(Reading time: 21 - 41 minutes)

“இப்போ உன்னோட பெல்லோஷிப் இருப்பதால தனியா போறேன். அப்புறம் எல்லாம் நீயும் தான் கூட வர வேண்டி இருக்கும்” ஹர்ஷா சொல்லவும் “எஸ் பாஸ்” என்று கணேஷ் சொல்வது போல சொல்லி சிரித்தாள்.

“ஆர்சி இஸ் வொர்கிங் ஹார்ட் ஹனி. அங்க ஓரளவு சீரான நிலைமை வந்துட்டா நாம சாரிட்டி சென்டர் ஓபன் செய்வது பத்தி ஆலோசிக்கலாம்”

“பாலாவோட இன்சூரன்ஸ், ப்ராபர்டீஸ், ஷேர்ஸ் எல்லாம் கொஞ்சம் இருக்கு ஹரி. அதையும் சேர்த்துக்கலாம்”

“கண்டிப்பா. ஆர்சி ஒகே சொன்னதும் ஸ்டார்ட் செய்திடலாம்” என்றவன் அவனை பார்ட்னராக சேர்த்துக் கொண்டதை சொன்னான்.

“அவன் இந்நேரம் நாலஞ்சு ப்ராஜக்ட் பார்த்திருப்பான். நம்மோடது ரொம்ப டைம் எடுப்பதால ஒரு வகையில் அவனுக்கு லாஸ் தானே” அவன் பொதுவாக வாங்கும்  தொகையை ஹர்ஷா சொல்ல மலைத்துப் போனாள் ஹரிணி.

“உன் பெரியப்பா இன்னும் பாலிடிக்ஸ்ல தான் தீவிரமா இருக்கார் போல”

“ஆமா. ஆனா இப்போ  பண விஷயத்தில் கவனமா இருக்கார். ஆர்சி கிட்ட அட்வைஸ் கூட கேட்கிறாராம்” சந்தோஷமாக சொன்னான்.

ஹர்ஷா சாரிட்டி ஹாஸ்பிடல் பற்றி ஆர்சியிடம் ஆலோசனை செய்தான்.

“பிரின்ஸ், சிட்டி இல்லாம ஒரு ரிமோட் பிளேஸ் பார்த்து ஸ்டார்ட் செய்யலாம். ஆனா எனக்கு நீங்க ஒரு ரெண்டு மூணு வருஷம் கொடுக்கணும்”

“டேக் யுவர் டைம் ஆர்சி. நீ எவ்வளவு கடுமையா உழைக்கிறேன்ன்னு எனக்குத் தெரியும்”

“நான் மட்டுமல்ல, உங்க பியான்ஸியும் தான் தீயா வேலை செய்றா”

“தட்ஸ் குட்” ஸ்வாதி பொறுப்புடன் திறமையாக வேலை செய்கிறாள், சுயமாக திடமான முடிவுகளை எடுக்கிறாள்  என்று ஆர்சி சொல்லவும் ஹர்ஷாவிற்கு பெருமையாக இருந்தது. நாளை ராணியாக பொறுப்புகளை சுமக்க வேண்டியவள் அல்லவா.

“ப்ரின்ஸ் நீங்க WHO ல எல்லாம் சேர்ந்து வொர்க் செய்ய முடியாதா. நான் வாலண்டீர் வொர்க் செய்வேன் அப்பப்போ. உங்களைப் போல திறமையான டாக்டர்ஸ் அங்கே ரொம்பவும் தேவை. ஜஸ்ட் ஒரு சஜஷன் தான்” ஆர்சி சொல்லவும் உண்மையில் மகிழ்ந்து போனான் ஹர்ஷா.

ஹரிணியிடம் அது குறித்து ஆலோசிக்க அவள் உடனேயே அதற்கான நடைமுறைகளை கண்டறிய சொன்னாள்.

தங்கள் முடிவைப் பற்றி கணேஷிடமும் பூர்வியிடமும் தெரிவித்தனர்.

“நானும் ஒரு நாள் உங்களோட ஜாயின் செய்து கொள்வேன். பாஸ் தான் இங்கே கோர்ஸ் முடிஞ்சாலும் ஒன்னு ரெண்டு வருஷம் வொர்க் செய்ய சொல்லி அட்வைஸ் பண்ணிருக்கார்” கணேஷ் இப்போது சுயமாக திறம்பட சர்ஜரி செய்து ஹர்ஷாவின் ஒப்புதலை பெற்றிருந்தான்.

“ஆனாலும் இந்த பாஸ் கொஞ்சமாவது பாராட்டலாம்” ஹரிணியின் காதைக் கடித்தான்.

“அதான் அக்கா வண்டி வண்டியா பாராட்டை கொட்டுகிறாளே அப்புறம் என்ன” பூர்வி சீண்டினாள்.

“இரு பூரி மசாலா உன் கொட்டத்தை எல்லாம் அடக்க ஒருத்தன் வருவான், அப்போ பார்த்துக் கொள்கிறேன்” என்று எந்த முகூர்த்தத்தில் கணேஷ் சொன்னானோ.  அடுத்த மூன்று மாதங்களிலேயே  கௌசிக் ரஞ்சனோடு பூர்விக்கு திருமணம் நடக்கும் என்று அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை தான்.

பூர்வி இசைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாய் மியூசிக் அகாடமியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்திருந்தாள். அங்கு தான் கௌஷிக் ரஞ்சனை சந்தித்தாள்.

அவன் தமிழன் அவனது பூர்வீகம் மொரிஷியஸ் என அறிந்தவளுக்கு இயல்பாய் அவன் மேல் ஒரு பிரியம்.

“எப்போவோ இங்க வந்துட்டம். டெக்சாஸ்ல தான் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம். எங்க முன்னோர்கள் தமிழர்கள். எப்போது மொரிஷியஸ் வந்தனர் என்று தெரியாது. ஆனால் அமெரிக்காவில் குடிபுகுந்தது என் அப்பா காலத்தில் தான்”

“உலகத்தில எங்கு இருந்தாலும் நம்மை பிணைத்திருப்பது தமிழ் தான் இல்லையா” தெளிவாக தமிழில் பேசியவனை பூர்விக்கு மிகவும் பிடித்துப் போனது.

இருவரும் நல்ல நட்போடு பழகி வந்தனர். ரஞ்சனைப் பற்றி எல்லோரிடமும் சாதரணமாக சொல்லியிருந்தாள்.

நாளடைவில் ரஞ்சனோடான  நட்பின் நெருக்கம் நேசத்தை மலரச் செய்ய ரஞ்சன் ப்ரொபோஸ் செய்யவும் எஸ் சொல்ல மனம் துடித்த போதும் அக்கா அண்ணா கிட்ட கேட்கணும் என்று அவள் சொன்னதை மிகவும் ரசித்தான் ரஞ்சன்.

ஏற்கனவே ரஞ்சனிடம் ஹர்ஷா, ஹரிணி, கணேஷ் பற்றி பூர்வி சொல்லியிருந்ததால் அவர்களை சந்தித்த போது அன்னியமாக தோன்றவில்லை அவனுக்கு.

சாதரணமாக குடும்பம், தொழில், ஹாபி என்று பேசிக் கொண்டிருந்த போதும் ஹர்ஷா ஒரு கூர்மையுடன் அவனை ஆராய்வதை ஹரிணி கவனித்துப் புன்னகைத்தாள்.

ரஞ்சனின் பெற்றோர் வந்து பூர்வியைப் பார்த்து மனம் நிறைந்து பின் ஹரிணி ஹர்ஷாவிடம் பேசியது, பூர்வி ரஞ்சனை அழைத்துக் கொண்டு காலிபோர்னியா சென்று தனது சித்தாப்பாவிடம் அறிமுகம் செய்தது என அடுத்தடுத்து மளமளவென நடந்தேறியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.