(Reading time: 12 - 24 minutes)

ஹே மச்சி லண்டன்ல இருந்து வந்துருக்கான்னா, சார்லஸ் வெள்ளைக்காரன் போல.. நம்ம இண்டர்ன்ஷிப் ஜாலியா போகப் போகுதுடி” என்று இலக்கியா  சொல்லவும்,

“ஆமா இவ பெரிய டயானா நம்ம பார்க்கப் போறது இளவரசர் சார்லஸா பேசாமா வாடி” என்று அருள் சலித்துக் கொண்டாள்.

“சரி நீயே டயானாவா இருந்துக்க, எனக்கென்ன ஆச்சு.. அதுக்கு ஏன் இப்படி சலிச்சிக்கிற..” என்று திரும்ப இலக்கியா பதில் கூறவும், அருள் அவளை முறைத்தாள்.

அதற்குள் அவர்கள் பார்க்க வேண்டிய அந்த சார்லஸின் கேபின் வரவும், அவர்கள் பேச்சை விட்டுவிட்டு இருவரும் ஒருமுறை கதவை தட்டிவிட்டு திறந்தனர்.

உள்ளே ஒருவரும் இல்லை, “என்னடி யாரையும் காணோம்” என்று இலக்கியா கேட்க,

“எனக்கு மட்டும் என்னடி தெரியும்.. கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுவோம்..” என்று பதில் கூறிய அருள்,

“ஹே மச்சி சார்லஸ் வெள்ளைக்காரன்னு சந்தோஷப்பட்றியே, அந்த ஆள் கிழவனா இருந்தா என்னடி பண்ணுவ?” என்றுக் கேட்டாள்.

“அப்படி இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை தான்..” என்று சொல்லி இலக்கியா அசட்டு சிரிப்பு சிரித்தாள்.

“ஆமாம் நீ சொல்லு.. நீ எதுக்கு வெள்ளைக்காரன்னு சொன்னதும் சலிச்சிக்கிட்ட..”

“நாம இங்க இண்டர்ன்ஷிப்க்காக வந்துருக்கோம்.. இந்த ஒரு மாசத்துல எவ்வளவு தெரிஞ்சிக்க முடியும்.. இதுல என்னத்தான் நம்ம கொஞ்சம் இங்கிலீஷ் பேசினாலும், அவங்க பேசற ஸ்டைல்க்கு நமக்கு ஒன்னொன்னும் புரிஞ்சிக்கவே லேட்டாகுமே அதான் யோசிச்சேன்..”

“அது என்னவோ உண்மை தான், நீயே இதுக்கு கவலைப்பட்டா அப்போ நான் என்ன செய்றது.. சரிடி இப்போ வந்துட்டோம் இருந்து முடிச்சிட்டு தானே போகணும்..”

“ம்ம் ஆமாம் நம்ம ட்ரெயின் பண்ண போறவங்க யாரா இருந்தாலும், அவங்கக்கிட்ட இருந்து கத்துக்கிட்டு தானே ஆகணும்..” என்று அருள்மொழி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கே அலமாரியாக இருந்தது இப்போது  கதவாக மாறி அதை திறந்துக் கொண்டு ஒருவன் வரவும், இருவரும் திகைப்போடு அவனை பார்த்தனர்.

அதுவும் அங்கே ஒரு வெளிநாட்டவனை அவர்கள் எதிர்பார்த்திருக்க, அங்கு இருந்தவனோ தமிழ்நாட்டை சேர்ந்தவனாக இருந்தான். உள்ளே ஒரு அறை இருப்பது வேறு தெரியாமல் அவர்கள் பேசிக் கொண்டு வேறு இருந்தனர். அதையெல்லாம் அவன் கேட்டிருப்பனா? என்ற சந்தேகமும் அவர்களுக்கு வந்தது. இருந்தும் அவர்கள் ஒன்றும் தவறாக எதும் பேசிவிடவில்லையே, அதனால் அதற்கு அவர்கள் பயப்படவுமில்லை. தைரியத்தோடு தான் நின்றிருந்தனர்.

“ஹலோ நீங்க என்னோட கேபின்ல என்ன பண்றீங்க? உங்களுக்கு என்ன  வேணும்?” என்று அந்த ஆடவன் கேட்கவும்,

“சாரி நாங்க மிஸ்டர் சார்லஸ் அவரோட கேபின் நினைச்சு இங்க வந்துட்டோம் போல, ஆனா இது அவரோட கேபின் தானே, ரைட் திரும்பினா பர்ஸ்ட் கேபின்னு சொன்னங்க.. நாங்க கரெக்டா தானே வந்திருக்கோம்..” என்று அருள்மொழி அவனுக்கு பதில் சொல்லும்போதே, அங்கே இருந்த  மேசை மேல் இருக்கும் அவனது பெயர் பலகையை பார்த்துவிட்டாள்.

“ஆக்சுவலா நாங்க இண்டர்ன்ஷிப் பண்றதுக்காக வந்தோம்.. மிஸ்டர் சார்லஸ் தான் எங்களுக்கு ட்ரெயினிங் கொடுக்கப் போறாரு.. அவர் கேபின் எங்க இருக்கு?’ என்று இலக்கியா கேட்டாள். அதற்குள் அருள் அவளை சீண்டி அந்த பெயர் பலகையை பார்க்கச் சொல்லி ஜாடை காட்டவும், அவளும் அதி இருந்த சார்லஸ் அமுதவாணன் என்ற பெயரை பார்த்து அவர்கள் பார்க்க வந்தது அவன் தான் என்று தெரிந்துக் கொண்டாள்.

“ஓ நீங்க தான் சார்லஸா..?” என்று அவள் கேட்கவும்,

“ஏன் என்னோட பேர் சார்லஸா இருக்கக் கூடாதா? நீங்க எப்படி எதிர்பார்த்தீங்க? லண்டன்ல இருந்து வந்த சார்லஸ்னா வெள்ளைக்காரன் அதுவும் வயசான வெள்ளைக்காரனா இருப்பான்னு நினைச்சீங்களா?” என்றுக் கேட்கவும், அவன் இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டான் என்று இருவருக்கும் தெரிந்துவிட்டது. அதை அவன் எப்படி எடுத்துக் கொண்டானோ என்று தெரியாமல் அவர்கள் விழித்தப்படி நிற்க,

“ஹலோ என்னை பார்த்தா வில்லன் மாதிரியா தெரியுது.. ஏன் இப்படி பயந்த மாதிரி பார்க்கிறீங்க? எதை நினைச்சும் பயப்படாம ஃப்ரியா இருங்க

நான் உங்களை ட்ரெயின் பண்ணப் போறதில்ல, நீங்க தான் இந்த ஒரு மாசத்துக்கு நான் செய்ய போற ப்ராஜக்ட்க்கு என்னை அசிஸ்ட் பண்ணப் போறீங்க..” என்றதும் அவர்கள் இருவரும் அவனை திகைப்புடன் பார்க்க,

“நம்மளால முடியுமான்னு நினைச்சு பயப்படாம, நம்மளால் முடியும்னு நினைங்க, நான் தான் உங்க கூட இருக்கேன்ல்ல.. சோ கூல்.. நாம இன்னைல இருந்தே வொர்க் ஆரம்பிக்க போறோம் சரியா?” என்றதும் புன்னகையுடனே இருவரும் தலையாட்டினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.