(Reading time: 14 - 27 minutes)

"இப்படியே இருந்திடலாமோனு தோணுது" வசந்த் கவலையோடு சொன்னான்.

அமேலியா அவன் நெஞ்சை சாந்தமாக தடவி ஆறுதல் கொடுத்தாள். அமேலியாவின் மென்மையான ஸ்பரிசம் வசந்தின் உள்ளத்தை சாந்தப்படுத்தியது.

எவ்வளவு நேரம் அங்கிருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. மீதமிருக்கும் நேரமும் அவர்களுக்கு போதுமா என்று புரியவில்லை. சூழ்நிலையால், போதும் என்று மனநிலைக்கு அவர்கள் இருவருமே வந்துவிட்டார்கள்.

அமேலியா வசந்தை பிரிந்து கீழே செல்ல முடிவெடுத்து கால்களை எடுத்து வைக்க, அவள் பிரிவைத் தாங்கமுடியாத வசந்த், அவளை மீண்டும் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். முத்தத்தின் போதையில் இருந்து மீளமுடியாத அமேலியா கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவளது உடல் லேசாக நடுங்கியது.

வசந்த் அவள் தோள்களை மெல்ல குலுக்கிய பின்தான் அமேலியா சுயநினைவுக்குள் புகுந்தாள். மேற்கொண்டு அங்கே நிற்க விரும்பாத அவள் அவ்விடத்தை விட்டு வேகமாக சென்றாள். அவள் செல்வதையே வேடிக்கை பார்த்தபடி நின்றான் வசந்த்.

அமேலியாவிற்கு உறக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டபடி இருந்தாள். அவ்வப்போது வசந்த் கொடுத்த முத்ததை எண்ணிப்பார்த்தபடி இருந்தாள். கன்னத்தை வருடினாள். தனக்குத் தானே சிரித்துக்கொண்டாள். மீண்டும் இன்பவானில் சிறகை விரித்து பறந்தாள்.

றுநாள் காலை தயாரிப்பாளரின் ஆபிசை அடைந்தான் வசந்த். அவனுக்கு வர விருப்பமில்லை. இருந்தும், 'என்ன தான் நடக்கிறதென்று சென்று பார்ப்போமே? திடீரென ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் சந்தோஷம் தானே' என்ற எண்ணத்தில் அங்கே சென்றான்.

ஆபிசில் உள்ள ஒருவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட வசந்த், "தயாரிப்பாளரை பார்க்கவேண்டும்" என்று கூறினான்.

"சார் கொஞ்ச நேரம் உங்கள வெய்ட் பண்ண சொன்னார்"

"எப்போ வருவார்னு தெரியுமா?"

"சாரி சார்"

வசந்த் வெறுப்போடு காத்திருக்கத் தொடங்கினான். மற்றொரு இருக்கையில் இருந்த செய்தித்தாளை எடுத்து புரட்டி நேரத்தைப் போக்கினான்.

நேரம் கடந்துகொண்டே போனது. இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் கடந்தது. வசந்த் பொறுமை இழக்கத் தொடங்கினான். எழுந்து சென்று விடலாமா என்று கூட சிந்தித்தான்.

அந்த நேரத்தில் ஆபிசில் வேலை செய்யும் ஒருவன் அவன் முன்னால் வந்து நின்றான்.

"நீங்க தான வசந்த்?"

"ஆமா"

"சார் உங்களை கோல்ஃப் கிளப்புக்கு வர சொன்னாரு"

வசந்திற்கு கோபம் தலைக்கேறியது, பொறுத்துக்கொண்டான். "எங்க இருக்கு?"

கிளப் இருக்கும் இடத்தை சொன்னான் வேலை செய்பவன். அடுத்த நிமிடமே அங்கிருந்து புறப்பட்ட வசந்த் அரை மணி நேரத்தில் கோல்ஃப் கிளப்பை அடைந்தான். கோல்ஃப் மெம்பர்ஸ் மட்டுமே உள்ளே செல்ல முடியுமாதலால் அங்கேயும் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட வசந்த் கோபத்தின் உச்சத்திற்கே சென்றான்.

'நாம் எதற்காக காத்திருக்கவேண்டும்? இந்த வாய்ப்பே எனக்கு வேணாம்' என முடிவெடுக்கையில் அவன் போன் அலறியது. போனை எடுத்து பார்த்தான். ஜெஸிகா தான் அழைத்தாள்.

"ஹலோ"

"தயாரிப்பாளரை பாத்தியா?"

"காலையில வந்தேன். மணி நாலு ஆகுது. இன்னும் பாக்கல. கிளம்பலாம்னு முடிவெடுத்திருக்கேன்",

"உன் அவசர புத்தியை ஆரம்பிச்சிட்டியா? அவருக்கு உன்னை சந்திக்கிறது மட்டும் தான் வேலையா? ஏதாச்சும் பிசியா இருப்பாரு".

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"அப்போ எதுக்கு என்னை வர சொல்லணும்?"

"உனக்கு எல்லாமே ஈசியா கிடைச்சிடணும்னு நினைக்கிறியா வசந்த்?".

"இப்போ நான் என்ன செய்யணும்னு விரும்புற?"

"வெயிட் பண்ணு"

"சரி. இந்த ஒரு நாள் என் கோவத்தை விட்டுட்டு நீ சொன்னதை செய்யுறேன்".

வசந்த் காத்திருக்கத் தொடங்கினான். இரவும் எட்டிப் பார்த்துவிட்டது. தயாரிப்பாளர் வரவேயில்லை. அதன்பின் தான் அதிர்ச்சிகரமான உண்மையை வசந்த் தெரிந்துகொண்டான்.

தயாரிப்பாளர் கோல்ஃப் விளையாட அவ்விடத்திற்கு வரவேயில்லை!

தொடரும்...

Episode # 52

Episode # 54

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.