(Reading time: 29 - 58 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 20 - மது

AT THE END OF INFINITY

Heart

டாக்டர் இன்னும் இரண்டு பேஷன்ட்ஸ் வரணும், ஆனா ஆளைக் காணோம். மழை வேற வரும் போல இருக்கு. கிளம்பலாமா” செவிலியர் வந்து ஹரிணியிடம் கேட்டனர்.  

“நீங்க எல்லோரும் கிளம்புங்க சிஸ்டர். நான் டாக்டர் ஹர்ஷா வந்ததும் அவர் கூட வந்துவிடுகிறேன். அந்த ரெண்டு பேஷன்ட்ஸ் வந்தா அவங்களை இங்கே அனுப்ப சொல்லி வாட்ச்மேன் கிட்ட சொல்லிடுங்க” ஹரிணி அவரிடம் சொல்லிவிட்டு ஜன்னலை நோக்கிச் சென்றாள்.  

அவர்கள் எப்போதும் கடலோர கிராமங்களுக்கு சென்று நடத்தும் மருத்துவ முகாமில் தான் இருந்தாள் ஹரிணி.

ஈஸ்வர் என்ற தொண்டுள்ளம் படைத்த பெரியவர் முகாமிற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.

மற்ற மருத்துவர்கள் முன்பே மக்களைப் பரிசோதித்து இதயக் குறைபாடு இருப்பின் அவர்களின் பெயரைப் பதிவு செய்து மாதமொரு முறை ஹர்ஷா, ஹரிணி முகாமிற்கு வரும் போது அவர்களை பரிசோதனைக்கு வர அறிவுறுத்துவார்கள். ஏதேனும் எமர்ஜன்சி என்றால் நேரடியாக மருத்துவமனைக்கே அனுப்பி விடுவர்.

அன்று மாலை திறப்பு விழாவிற்கு சாரதா, ஸ்வாதி இருவரும் வருவதால் ஏர்போர்ட்டில் இருந்து அவர்களை அழைத்து வர சென்றிருந்தான் ஹர்ஷா.

வானத்தில் கருமேகங்கள் திரண்டிருந்தன. பெருமழை வரும் போல இருந்தது.

அறையின் கதவு தட்டப்பட்ட உள்ளே வருமாறு  குரல் கொடுத்தாள் ஹரிணி.

இரு பெண்கள் அங்கே வந்திருந்தனர்.  தாயும் மகளும் போலும்.

“விமலா தானே” பதிவேட்டைப் பார்த்து ஹரிணி கேட்க ‘ஆம்’ என்று தலையாட்டினாள் சிறியவள்.

“தூரத்தில் இருந்து வருகிறோம். கொஞ்சம் தாமதம் ஆகிருச்சு, எங்கே முகாம் முடிந்து விட்டதோ என்று நினைத்தோம். நல்ல வேளையாக நீங்கள் இருக்கிறீர்கள் டாக்டரம்மா” என்றார் வயதில் மூத்த பெண்மணி.

அந்தப் பெண்ணைப் பரிசோதனை செய்தாள். முந்தைய மருத்துவக் குறிப்புகளையும் ஆராய்ந்தாள்.

“உங்கள் பெண்ணிற்கு கண்டிப்பாக ஆபரேஷன் செய்தாக வேண்டும். இனியும் தள்ளிப் போடுவது நல்லதில்லை. உங்களுக்கு ஒரு செலவும் இருக்காது. இந்தச் சீட்டை எடுத்துக் கொண்டு என்னை வந்து ஹாஸ்பிடலில் பாருங்க” ஹரிணி எடுத்துச் சொன்னாள்.

ஆனால் அந்தப் பெண்மணியின் கவலையோ வேறு விதமாக இருந்தது. தினக்கூலியில் பிழைப்பவர்கள். வேலைக்குச் சென்றால் தான் அன்றைய சாப்பாடு என்ற நிலையில் மருத்துவச் செலவு இல்லை என்ற போதும் ஒரு வார காலம் யாரேனும் ஒருவர் பெண்ணோடு மருத்துவமனையில் தங்குவது கடினம். இன்னும் மூன்று பிள்ளைகளுக்கு உணவளிக்க வேண்டுமே.

மருத்துவம் இலவசமாக கிடைத்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே அவர்களால். அந்தப் பெண்ணிற்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டியிருந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அந்தப் பெண்ணிற்கு சிகிச்சையும் கிடைக்க வேண்டும். சிறு பெண் என்பதால் பெற்றோரில் ஒருவர் உடன் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் குடும்பமும் கஷ்டப்படக் கூடாது. என்ன செய்யலாம் என யோசித்தாள் ஹரிணி.

“உங்கள் பெண்ணை முழு நேரம் கவனித்துக் கொள்ள டாக்டர்ஸ், நர்ஸ் எல்லோரும் இருப்பர். இருப்பினும் நீங்கள் அருகாமையில் இருப்பது அவசியம். இன்று புதியதாக வார்டுகள் மற்றும் ஐசியூ திறக்கவிருக்கிறோம். அங்கு பணிபுரிய  எங்களுக்கும் ஆள் தேவை. ஒரு ஷிப்ட் போல வேலை செய்தால் உங்கள் தினக்கூலி கிடைத்துவிடும். இது உங்களுக்கு சம்மதம் என்றால் யோசித்துச் சொல்லுங்கள்.” ஹரிணி அப்போதைக்கு ஓர் தீர்வை அவர் முன் வைத்தாள்.

அந்தப் பெண்மணி அவளது கரங்களைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டு கண்ணீர் வடித்தார். என்ன சொல்லி அவளுக்கு நன்றி தெரிவிப்பது என்று தெரியாமல் தவித்தவரிடம் மறுநாளே மருத்துவமனையில் வந்து பெண்ணை அட்மிஷன் செய்து கொள்வதே அவளுக்கு தெரிவிக்கும் நன்றி என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தாள்.

இன்று இவருக்கு தீர்வை சொல்லிவிட்டாள். ஆனால் அப்படி எத்தனை பேருக்கு வேலை போட்டுக் கொடுக்க முடியும். இதற்கு நிரந்தர தீர்வு என்ன. இது பற்றி ஹர்ஷாவிடம் பேச வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டாள்.

மழை பலமாக பொழியத் தொடங்கியது. மீண்டும் ஜன்னலின் அருகில் சென்று நின்று கொண்டு வெகு நேரம் மழையையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முன்பெல்லாம் மழை பெய்தால் அவளுக்குள் ஒரு உற்சாகமும் குதூகலமும் ஊற்றெடுக்கும். இப்போதோ மிக அமைதியாக இருந்தது அவள் மனம்.

ஒரு முறை தனது கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டாள். இந்நேரம் ஏர்போர்ட்டில் இருந்து ஹர்ஷா கிளம்பியிருக்க வேண்டுமே என்ற யோசனையில் இருந்தாள்.

மீண்டும் கதவு தட்டப்பட அவள் மெல்லத் திரும்பினாள். கதவருகில் உடையெல்லாம் ஈரமும் சேறுமாய் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.