Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

ன்று 1999

டாலின் அப்பா மகாதேவன் கூறிய வார்த்தைகள் திரும்பத் திரும்ப சித்துவின் மண்டைக்குள் குடைந்து குடைந்து அவனை நிம்மதியில்லாமல் ஆக்கிவிட்டது. அவர் சொன்னபடி தன் அப்பா அம்மா தன்னிடம் இல்லாமல் இருப்பதற்கு காரணத்தைத் தெரிந்துக் கொள்ள ஆவல் கொண்டான். அதன்படி கார்டனில் இருந்த தாத்தா பாட்டியிடம் வந்தவன்

”பாட்டி அப்பா அம்மா என்கிட்ட ஏன் பேச மாட்டேங்கறாங்க? அம்மா எதுக்குமே என்னை தேடி வந்ததில்லையே ஏன்?” என கேட்க அதற்கு பாட்டி பதில் சொல்லும் முன்பே தாத்தா பதில் கூறினார்.

”சித்து உங்கப்பா உன்னை பெரியாளாக்கனும்னு ஆசைப்பட்டு இங்க கொண்டு வந்துவிட்டாங்க ஆனா, அவங்க ஏன் உன்கிட்ட பேசலைன்னு தெரிஞ்சிக்கனும்னா நீதான் உன் அப்பா அம்மா கிட்ட கேட்கனும்?”

”ஏன் தாத்தா உங்களுக்கு தெரியாதா?”

”எங்களையும் உன்னை போலதானே இங்க விட்டுட்டு போய்ட்டான் உங்கப்பன். எனக்கு மட்டும் எப்படி தெரியும் சொல்லு?”

”அப்ப உங்களுக்கும் இங்க இருக்கறது பிடிக்கலை அப்படிதானே தாத்தா”

”ஆமாம் ஆனா என்ன செய்றது, உங்கப்பா உன்னை என் கையில ஒப்படைச்சிட்டு இந்த ஊட்டிக்கு விரட்டிட்டான் பாவி அவனுக்கு அவனோட அப்பா அம்மா மேலயும் பாசமில்லை அவன் பெத்த பையன் மேலயும் பாசமில்லை”

”நிஜமாவே அவருக்கு நம்ம மேல பாசமில்லையா” என சித்து கேட்க அதற்கு

”அட என்னாச்சி உனக்கு யார் என்ன சொன்னாங்க?” என்றார் பாட்டி

”யார் சொன்னா என்ன அப்பாவுக்கு ஏன் உங்களையும் என்னையும் பிடிக்கலை” என கேட்க அதற்கு பாட்டி

”பிடிக்கலைன்னு யார் சொன்னா சொல்லு, உனக்காக இங்க நிறைய வசதிகள் செஞ்சிக் கொடுத்திருக்கான். நீ படிச்சி முன்னேறனும்னு நிறைய பணத்தை வாரி இறைக்கிறான்.

எல்லா விளையாட்லயும் நீதானே பர்ஸ்ட், உனக்கு தேவையானதை எப்பவும் அவன் செய்யறான். அவனுக்கு அடுத்து நீதானே நம்ம சொத்து, நமக்கு இருக்கிற கம்பெனிகளை நிர்வாகம் செய்யனும்

 அதுக்கு ஏத்த மாதிரி நீ தயார் ஆகனும்ல. அதுக்காகத்தான் உன்னை இங்க இருக்கற கான்வென்டில படிக்க வைக்கிறான்.

உனக்கு துணையா எங்களை இங்க தங்க வைச்சிருக்கான் புரிஞ்சுதா” என தன் மகனை விட்டுக்கொடுக்காமல் பேசினார் பாட்டி.

”அப்படின்னா நான் எப்படி டாலுக்கு செய்றேனோ அப்படிதானே அப்பாவும் எனக்கு செய்றாரு”

”ஆமாம்”

”அப்ப எதுக்கு டாலோட அப்பா என்கிட்ட கோச்சிக்கிட்டாரு”

”என்னன்னு?”

”அவருக்கு அவர் பொண்ணு வேணுமாம். நான் வந்தபின்னாடி அவள் என்கூட இருக்கறது அவருக்கு ஜெயில்ல டால் இருக்கறமாதிரி தெரியுதாம், ஏன் பாட்டி அப்ப நான் கூட இங்க ஜெயில்ல இருக்கிற மாதிரிதான் இருக்கேனா”

”இல்லடா அப்படியில்லை அவரு ஏதோ வேற பிரச்சனையில வந்த கோபத்தை உன் மேல காட்டியிருக்காரு போல விடு” என்றார் பாட்டி

”இல்ல பாட்டி எனக்கு பதில் வேணும், என்னை எங்கப்பா எப்படி பார்த்துக்கிறாரோ அப்படிதானே நானும் டாலை பார்த்துக்கிறேன். ஆனா எங்கப்பா என்னை உங்க கூட வைச்சி வளர்க்கறாரு, டாலையும் நான் என் கூட வைச்சி பார்த்துக்கிறேன். அப்ப நானும் அப்பா மாதிரியா சொல்லுங்க பாட்டி”

”அதை நீதான் கேட்கனும் போ போய் ஹால்ல போன் இருக்கு உங்கப்பன் கிட்ட கேளு பதில் சொல்றானா பார்க்கலாம்” என தாத்தா கோபமாகக் கூறவும் அவனும் வீட்டிற்குள் சென்று தொலைபேசியில் அவன் அப்பாவிற்கு போன் செய்ய அவர் வீட்டில் இல்லை என்றும் ஆபீசில் இருப்பதாகவும் தகவல் வர மறுபடியும் ஆபீசிற்குப் போன் செய்தான்.

அவர் மீட்டிங்கில் பிசியாக இருக்க அவனிடம் அப்புறம் பேசுவதாக தன் பிஏ விடம் சொல்லிவிடவும் பிஏவும் சித்தார்த்திடம் கூற அவனுக்கு கோபம் வந்தது.

அவன் தன் அறைக்கு கோபாவேசமாக சென்றுவிட்டான். அங்கு திலோ இல்லாததால் அந்த தனிமையை நினைத்து வெறுத்தவன் இப்போது என்ன செய்வது? என பலவாறாக யோசித்தான். சட்டென அவனது மண்டையில் குண்டுபல்பு எரியவே ஆசையாக அவளுக்கு லெட்டர் எழுத நினைத்து பேப்பர் பேனா கொண்டு மிகவும் யோசித்து தன்னுடைய அழகான கையெழுத்தில் ஆங்கிலத்தில் முதல் முதலாக கடிதம் ஒன்று எழுத ஆரம்பித்தான்.

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகாsaaru 2018-07-17 14:46
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகாSAJU 2018-06-29 18:57
nice ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகாNanthini 2018-06-29 16:37
interesting update Sasirekha.

Andru and Indru irandupaguthiyum suvarasiyamaga poguthu.

Sidarth Thilo mela vaithirukum kan moodi thanmaana anbinaaleye avangalai innum id seiyyama irukar.

Pazhaiya vishyathai resemble seivathaga ethavathu nadanthal avangalai kandupidichiduvarnu oru hunch :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகாmahinagaraj 2018-06-29 11:05
sema super......... :clap: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகாvijayalakshmi 2018-06-28 22:46
enna nadakapoguthu ena therindhu kolla aavalaga ullathu :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகாராணி 2018-06-28 22:44
nice epi :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகாAdharvJo 2018-06-28 21:31
:D :D vinodh oda retelecast was very funny :dance: pandavargalo :Q: lovely borthers feel sad for sid but idhu rombha aniyayam pa doll oda Peru kuda theriyadha adapavigala facepalm empa school meeting LA kudava name sollala admission ku kuda poniye thambi wat a pity note book la Peru enanu kuda parkama padam solli thandiya :sad: sid date LA kuda ena confusion doll parthadhu 1999 LA now its been 2yrs apro en pa date still 10/12 :Q: sasi ma'am look like an error in d dates..

ivaru rombha emaliyaga irukaru.hope now at least avaru change avaranu parkalam...but doll ena avalo easy ya vendamn vittutanga steam

Sid oda loneliness parka facepalm pavam than but ippadi Innocent aga irundhal.eppudi kalam.irungagunga boss illati ninga herpndradha nanga marachipothamu :yes: come on sid....background song adutha epi LA podurom :cool: thank you sasi ma'am :clap: 10 pages goes on just like DAT. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகாmadhumathi9 2018-06-28 20:08
:Q: eppadithaan sidhu therinthu kolla pogiraan endru paarppom. :thnkx: (y) :clap: waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top