(Reading time: 20 - 39 minutes)

அவள் நீட்டிய தேநீரை ஒரு புன்னகையுடன் வாங்கிப் பருக ஆரம்பித்தாள்.

அதன் பிறகு அவள் பொன்னிக்கு சமையலில் உதவி செய்தாள்.

ரவிச்சந்திரன் எழுந்திருக்கும் நேரம் அறிந்து அவருக்கும் பானத்தை எடுத்துக்கொண்டு சென்றாள்.

“வாம்மா.”

அவளைக் கண்டதும் அவர் மனமகிழ்வுடன் புன்னகைத்தார்.

அவளும் தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினாள்.

இத்தனை நாட்கள் இவர்களைப் பார்த்ததற்கும் இப்போதைக்கு பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது.

இத்தனை நாட்கள் அவர்கள் அவள் மனதிற்குப் பிடித்த யுகாவின் குடும்பத்தவர். இப்போதிலிருந்து அவளது குடும்பத்தினர்.

இந்தச் சொந்தத்தை ஏற்படுத்தித் தந்த கணவன் மீது நன்றியுணர்ச்சி ஏற்பட்டது.

ரவிச்சந்திரன் தேநீரை பருகும் வரை நின்றவள் அதன் பிறகு தம்ளரை வாங்கிக்கொண

...
This story is now available on Chillzee KiMo.
...

யபடியே சாருலதா வீட்டிற்கு கிளம்பினான்.

அந்த நேரத்தில் அவனை அங்கே எதிர்பாராத சாருலதா அவனை வரவேற்க அவன் சொன்ன செய்தியில் அதிர்ந்துபோனாள்.

அன்றைய இரவு என்ன நடந்திருக்கும் என்று அவளால் யூகிக்க முடிந்தது.

இது தனக்கு நடந்திருக்க வேண்டியது. அந்த கிருஷ்ணவேணிக்கு நடந்துவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.