(Reading time: 21 - 41 minutes)

“என்கிட்ட எதற்கும் அனுமதி கேட்க வேண்டாம் ஆர்சி. ஸ்வாதி ஓகே சொன்னா சரி தான். அவள் அம்மாகிட்ட டிஸ்கஸ் செய்யாம எதையும் பைனல் செய்ய மாட்டா. சோ அவளோட முடிவுகளை என் முடிவா நீ எடுத்துக்கலாம்” ஹர்ஷா ஏற்கனவே சொல்லியிருந்தான்.

சாரதாவிடமும், ராஜமாதாவிடமும் ஆர்சியை அறிமுகம் செய்து வைத்து  அவர்களிடம் ஆர்சி பற்றி  எடுத்துச் சொன்னாள்.

ராஜபுத்திர பெண்கள் வீரத்திலும் சரி மதியூகத்திலும் சரி சளைத்தவர்கள் அல்லவே. பெண்கள் திடமான முடிவுகளை எடுக்க, மகன்கள் இருவரையும் கூப்பிட்டு ஆர்சியுடனான ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க  வைத்தார் ராஜமாதா.

ஆர்சியும் ஸ்வாதியும் நல்ல நண்பர்களாகி விட்டிருந்தனர். எம்பிஏ படித்தவள் ஆயிற்றே. அவளது அறிவையும் திறமையையும் மனமாற பாராட்டினான்.

“ஸ்வாதி, இதை எல்லாம் சரி செய்ய இன்னும் முழுசா ஒன்னு இல்ல ரெண்டு வருஷம் ஆகலாம். உங்க மாமா அதான் ராஜா அவர் நடுவில ஏதேனும் குளறுபடி செய்யாமல் இருந்தால். என்னோட சஜஷன் பிரின்ஸ்க்கு சில ப்ராபர்டீஸ் இருக்கு. நாம அதை தனியா டெவலப் செய்யலாம், இன்வெஸ்ட் செய்யலாம். வாட் யூ சே” ஆர்சி சொல்லவும் அருமையான யோசனை என்றாள் ஸ்வாதி.

“நீ இருப்பது எனக்கு ரொம்ப சப்போர்ட் ஸ்வாதி. ப்ராஜக்ட் ஒப்புக்கொண்டா அதை முடிச்சிட்டு தான் என் அட்வெஞ்சர் எல்லாம் போவேன். பட் இப்போ நடுவில நான் பிரேக்ஸ் எடுத்துக்கலாம் போலவே” அவன் சொல்ல சம்மதமாய் அவளும் உடன் சிரித்தாள்.

அன்று ஹரிணியைப் பற்றி ஆர்சி கேட்ட கேள்விக்கு ஆம் என்ற ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லியிருந்தான் ஹர்ஷா. ஆனால் ஸ்வாதி கட்டுரையே படித்து விட்டாள். ஆதியோடு அந்தமாய் ஹரிணியை முதன் முதலில் சந்தித்தது, ஹர்ஷா ஹரிணி பற்றி அவள் தப்புக் கணக்கு போட்டது, பாலாவின் திடீர் மறைவு என அனைத்தையும் ஒப்பித்தாள்.

“ஆர்சி யூ ஆர் வெரி டேஞ்சரஸ் மேன். உன்கிட்ட அப்படி என்ன சார்ம் இருக்குன்னே தெரியல. இப்படி என் மனசில் இருப்பதை எல்லாம் பேச வைக்கிற”

“நான் எதையுமே கேட்கலையே, நீயா தான் உளறி வச்சுட்டு  இருக்க” சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்.

“ரொம்ப உளறிட்டேனோ” அவள் முகத்தில் சற்றே கலவரம்.

“ராஜகுமாரி, ரிலாக்ஸ். என் மேல் நம்பிக்கை வைத்து நீ சொன்னதை நான் மதிக்கிறேன், அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் ” எனவும் ஸ்வாதி நிம்மதி அடைந்தாள்.

ஹர்ஷாவிடம் கையெழுத்து பெறுவதற்கு என ஓரிரு முறை நேரடியாக ஆர்சியே வந்தான். பூர்வி கணேஷ் இருவரையும் சந்தித்தவன் ஹரிணியை மட்டும் பார்க்க முடியாமலே போனது.

“சதுண்ணா சோ ஸ்வீட், அண்ணா சூப்பரா பாடுவாராம், கிட்டார் கூட வாசிப்பாராம், நெக்ஸ்ட் டைம் எனக்கு பாடறேன்ன்னு சொன்னாரே” என பூர்வியும் “எஸ் ஆர்சிக்கு தெரியாத விஷயமே இல்ல, வாவ் எத்தனை லாங்குவேஜ் பேசறார்” என கணேஷ் ராமும் இப்போது ஹர்ஷாவுடன் சேர்ந்து அவன் புகழ் பாடவும் ஹரிணி கடுப்படைந்தாள்.

“என்ன பொழுதுக்கும் ஆர்சி ஜபம். போய் வேலைய பாருங்க” அவள் அதட்டவும் அப்போதைக்கு அமைதியாக இருந்தனர்.

பாலாவின் முதலாம் நினைவு நாளுக்கான சம்பிரதாயங்களைச் செய்ய சென்னைக்குப் புறப்பட்டாள் ஹரிணி.

“கிளம்பலாமா டைம் ஆச்சு”

“ஒரு அஞ்சு நிமிஷம் உட்காரு ஹரி” என்று அவனது கரம் பற்றி சோபாவில் அமர வைத்தவள்  அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தாள்.

“நம்ம ஊர்களில் சொல்வாங்க. ஆன்மா ஒரு வருடம் வரை அவங்களுக்குப் பிரியமனவங்களை சுற்றி வந்துட்டே இருக்குமாம். ஒரு வருட முடிவில் இனி நீ மோட்சத்துக்கு செல், உன்னோட இனிமையான நினைவுகளோட நாங்க இங்க நல்லா இருப்போம்னு சொல்லி அனுப்பி சாந்தி அடைய வைக்கணுமாம். அதெல்லாம் உண்மையா இல்லையான்னு தெரியாது ஹரி. ஆனா உன் மனசில் நீ வேதனை பட்டுட்டு இருக்கும் வரை பாலாவோட ஆன்மாவுக்கு அமைதி இருக்காது”

ஹர்ஷாவின் விழிகள் கலங்கியிருந்தன. அவன் மனதில் இன்னமும் ஒரு குற்றவுணர்வு  இருப்பதை அறிந்தே இருந்தாள். ஒரு வகையில் அவளும் தான் அதற்கு காரணம். ஆனால் அந்த வலையில் இருந்து அவனாகவே தான் அவனை விடுவித்துக் கொள்ள முடியும்.

அவனை சிறிது நேரம் தனிமையில் விட்டுவிட்டு பெட்டியை அடுக்கிப் பூட்டி வைத்தாள். ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டு அமைதியாக இருந்தான் ஹர்ஷா. பின் ஹரிணியை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

“கிளம்பலாமா ஹனி”  என்றவனின்  முகத்தின் தெளிவு அவள் இதழ்களில் புன்னகையாய் மலர்ந்தது.

ஹாஸ்பிடல், ப்ராஜக்ட், கான்பரன்ஸ், வீடு, அரட்டை என்று போர் சாம்பர்ஸ்ஸின் நாட்கள் பரபரப்பாகவே செல்ல அடுத்து என்ன என்று ஆலோசித்தனர் ஹர்ஷாவும் ஹரிணியும்.

“இந்தியாவில் எங்கேயும் போய் ஜாயின் செய்யலாமா. நீ பாதி நாள் வேற வேற நாட்டுக்கு சர்ஜரி செய்ய போய்டுற. அது எப்படி சரி வரும்னு தெரியலையே”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.