(Reading time: 8 - 16 minutes)

ருள்மொழி தான் முதலில் ஆனந்தி வீட்டிற்குச் சென்றாள். நேற்று அவர் அலைபேசியில் கூறியது போல் வீட்டில் அவர் மட்டுமே தனித்து இருந்தார். அதில் அவள் மனம் நிம்மதியடைந்தது. இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.  வந்ததுமே அவர் காபியோடு அவளை உபசரிக்க நினைக்க, அவள் அப்போது தான் சாப்பிட்டு வந்ததாக மறுத்திருந்தாள். அதனால் சிறிது நேரம் ஆகிவிட்டதால், அவளுக்கு ஏதாவது சாப்பிட கொடுப்பதற்காக அவர் எழுந்திருக்க,

“அய்யோ ஆன்ட்டி, நீங்க உட்காருங்க.. எனக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம் ஆன்ட்டி.. நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன்..” என்று தடுத்தாள்.

“எனக்கும் இப்போ காபி குடிக்கணும் போல இருக்கும்மா..  எப்பவும் இந்த நேரத்துக்கு எனக்கு காஃபி குடிக்கணும்.. இன்னைக்கு வேற அமுதா காலையில் ப்ரட் டோஸ்ட் தான் செஞ்சு கொடுத்தான். அது இன்னுமா செரிக்காம இருக்கும் சொல்லு.. எனக்கு பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு..” என்றார்.

“அதனால என்ன ஆன்ட்டி.. நான் உங்களுக்கு ஏதாச்சும் செஞ்சு தரேன்.. வீட்ல என்ன இருக்குன்னு சொல்லுங்க.. அப்படியே காஃபியும் போட்டு தரேன்..” என்றாள். ஆனந்தி வேண்டாமென்று சொன்னாலும் மறுத்தவள், சமையலறைக்குச் சென்றாள். கூட வந்து உதவி புரிகிறேன் என்றவரையும் ஒரு புத்தகத்தை கையில் அறையிலேயே அமர வைத்துவிட்டு வெளியில் வந்தாள்.

சமையலறைக்குச் சென்றவள் அங்கே இருக்கும் பொருட்களை ஆராய்ந்தாள். ஒரு சேமியா பாக்கெட் இருந்தது. அதில் கிச்சடி செய்யலாம் என்று யோசித்தவள், உடனே அதற்கு தேவையான பொருட்கள் இருக்கிறதா என்று ஆராய்ந்தாள். அவளுக்கு தேவையான பொருட்கள் கிடைத்ததும் காய்கறிகளை அறிய கத்தியை எடுத்துக் கொண்டு அதை வெட்ட ஆரம்பிக்கும் போது,

“அருள்..” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர, அங்கே அமுதன் அவள் அருகில் நின்றிருந்தான்.

அலுவலகத்தில் இன்று அவனுக்கு அதிக வேலையில்லை. சுடர் வேறு வரப்போவதாக கூறியிருந்ததால் உடனே வீட்டிற்கு கிளம்பினான். ஆனால் இங்கே அருள் இருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அதிலும் சமையலறையில் அவள் உருட்டிக் கொண்டிருந்தாள். வரவேற்பறையிலிருந்து சமையலறையில் இருப்பவர்கள் நன்றாக தெரிவார்கள். அதனால் உடனே அவசரமாக அவன் அங்கு வந்தான்.

தெருமுனையிலேயே மகி வண்டியை நிறுத்திக் கொண்டான். “நீயும் என்கூட ஆன்ட்டியை பார்க்க வாயேன்..” என்று சுடர் அவனையும் அழைத்தாள்.

“நான் இன்னிக்கு சீக்கிரம் ரெஸ்ட்டாரன்ட் போகணும்.. நான் இன்னொரு நாள் பார்க்க வரேன்.. நீ போய் பாரு”  என்று கூறினான். ஆனால் உண்மையிலேயே அங்கு அமுதனை பார்க்க வேண்டியிருக்கும் என்பதால் தான் வர மறுத்தான்.

அதை புரிந்தவளாக, “சார்லி வேலைக்கு போயிருப்பான்.. ஆன்ட்டி மட்டும் தான் வீட்டில் இருப்பாங்க..” என்றாள்.

“அதனால என்ன? அவனை பார்த்து எனக்கென்ன பயமா? எனக்கு ரெஸ்ட்டாரன்ட்ல வேலை இருக்கு.. நீ மட்டும் போய் அவங்களை பாரு.. அப்புறம் எப்போ கிளம்புவன்னு சொல்லு.. நான் வந்து உன்னை கூடிட்டு போறேன்..” என்று கெத்தாக கூறிக் கொண்டான்.

“இல்ல நான் தனியா வீட்டுக்கு வந்துடுவேன்.. நீ வர வேண்டாம்..”

“வந்துடுவல்ல.. இல்லன்னாலும் போன் பண்ணு நான் கிளம்பி வரேன். அப்படி நீ வீட்டுக்கு போனாலும், ஹவுஸ் ஓனர் ஆன்ட்டிக்கிட்ட சாவி இருக்கும் வாங்கிக்க..” என்றவன், அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினான்.

“நீங்க எங்க இங்க?” தன் வீட்டில் நின்றுக் கொண்டு தன்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டவளை பார்த்து அமுதன் புன்னகைத்தான்.

அப்போது தான் அவனை பார்த்து என்ன கேள்வி கேட்கிறோம் என்பதை உணர்ந்தவள், “இல்ல இந்த நேரம் நீங்க எப்படி வீட்ல? ஆன்ட்டி நீங்க ஆஃபிஸ்க்கு போயிடுவீங்கன்னுல்ல சொன்னாங்க” என்றவள், பின் நாக்கை கடித்துக் கொண்டு, “அதாவது நான் வந்தப்போ ஆஃபிஸ் போயிட்டீங்கன்னு சொன்னாங்க..” என்று உளறிய வார்த்தையை திருத்தினாள்.

அவன் இங்கு இல்லாததை அறிந்து தான் அன்னையை பார்க்க வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் மனம் ஒருப்பக்கம் வேதனைப்பட்டது. இன்னொரு பக்கமோ சுடர் வேறு இப்போது வருவதாய் சொன்னாளே, அம்மாவிடம் முன்பே சொல்லியிருந்தால், அருளை. வரச் சொல்லொயிருக்க மாட்டார்களே என்று பயமும் கொண்டான். மனதில் பயமும் வருத்தமும் சேர்ந்து இருந்தாலும், தன் வீட்டில் உரிமையாய் சமையலறையில் நின்றிருப்பவளை பார்க்க பார்க்க மனம் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க தான் செய்தது.

“ஆமாம் இங்க என்ன பண்ற?”

“கிச்சன்ல என்ன செய்வாங்க? ஆன்ட்டிக்கு சேமியா கிச்சடி செய்யலாம்னு வந்தேன்..”

“சரி கத்தியை கொடு.. நான் வெஜிடபல்ஸ் வெட்டி தரேன்..” என்று கத்தியை கேட்க,

“இல்ல வேண்டாம் நானே செஞ்சுக்குவேன்..” என்று மறுத்தாள்.

“இங்க வந்து நீ இதெல்லாம் செய்யணுமா? நானே பார்த்துக்கிறேன் கொடு..” என்று கத்தியை வாங்க முற்பட,

“ ஏன் நான் பார்த்தால் என்ன?”  என்றவள், கத்தியை அவனிடம் கொடுக்காமல் இழுக்க, அதில் கத்தி அவள் கையை லேசாக பதம் பார்த்தது.

அதில் “ஆஆ..” என்று அவள் கத்தியதும், அவளது விரலில் லேசாக ரத்தம் எட்டிப் பார்த்ததில் பதறியவன், அவள் விரலை பிடித்து தன் வாயில் வைத்தான்.

உறவு வளரும்...

Episode # 16

Episode # 18

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.