(Reading time: 9 - 17 minutes)

அனந்திதா அவள் இருந்த கோபத்தில் ஒன்றை மறந்துவிட்டாள். பிரதீப் தன்னிடம் வலுக்கட்டாயமாக ஆட முயன்றதாலேயே ஹரிஷ் அவளிடம் வந்தான்.

அவன் ஏதோ திட்டம் செய்து வரவில்லை என்று உணரவில்லை. உணரும் சமயம் அவன் அவளை விட்டு தூரம் சென்றிருப்பான் என்று அறியாமல் விட்டாள்.

நேற்று இரவில் இருந்து அவளிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் இருந்தவள் ஹரிஷ் தன்னிடம் வரும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து அவன் மீது அனைத்தும் காண்பிக்க முடிவெடுத்தாள்.  

ஆனால், அதற்கான நேரம் வரவில்லையோ? இல்லை ஹரிஷ் அவளை தவிர்த்து அவளிடம் தப்பித்துக்கொண்டானோ? தெரியவில்லை. அன்று நாள் முழுவதும் அவள் கையில் அவன் சிக்கவில்லை.

இரவில் அனைவரும் ஒன்றாக உணவு உண்ணவரும் போதுதான் அவனை பார்த்தாள். அவனிடம் “நான் உன்கூட பேசணும், சாப்பிட்டு வெயிட் பண்ணு...” என்று கூறிவிட்டு தனக்கு வேண்டிய உணவை தட்டில் எடுத்துக் கொண்டு சென்றாள்.

ஹரிஷக்கு ஒருபுறம் சந்தோஷமாகவும் மறுபுறம் பயமாகவும் தோன்றியது. அனைவரும் சென்ற பிறகு இருவரும் வெளியே வந்தனர். அவர்கள் தங்கிருந்த குடிலுக்கு வெளியே உள்ள பார்க்கில் அமர்ந்துக்கொண்டு பேசலாம் என்று அவளை அழைத்தான்.

அவளும் இங்கே வைத்து பேசினால் அனைவரது பார்வையும் அவர்களின் மேல் சுவாரசியமாக பதியும் என்றெண்ணி அவனுடன் சென்றாள்.

அவனுடன் சண்டை இட வேண்டும் என்ற எண்ணத்திலே வந்தவள் என்ன பேசுகிறோம் என்று புரியாமலேயே அவனை கோபப்படுத்தினாள்.

“நீ எப்படி என்கூட அவளோ க்ளோஸ்சா டான்ஸ் ஆடினா? உன்னை யாரு வர சொன்னா? எல்லாரும் கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியல?” என்றாள்.

அவன் கோபத்துடனே பேசினான் அவள் கேட்ட கேள்விகளுக்கு “நான் வந்து உன்னை டான்ஸ் ஆட கூப்பிட்டேனா? சொல்லு, நீ அந்த பிரதீப் கூப்பிட்டதும் போன.. அங்க அவன் கூட comfortable ஆ இல்லாம தடுமாறிக்கிட்டு இருந்தா பாவமே friend ஆச்சே அப்படின்னு நான் உன்னை அவன்கிட்ட இருந்து காப்பாத்திவிட்டா நீ இதுவும் பேசுவ? இன்னமும் பேசுவ?” என்றான்.

அவள் அவன் சொன்ன பதிலில் முதல் தடுமாறினாலும் அவளே ஆரம்பித்தால், “அப்போ அதோட விட வேண்டியதுதான, ஏன் என்கிட்டே அவளோ க்ளோஸ் சா டான்ஸ் ஆடின?....”

“நீ எனக்கு கம்பெனி தராமா என்னால அப்படி ஆடி இருக்க முடியாது புரிஞ்சுதா?... நான் தொட தொட நீ என் கையில உருகுனா? எங்க நீ இல்லன்னு சொல்லு பார்க்கலாம்...” என்று வெளிப்படையாக கேட்டுவிட்டான்.

அவன் பதிலில் சிறிது முகம் சிவந்தவள் அவனை இந்த வாக்குவாதத்தில் தோற்கடிக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே அவனை மேலும் சீண்டினாள். “அப்போ !! எனக்கு பதிலா வேற எந்த பொண்ணு இருந்தாலும் நீ இப்படிதான் நடந்துப்பா... யு ஆர் கேரக்டர்லேஸ்...” என்று அவனை தாக்கினாள்.

இதில் கோபம் அடைந்தவன் அவளை தன் அருகே பிடித்து இழுத்து அவள் முகம் தன் முகத்தை பார்க்குமாறு அவள் நாடியை தூக்கி அவள் கண்களை உற்று நோக்கினான். “நான் அதே கேள்விய, உன்ன கேட்க எவ்வளவு நேரமாயிடும்.. பார்த்து பேசு...” என்று உறுமினான்.

அவன் கூறியதை உணர்ந்தவள் அவமானத்தில் தலை குனிந்தாள். அவனே மேலும் தொடர்ந்தான்.

“அனந்திதா... !! எனக்கு உன்ன தெரியும் உனக்கும் அப்படிதான். முன்னவே நாம ரெண்டுபேரும் சில சமயம் க்ளோஸ்சா இருந்து இருக்கோம். சோ அதனால கூட நீ என்னோட அப்படி இருந்து இருப்ப. ஆனா, நான் உன்ன அவன் கிட்ட காப்பாத்த மட்டும் உன்னோட ஆடல.. உன்ன வேற ஒருத்தன் தொடறத என்னால பார்க்க முடியாது அதனாலதான் நான் அப்படி நடந்துகிட்டேன்].” என்று சொல்லிவிட்டு அவளை விடுவித்தான்.

அவன் கூறியதை முதலில் கிரகிக்க முடியாமல் இருந்தவள். அவன் கூறியதை உணர்ந்து, “அப்படினா ?? என்ன அர்த்தம் ?... ஐ நீட அ அன்சர்...” என்று அவன் தோளைப் பற்றி உலுக்கினாள்.

அவன் பதில் கூற முடியாமல் முதலில் தடுமாறினான். பின் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில், “நீ ஏன் என்கிட்ட உருகி நின்ன?.... நீ ஏன் என்ன தள்ளி விடல?... நீ ஏன் என்னோட ஆடும்போது உன்ன மறந்துட்டு என்னை பார்த்த?... இது எல்லாத்துக்கும் உன்கிட்ட பதில் இருக்கா? இல்லதான... அதுமாதிரி தான் நீ கேட்கற கேள்விக்கும் பதில் இல்ல... நானே தேடிட்டு இருக்கேன்...” என்றான்.

அவன் பதிலில் குழம்பியவள் அதற்கு பதில் தெரியாமல் முழித்தால், அதனைப் பார்த்த அவன் அவளை தன்னுடன் இறுக்கமாக அணைத்துக்கொண்டான். அவளும் ஒன்றினான்.

அவள் முகம்பற்றி அவன் இதழால் தன் முத்திரைகளை பதித்தான். அவளும் அதனை விரும்பினாள். அவன் பார்வை அவள் இதழ் மீது படிந்தது. ஆனால், யோசனையாக அவளை பார்த்தான் முன்னேறாமல். அவன் பார்வை உணர்த்திய செய்தியால் அவள் படபடப்பானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.