(Reading time: 7 - 13 minutes)

டேய் மாமா என்று முறைத்தாள்.

இரு டவுட் கிளீயர் பன்னிட்டு வரேன். ஏன் தாத்தா எங்க அம்மாவையும் பாப்பா தான் இவளையும் பாப்பா தான். மஹி லக்ஷ்மி எல்லாரும் பாப்பா தான் . ஏன் வேற பேரு கிடைக்கலையா?

எங்கப்பா என்னையும் அவரு பேத்திகளையும் எப்படி நாளும் கூப்பிடுவாரு உனக்கு என்ன?

அப்படி சொல்லு அத்தை என்று அத்தையும் மருமகளும் ஹைபை கொடுத்தனர்.

 கூட்டணி போட்டுட்டீங்க இனி இங்க நிக்க முடியாது நான் கிரவுண்ட் கிளம்புறேன்.

ஹேய்ய்ய் சஹி லூசுசு. ஹெய்யய்ய சஹி அக்கா.

 நம்மளை லூசு என்று அழைக்கும் ஒரு உறவு இருந்தால் அந்த உணர்வே தனி தான்.சகிக்கும் இப்போது அப்படி ஒரு உணர்வை கொடுத்தவள் அவளின் அத்தை மகள் அனிஷா. அக்கா என்ற பாச குரலை உடையவள் சஹியின் சித்தப்பா மகள் லக்ஷ்மி. இருவரும் ஸ்கூல் யூனிபோர்ம் அணிந்து ரெடியாக வந்தனர். ஹாய்

முக்கா லூசு என்று அனிஷா விடமும். ஹாய் லச்சு என்று இருவரையும் அணைத்தாள்.

அட ச்சை என் ட்ரெஸ்ஸ கசக்காத என்று அனிஷா சஹியை ஒரு அடி போட்டாள்.மஹி அயன் பண்ணி இப்போ தான் குடுத்தா அதுவும் ரெம்ப கெஞ்சுனேன் அப்புறம் தான்.

பொய் கா மஹிக்கா எனக்கு தலை சீவும் போது அயன் பண்ணி கொடுத்தாலே குடுன்னு உசுர வாங்கிட்டாங்க அனிஷாக்கா.

 ஏய் கம்பிளைன்ட் பாக்ஸ் போட்டு குடுக்குரியா என்று லக்ஷ்மியை நெருங்கவும் சஹி அணியின் ரிப்பன் ஐ அவிழ்த்து விட்டு ஓடி விட்டாள்.

இந்த குரங்கு எப்போவும் இப்படி தான்.

 என் மருமகளை குரங்குனு சொன்ன கொன்னுருவேன்.

 நீயெல்லாம் ஒரு அம்மா பெத்த மகளை விட்டுட்டு அந்த லூசுக்கு சப்போர்ட் எப்போவும்.

சஹி நான் பெறாத மகள் டி. சின்ன வயசுல எப்போவும் என்ன பிடிச்சுக்கிட்டே தான் இருப்பா.

சரி சரி உங்க பாச கதையை கேட்டுட்டு வீட்டுல உக்கார முடியாது வந்து ரிப்பன் கட்டு.

பாய்ய்ய் அத்தை பைய் மா.

என்ன மக்கு ஹாயா படுத்திருக்க.

ஏன் பிசாசே இப்போ தான் படுக்கறேன். நைட் தூங்கலை.உனக்கு அது பொறுக்கலயா.

 ஏன் தூங்கலை படம் பாத்தியா.

 நல்லா வாயில வருது. ப்ராஜெக்ட் ஒர்க் சக்கு. நான் தூங்குறேன்.

அம்மா பசிக்குது சாப்பாடு குடு.

ஐயோ ஆண்டவா போய் குளிச்சுட்டு வா. தரேன் ஒருத்தி சாப்பிட வா நா வர மாட்டிக்குறா ஒருத்தி சாப்பாடு பிடிக்கலைனு போறா நீயாச்சு சாப்பாடு நு வரியே.சந்தோசம்.

என்னமா ஏன் டென்ஷன்.

அது ஒன்னும் இல்ல சஹி லச்சுக்கு சாப்பாடு பிடிக்கலை யாம். அதான் டென்ஷன் அக்காக்கு என்று சங்கீத கூறினார்.போய் ரெஸ்ட் எடு சஹி. நாளைக்கு தூள் கிளப்பனும். மாப்பிள்ளை பேசுனாங்களா?

இல்லை சித்தி மே பி தூங்குறாங்கனு நினைக்குறேன்.

சின்ன சின்ன கனவுகள்

சின்ன சின்ன குறும்புகள்

 எல்லாம் சேர்த்து செய்த வீடிது

 சின்ன சின்ன சிரிப்புகள்

 சின்ன சின்ன சண்டைகள்

 சங்கீதமாய் மாறும் இடமிது

இந்த கூட்டு குடும்பத்தில் வாழ

 சொர்க்கம் ஏங்கும்

எங்கள் வீட்டுக்குளே வேடந்தாங்கல்

இது தான் சந்தோஷம் இது தான் உற்சாகம்.

விடுதலை விடுதலை இன்னைக்கு ஹோம் ஒர்க் இல்லை.

வந்துட்டியா முக்கா லூசு.

ஆமா வந்துட்டேன் முழு லூசு.

 நாளைக்கு எங்க அண்ணன் அதான் உன் ஆள் வர போறாங்க நம்ம வீட்டுல பங்சன் சோ நாங்க எல்லாரும் லீவ் போட்டுருக்கோம்.

நாளைக்கு சாயுங்காலம் தான் பங்சன். அது வரைக்கும் எழுதலாமே.

முடியாது முடியாது என்று கோரஸ் பாடினர்.

நாங்க நாளைக்கு என்ன டிரஸ் போடறோம்னு எடுத்துட்டு வரோம் கா என்று கடைசி தங்கை ரியா ஓடினாள்.

அக்கா நான் வேஷ்டி கட்ட போறேன் என்றான் ஈஸ்வர்.

உன் சைஸுக்கு வேஷ்டியா டா. போ டா போய் த்ரீ போர்த் போடு அதுவே பாண்ட் மாதிரி இருக்கும் என்றாள் அனிஷா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.