(Reading time: 12 - 24 minutes)

முதனோடு ஒருவாரம் சுற்றி திரிந்துவிட்டு,  இதோடு வேலை முடிந்து நாடு திரும்பும் போது தான் பார்க்க முடியும் என்று சொல்லி அவன் வேலையில் மூழ்கி விட, அதன்பின் தான் சுடரொளி மகியை காண வந்தாள்.

அவள் வந்தால் அவளோடு பேசக் கூடாது என்று தான் அவன் நினைத்தான். ஆனால் அவனால் அது முடியவில்லை. அதிலும் அவள் மிகவும் மகிழ்ச்சியான மன நிலையில் புன்னகை முகமாக வந்திருக்க, அதைப் பார்த்தும் அவனால் எப்படி அவளிடம் பாராமுகமாக நடந்துக் கொள்ள முடியும்?

அவள் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள நினைத்தான். அவளின் மகிழ்ச்சிக்கான காரணத்தை அறிய நினைத்தான்.

அவளது மகிழ்ச்சிக்கான காரணம் வேறொன்றும் இல்லை, அவள் வேலைக்கு சேர்ந்து இன்னும் ஒரு மாதம் முழுதாக முடியவில்லையென்றாலும், அடுத்த மாதம் தொடங்கிவிட்டதால், எத்தனை நாள் வேலை செய்திருந்தாலோ அத்தனை நாள் கணக்கு போட்டு அவளது முதல் மாத சம்பளத்தை கொடுத்திருந்தனர்.

அவள் உழைப்புக்கு வந்த முதல் ஊதியம் அதனால் தான் அவள் மிக்க மகிழ்ச்சியோடு இருந்தாள். அவன் முன்பு கேட்டது போல் அவனுக்கு ட்ரீட் கொடுப்பதற்காகவே அவனை தேடி வந்தாள்.

“நான் சும்மா தான் அன்னைக்கு ட்ரீட் கேட்டேன்.. அதுக்காக இப்போ காசு செலவு பண்ணம்னு அவசியமில்லை. உனக்கு பிடிச்ச டிஷ் சொல்லு, நம்ம செஃப் கிட்ட,சொல்லி செய்ய சொல்றேன்.. நாம இங்கேயே செலப்ரேட் செய்யலாம்..” என்று மகி சொல்ல,

“அய்யோ மகிழ்..  இன்னைக்கு ஒரு நாளாவது ஒரு நல்ல ரெஸ்ட்டாரண்ட்க்கு உன்னை கூட்டிட்டு போகலாம் பார்த்தா, அதுக்கு உனக்கு கொடுத்து வைக்கல போ..” என்று கேலியாக கூறினாள்.

“ஓய் என்ன கொழுப்பா.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த ரெஸ்ட்டாரண்ட வேர்ல்ட் லெவல்க்கு உயர்த்தி காட்டல.. என்னோட பேரை மாத்திக்கிறேன்..

நீ எந்த ரெஸ்ட்டாரண்ட்க்கு கூட்டிட்டு போனாலும், Mrs. பூங்கொடி ரெஸ்ட்டாரண்ட்க்கு ஈடாகாது..”

“பூங்கொடி ரெஸ்ட்டாரண்டா அது எங்க இருக்கு?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நான் சொன்னது எங்க அம்மா சமையலை, சரி நீ இவ்ளோ பேசினதால, உனக்கு பனிஷ்மெண்ட் இந்த ரெஸ்ட்டாரண்ட் சாப்பாடு தான் இன்னைக்கு..” என்று அவளை அழைத்துச் சென்றான்.

பொதுவாக இருக்கைகள் போடப்பட்டிருக்கும் இடத்தில் இல்லாமல் குடும்பத்துடன் சாப்பிடுவதற்காக இருக்கும் ஒரு அறைக்கு அவளை அழைத்துச் சென்றவன், அவள் முன் ஒரு பீர் பாட்டிலை வைத்தான்.

அதைப் பார்த்து அவள் திகைக்க, “மனசுல இருக்கும் சந்தோஷத்தை எந்த கவலையும் இல்லாம எஞ்சாய் பண்ணம்னு சொல்லுவ இல்ல.. இந்தா இப்படி எஞ்சாய் பண்ணு.. நீ அடிக்கிற சரக்கோட ப்ராண்ட்லாம் எனக்கு தெரியாது.. இதுதான் எனக்கு தெரியும், அதுவும் இங்க ஒரு ஸ்டாஃப்கிட்ட சொல்லி தான் வாங்க சொன்னேன்.. ஓகே ஸ்டார்ட் தி ம்யூசிக்” என்றான்.

முன்பு இருந்த தனிமையில் அவளுக்கு இப்படிப்பட்ட விஷயங்களில் நாட்டம் போனது. அதுவும் மிக அரிது தான், ஆனால் இப்போது அப்படி இதை குடித்து தான் ஆக வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. இருந்தும் அவன் வாங்கி கொடுத்ததற்காக அதில் கொஞ்சம் குடித்தாள். அவனுக்கும் வேண்டுமா என்று கேட்டதற்கு அவன் மறுத்துவிட்டான்.

அவள் மது அருந்துவதும் அரிது தான் என்பதால் கொஞ்சம் குடித்ததிலேயே அவளுக்கு போதை அதிகமாகிவிட்டது.

“மகிழ் நீ எவ்வளவு நல்ல நல்லவன்.. சார்லி கூட இதுக்கெல்லாம் தடா தான் போடுவான்.. ஆனா அவன் மட்டும் ப்ரண்ட்ஸோட ஜாலியா பார்ட்டிக்கு போவான்.. ஆனா நீ தான் இந்த உலகத்திலேயே ரொம்ப ரொம்ப பெஸ்ட்” என்றவள், இன்னும் கூட அந்த போதையில் என்னென்னவோ பேசியவள், அப்படியே உறங்கியும்விட்டாள்.

சாதாரணமாக என்றால் மகி இதை செய்திருக்கமாட்டான். ஆனால் அவளின் கருப்பு பக்கங்களை அறிந்தவனுக்கு, அவளை மகிழ்ச்சியாக மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதெல்லாம் செய்ய காரணம்,

“இருந்தாலும் இதுதான் பர்ஸ்ட் அன் லாஸ்ட் சுடர்.. இந்த பழக்கம் தொடர்ந்து இருந்தா தப்பு.. அதனால வேண்டாம் சரியா?” என்று கேட்கவும்,

அந்த உறக்கத்திலும் “சரி மகிழ்” என்று கூறினாள்.

“ஆனால் இப்படி கொஞ்சம் குடிச்சதுக்கே மட்டையாயிட்டாலே இவளை எப்படி வீட்டுக்கு கூட்டிட்டு போவேன்.. ரெண்டு வீட்டுக்கு போனாலுமே என் மேலே சாமியாடிடுவாங்க.. அவளுக்கு சந்தோஷம்னு செஞ்சாச்சு.. இப்போ என்ன செய்றது..” என்று தெரியாமல் விழித்தான்.

உறவு வளரும்...

Episode # 28

Episode # 30

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.