Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசு - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

ல்லாருங்க.”

தனது காலில் விழுந்த மணமக்களை மனமார வாழ்த்தினார் ரவிச்சந்திரன்.

கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை அவர்கள் அறியாமல் துடைத்துக்கொண்டார்.

மனைவியின் அருகே அழைத்துச்சென்றவர் அவரது கரங்களைத் தானே எடுத்து அவர்களை ஆசிர்வதிப்பது போல் அவர்கள் தலையில் வைத்தார்.

எப்படியெல்லாம் நடக்க வேண்டிய கல்யாணம்?

“இந்த நேரத்தில் யுகா இருந்திருந்தால் இத்தனை எளிமையாய் இந்தத் திருமணம் நடத்த விட்டிருப்பானா?”

தனது ஆதங்கத்தை வாய் விட்டே சொல்லிவிட்டார்.

மணமக்கள் இருவருக்குமே அவன் இருந்திருந்தால் இப்படி ஒரு கல்யாணம் நடந்திருக்காது என்று தோன்றியது.

ஊரில் குலதெய்வம் கோயிலில் எளிமையான முறையில் அவர்கள் திருமணம் நடந்து முடிந்திருந்தது.

கதிரவனும், சுந்தரியும் இந்த திருமணத்திற்கு அவள் வீட்டு சார்பில் வந்திருந்தனர்.

அவர்களிடமும் ஆசிர்வாதம் பெற்றனர்.

மகேந்திரனுக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் யுகேந்திரன் இறந்த போது கதிரவன் வந்திருக்கிறார். அவரைப் பார்த்த ஞாபகம் அவனுக்கு இருக்கிறது.

அவர்களது பேச்சில் இருந்து அவர்கள் அருணின் பெற்றோர் என்று தெரிந்து கொண்ட அவன் முகம் கடுத்தது.

அவளுக்கும் அந்த அருணுக்கும் என்ன உறவு?

அதை வாய் விட்டுக் கேட்கும் மனநிலை இல்லை.

அவன் இந்தத் திருமணத்தின் அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை.

அவனே எதிர்பாராமல் இந்தத் திருமணம் நடந்துவிட்டது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எல்லாமே கிருஷ்ணவேணியின் திட்டப்படிதான் நடக்கிறது. தவறு செய்துவிட்ட குற்ற உணர்வு அவனை எதையும் மறுக்க முடியாமல் செய்துவிட்டது.

அன்று தான் ஏன் அப்படி நடந்துகொண்டோம் என்று அவனுக்குப் புரியவே இல்லை.

அன்றைக்கு அவன் தான் செய்த குற்றத்திற்குப் பரிகாரமாக அவளைத் திருமணம் செய்துகொள்ள கேட்ட பொழுது அவள் உடனே பதில் சொல்லாதது நினைவுக்கு வந்தது.

அதுவும் அவன் தங்கள் சொத்தை அவளது பெயருக்கு எழுதி வைக்க ஒத்துக்கொண்ட பிறகுதான் அவள் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதே.

என்னவோ அவனுக்குத்தான் பிரச்சினை என்பதுபோல் அவள் நடந்துகொண்ட விதத்தை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அப்போதே மனம் தாங்காமல் வாய் விட்டே கேட்டுவிட்டான்.

“அடிப்பாவி. கடைசியில் நான் சந்தேகப்பட்ட மாதிரியே உனது புத்தியைக் காட்டிட்டியா?”

அவன் தன்னை மறந்து கத்தியபோது புரியாத பார்வை பார்த்தாள்.

அப்படி என்ன செய்துவிட்டேன் என்ற தொனியில் அவள் பார்த்த போது என்னவோ தான்தான் தவறு செய்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது.

“உனக்கு இந்தச் சொத்து மேல்தானே கண்ணு. அதனால்தானே இங்கே நீ வந்ததே. நான் ஒன்னும் யுகா இல்லை. உன்னோட அப்பாவித்தனத்தை நம்புவதற்கு.”

“அதுதான் என்னோட ஆசை என்னன்னு உங்களுக்குத் தெரிஞ்சுடுச்சுல்ல. அப்புறமும் ஏன் என்னைத் திருமணம் செய்துகொள்றேன்னு சொல்றீங்க? என்னை என்னோட வழியில் விடுங்க. நான் போய்க்கிட்டேயிருக்கேன்.”

அவனுக்கு அவளது பதிலைக் கேட்ட பிறகு அதிர்ச்சிதான். போய்விடுவாளோ? தன்னை விட்டுப் போய்விடுவாளோ?

அந்த நினைப்பே அதிர்ச்சியாய் இருந்தது.

“என்ன செய்யறது? தப்பை நான் செஞ்சுட்டேனே? என்னோட பெத்தவங்க வளர்ப்பு அப்படி. அதனால் நான் செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் செய்துதான் ஆகனும். எனக்குப் பிடிக்கலைன்னாலும் இந்தக் கல்யாணத்தை நான் செய்துதான் ஆகனும்.”

அவசர அவசரமாய் அவளை மறுத்துப்பேசினான்.

அவள் பதில் பேசாமல் மௌனமானாள்.

சொத்துக்காகதான் அவள் அந்த வீட்டுக்கே வந்ததே என்பது போல் அவன் பேசிய பேச்சு அவள் மனதைத் தாக்கியது.

முன்பும் அது போல்தான் ஏதோ பேசினான். இன்னமும் அவன் மனதில் அந்த எண்ணம்தான் இருக்கிறது.

ஆனாலும் இப்போதைக்கு அவள் எதையும் சொல்லப்போவதில்லை.

யுகாவின் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது.

அதுவும் அந்த சாருலதா இந்த அளவிற்கு இறங்கிய பிறகு தான் சும்மா இருப்பது சரியில்லை என்று தோன்றியது.

அதனால் மகேந்திரன் என்னதான் தன்னைப் பற்றித் தவறாக எண்ணினாலும் பரவாயில்லை என்று இந்தத் திருமணத்தை நடத்தும் வேலையில் இறங்கிவிட்டாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுThenmozhi 2018-08-12 21:11
nice update Rasu.

Krishnaveni periya step eduthu vachirukanga. Risk niraintha step. Hurt agamal thapipangala?

Magendran epo avangalai purinthu kolvar?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுrspreethi 2018-08-03 22:17
Super episode... Oru vazhiya mrg pannikitar ivlo naal yuga krish patthi thappa ninachutu irundhar ippo Sotthukaga dhan yellam nu ninaikurar... Yeppo Unmaiya purinjuparo... Waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுsasi 2018-08-01 20:50
அருமையான எபி (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுRaasu 2018-08-02 20:46
மிகவும் நன்றி சசி.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுsaaru 2018-07-31 06:25
Nice update eear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுRaasu 2018-07-31 14:51
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுmadhumathi9 2018-07-31 05:00
:clap: nice epi.waiting to read more. :thnkx: 4 this epi.krishna manathil ullathai magen ariyum kaalam eppothu.poruthirunthu paarppom. :clap: (y) :GL: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுRaasu 2018-07-31 14:50
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுSAJU 2018-07-30 21:19
WOWWWW SEMA PLAN PAAAAA
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுRaasu 2018-07-30 22:05
Thank you Saju.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுAdharvJo 2018-07-30 20:37
oh god ethanai twist pa...but enakku idhu pidichadhu rasu ma'am :clap: :clap: super!! Mr Enthiran last epi la iyandhira thanamga behave panadhadhu superb :hatsoff: but adhai avaru realize pana mudiyalaiye facepalm anyway it is all for his happy living....madhi, oda support avadhu irukke sandhosham but wen will he come to know abt Krish adhu varaikkum ivanga ippadi thaan misunderstandings la odumo facepalm As usual last epi la thaan hero purinjiparo :Q: ;-) At least Krish should be genuine as she knows what is happening around them.... Ini ena agumn therindhu kola waiting ma'am...thank you for this interesting update. Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுRaasu 2018-07-30 20:44
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுmahinagaraj 2018-07-30 17:55
ரொம்ப நல்லாயிருக்கு மேம்.... :clap: :clap:
இனி மோதலும்,காதலுமா இருப்பாங்க நம்ம ஜோடிங்க... செம.. ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 19 - ராசுRaasu 2018-07-30 19:16
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top