பிறப்பால் மட்டும் அல்லாமல் தனது செயலால் ஒரு ராஜகுமாரனாக அவன் உருவாகி வருவதை பெருமையுடன் பார்த்திருந்தாள்.
பூர்விக்குக் குழந்தைப் பிறக்க தாய்வீட்டில் சீராட்டவென சென்னையில் ஹரிணியின் வீட்டிற்கு பாரதியும் கல்யாணியும் அழைத்து வந்திருந்தனர்.
சாரதா, ஸ்வாதி, ஆர்சி எல்லோரும் வந்து குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து கொண்டாட அழுதே விட்டாள்.
“அக்கா கொஞ்சம் வருஷம் முன்னாடி யாருமே இல்லாமல் இருந்தேன். இப்போ எனக்கு எவ்வளவு சொந்தங்கள்” ஹரிணியிடம் போனில் நெகிழ்ந்தாள்.
உண்மை தான். பல சமயங்களில் வாழ்க்கை நம்மை ஒரு கடினமான சூழ்நிலையில் நிறுத்தி விடுகிறது. பெரிய சோதனைகளை தந்து விடுகிறது. ஆனால் பிறகு வசந்தங்களை அள்ளி வீசும் போது கொடுப்பினையாக அவற்றைப் போற்றும் பக்குவத்திற்கு நாம் வர வேண்டும் என்பதால் தானோ அந்தச் சோதனைகள்.
கணேஷ் ராமின் வாழ்விலும் அம்ரிதமாய் வர்ஷினி பொழிந்திருக்க முத்தாய்ப்பாய் அந்த தகவலை சொன்னாள் ஸ்வாதி.
“விதுக்கா, ஷாஸா பிறந்த மிஷன் ஹாஸ்பிடல் இப்போ நிதி வசதி இல்லாம செயல்படாம இருக்காம். ஆர்சி அது பத்தி டீடைல்ஸ் தெரிஞ்சிட்டு வந்திருக்கான். நம்ம சாரிட்டி ஹாஸ்பிடல் ஆரம்பிக்க அது பெஸ்ட் பிளேஸ்ன்னு சொல்றான்”
அவள் சொல்லவும் ஹர்ஷாவிடம் அந்த செய்தியை சொன்னாள் ஹரிணி. ஒரு நிமிடம் அவன் கண் முன்னே அந்த ஹாஸ்பிடலும் அவன் தந்தையும் வந்து போயினர்.
இவர்கள் சம்மதம் சொல்ல ஆர்சியும் ஸ்வாதியும் மளமளவென மற்றப் பணிகளை மேற்கொண்டனர்.
இவர்கள் சீராக துடிக்க வைத்த எண்ணற்ற குழந்தைகளின் எதிர்காலம் ஓர் நாள் ஒளிமயமானதாக திகழும் என்ற நம்பிக்கையில் WHOவில் தங்களது சேவைப் பணியை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
இவர்களது சேவையைப் பாராட்டி ஐநா சார்பில் சிறப்பு விருது அளித்து கௌரவம் செய்தனர். செய்தித்தாளிலும், டிவி செய்திகளிலும் இந்தச் செய்தி வெளியாகவும் ஹர்ஷா ஹரிணியின் குடும்பம் சுற்றம் நட்பு அனைவரும் பூரித்தனர்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
எண்ணற்ற குழந்தைகளின் சிரிப்பின் முன், பல ஆயிரம் நோயாளிகளின் வாழ்த்துக்கள் முன் விருது என்பதெல்லாம் அவர்களுக்குப் பெரிதாக தோன்றவில்லை எனினும் தங்களை சிறப்பித்ததற்கு மனதார நன்றி தெரிவித்தனர் ஹர்ஷாவும் ஹரிணியும்.
தாங்கள் தொடங்கிய சேவை மருத்துவமனையில் பல நல்ல உள்ளங்களின் உதவியால் தங்களது பணியினை சிறப்பாக செய்து வந்தனர்.
இன்னும் அதை விரிவுபடுத்தும் எண்ணத்தில் புதிய வார்டுகள் மற்றும் ஐஸியூ கட்டும் பணி சிறப்பாக முடிவடைந்து திறப்பு விழா நடைபெற இருந்த நிலையில் ஹரிணியிடம் மிகவும் மகிழ்ச்சியான செய்தியை சொன்னான் ஹர்ஷா.
அவர்கள் படித்த மருத்துவக் கல்லூரியின் வைர விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இருவருக்கும் அழைப்பு வந்திருந்தது.
அவர்கள் வாழ்க்கையில் இன்று பெரிய உயரத்தை எட்டி இருக்கலாம். சிகரத்தை அடைந்து இருக்கலாம். விருதுகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் தாங்கள் முதன்முதலில் வெள்ளைக் கோட் அணிந்து ஸ்டேதேஸ்கோப் பிடித்த இடம் அவர்களை சிறப்பிக்க காத்திருப்பது பெருவரம் அல்லவா.
“நீ எதைத் தருகிறாயோ அதையே திரும்பப் பெறுவாய்” எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காது பிறருக்கு நன்மைகள் பல செய்த அவர்களுக்கு பல மடங்கு அவை திரும்பி வருவது இயற்கை தானே. இன்னும் நிறைய இனிமையான நிகழ்வுகளை தரக் காத்திருக்கிறது வாழ்க்கை என்பதை அறியாமல், தங்கள் நினைவுகளை நித்திரையில் தாலாட்டிக் கொண்டிருந்தனர்.
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப்பெறும்!
{kunena_discuss:1137}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.