(Reading time: 18 - 36 minutes)

அது கண்டிப்பாக நடிப்பில்லை.

ஒருவேளை என் மீது உள்ள ஆசையால் இப்படி செய்துவிட்டாளா?

அவனுக்கு விடையே கிடைக்கவில்லை.

ஆனது ஆகிவிட்டது. இனி அவள் என் மனைவி. இதற்கு முன்பு அவள் எப்படிப்பட்டவளாயினும் இருந்துவிட்டுப் போகிறாள். இனி தவறு செய்யக்கூடாது.

என் வாழ்வும் கேள்விக்குறி ஆனால் என் பெற்றோர் மிகவும் வருத்தப்படுவார்கள்.

அதனால் கண்டிப்பாக நான் இந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

மனதில் உறுதி எடுத்துக்கொண்டவன் திரும்பிப்படுத்தான்.

அவளும் அவன் பக்கம் திரும்பிப்படுத்திருந்தாள்.

அவளால் உண்டான மன உளைச்சலுக்கு அவளது முகமே மருந்தாய் அமைய அவளது முகத்தைப் பார்த்தவாறே உறங்க முற்பட்டான்.

காலையில் அலுவலகத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ே காணோம்?

தேடியவாறே வந்தவனின் கண்களில் அவள் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது பட அவளை நெருங்கினான். அவன் அன்றொரு நாள் அவள் வழியை மறித்து அவளிடம் காதலைச் சொன்னவன். அப்போது அவள் தன்னைக் கண்டு ஓடி வந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது.

இப்போது அவனிடம் என்ன பேச்சு?

அவர்களை நெருங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.