காத்து இருக்க, நேராக மித்ராவின் அருகில் வந்த ஷ்யாம்

“மிது, நமக்கு கல்யாணம் செய்ய எல்லோரும் நினைக்கிறாங்க. நீ என்ன சொல்ற? யாரை பற்றியும் கவலைபடாமல் உன் மனதில் உள்ளதை சொல்லு. நான் பார்த்துக்கறேன்” என்று கூறினான்.

மற்றவர்கள் எல்லோரும் ஐயோ இவன் ஏன் இப்போ குட்டையை குழப்பறான் என்று எண்ண, ராம் மைதிலி மட்டும் புன்னகையோடு இருந்தனர். அவர்களுக்கு இப்படிதான் நடக்கும் என்று தெரியும். அதனால் அமைதியாக பார்த்து இருந்தனர்.

அத்தனை நேரம் மித்ராவிடம் இருந்த தயக்கம், மெல்ல விலகுவதை அவளே உணர்ந்தாள். ஷ்யாமிடம் எதைப்பற்றி கேட்கவும் அவள் தயங்கியதில்லை. அவனே கேட்கவும், மெல்லிய குரலில்,

“அவர்கள் முடிவில் எனக்கும் சம்மதம் அத்தான்” என்று மட்டும் கூறினாள்.

அவளின் பதிலை கேட்ட ஷ்யாம் பின் எல்லோரையும் பார்த்து “எனக்கும் சம்மதம் “ என்று கூற, அத்தனை நேரம் இருந்த இறுக்கம் வடிய எல்லோரும் ஒரு சேர புன்னகை செய்தனர்.

இதில் இளைய தலைமுறையான அஷ்வின், சுமித்ரா, சைந்தவி மூவரும் “ஹோய்” என்று கூச்சலிட்டனர்.

சுமி “ ஹேய். .அப்போ மிது இனி எங்க வீட்டுக்கே வந்துவிடுவாள். ஐ ஜாலி” என்று மகிழ்ந்தாள்.

கெளசல்யாவோ “சுமி, இனி மிது உனக்கு அண்ணி” என்று கூற, அவளோ “ஹேய்.. ஒல்டீ.. அவ என் பிரெண்ட். அப்புறம் தான் அண்ணி, தண்ணி எல்லாம்” என்றாள்.

“சுமித்ரா, அண்ணின்னு சொன்னாதான் நாளைக்கு நீ ஆரத்தி இருக்கும்போது உங்கண்ணன் கிட்டே ஒத்தையா இல்லம்மா கட்டா கறக்க முடியும்”

“என்னது ? நான் ஆரத்தி எடுக்கணுமா? இதை எல்லாம் நீங்க முன்னாடியே சொல்லலையே? “

மற்றதை தவிர்த்து “உங்கண்ணன் கல்யாணம்னா நீதான் எல்லாத்துக்கும் முன்னாடி நிக்கணும்”

“அடப்பாவமே. நான் வேறே ரெண்டு செட் டிரஸ் தான் வாங்கி இருக்கேன். இப்போ ஒவ்வொரு எவென்ட்க்கு இல்ல எனக்கு டிரஸ் எடுக்கனும். ஹேய். சந்து ஒரு ஐடியா கொடேன்”

“ஐடியா தானே தரேன். ஆனால் என்னையும் உன்னோட சேர்த்துக்கனும்”

“ஹேய் .. அது எப்படி இது என் அண்ணன் கல்யாணம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.