Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

ந்த நிலையில் தான் சண்முகத்தின் நெருங்கிய உறவினன் வீட்டு திருமணத்திற்கு தன் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது சண்முகம் குடும்பத்தாருக்கு.

நான்கு நாட்கள் ஊரில் இருந்தே தீர வேண்டும். செய்ய வேண்டிய சீர்,  வரை முறை என்று நான்கு நாட்கள் அங்கே இருப்பதாய் முடிவெடுக்கப்பட , கதிரை மட்டும் விட்டுவிட்டு அனைவரும் செல்ல வேண்டும் என்று சண்முகம் முடிவெடுக்க, இளம்பிறை நிச்சயம் கதிரோடு இருக்க வேண்டும் என்று பாட்டி பிடிவாதம் பிடிக்க, இளம்பிறையும் தனக்கு வர விருப்பம் இல்லை என்று மறுக்க,  சண்முகம் வருந்துவதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

மனமே இல்லாமல் அவளை கதிரிடம் தனியே விட்டு செல்ல, முதல் நாள் இரவே சோதனையை சந்திக்க நேர்ந்தது  இளம்பிறைக்கு.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவ்வளவு பெரிய வீட்டில் அவனை தனியே விட்டு செல்ல மனம் இன்றி அன்று  KJ கும் போக வில்லை அவள். எதை கொடுத்தாலும் வேண்டாம் என்று கதிர் மறுக்க, அவள் பிடிவாதமாய் உணவை உண்ண வேண்டும் என்று அவன் வாயில் திணிக்க, அரை போதையில் இருந்தவன் அவளை முறைத்தபடி உண்டுவிட்டு மேலும் குடிக்க செல்ல “சே” என்று இருந்தது அவளுக்கு.

எத்தனை நேரம் இப்படி இருப்பது என்று எண்ணியவள் மடிக்கணினியில் மூழ்கிவிட நேரம் போனதே தெரியவில்லை. வேலை அவளை வெகுவாய் தன்னுள் மூழ்கடித்து கொள்ள, அவள் நா வறண்டு தாகம் எழுப்பிய நேரத்தில் தான் கவனத்தை தாகம் நோக்கி திசை திருப்பினாள் இளா.

வேலையில் இருந்து கவனம் சிதறிய நேரம் கதிரின் நினைவு அவளை ஆக்கிரமித்தது. கதிர் என்ன செய்து கொண்டிருப்பான் என்று எண்ணியவள் இல்லத்தில் இருக்கும் மினி பார் அறைக்குள் செல்ல, காலி மது பாட்டில்கள் சிதறிக்கிடக்க, கதிரை காணாமல் போகவே எங்கு சென்றிருப்பான் என்று யோசித்தவள் அவனை காண வெளியே செல்ல நினைத்த நேரம், பக்கவாட்டில் இருந்த பாட்டியின் அறைக்குள் மெல்லிய வெளிச்சத்தில்  நிழல் ஆடுவது போல் ஏதோ தோன்ற பூட்டிய அறையில் எவ்வாறு ஒருவர் உள்ளே போக கூடும்? என்று எண்ணியவளுக்கு அப்போது தான் பாட்டி  அறையின் மற்றொரு வழி நினைவிற்கு வந்தது.

 அவள் சந்தேகித்தது போல் தோட்டத்தின் பக்கம் இருந்த வழி பூட்டப்படாமல் இருக்க உள்ளே சென்ற அவளோ அதிர்ந்து நின்றாள்!

 காரணம் பூட்டியிருந்த பீரோவில் இருந்து  ஒருவன் நகைகள் மற்றும்  பணத்தை எடுத்துக்கொண்டிருக்க இவளோ “திருடன்,திருடன்” என்று கத்த ஆரம்பித்தாள் வாயிற் காவலன்  வரக் கூடும் என்ற எண்ணத்தில்.

ஆனால் அவன் மயக்கத்தில் இருக்கிறான் என்று  அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. இவள் போட்ட சத்தத்தில் அந்த திருடன் அவளை கோபமாய் முறைக்க, அவளோ அவனை தாக்க ஏதேனும் கிடைக்குமா என்று சுற்றி  பார்த்துவிட்டு ஏதும் கிடைக்காமல் போகவே பாலாஜி அண்ணா சீக்கிரம் வாங்க, கதிர் வாங்க என்று குரல் எழுப்ப தொடங்கினாள்.

“ஏய் நீ என்ன காட்டு கத்தல் கத்தினாலும் யாரும் வர போறதில்லை. ஒழுங்கா என் வேலையை பண்ண விடு இல்ல அப்புறம் சேதாரம் பயங்கரமா இருக்கும்” என்று மிரட்டிவிட்டு அவன் மீண்டும் நகைகளை அள்ள, இவளுக்கு "என்ன திமிர் இவனுக்கு?" என்ற எண்ணம் தோன்றவும் அருகில் இருந்த பூச்சாடியை எடுத்து இவனை அடிக்க வர, அவனோ இவளை கொசுவை பார்ப்பதை போல் பார்த்துவிட்டு, தன் வேலையை செய்ய விடாமல் தடுக்கிறாளே என்று எண்ணிய வேளை “ஒழுங்கா சொல்றேன் போயிடு!”என்று அவன் எச்சரிக்க, அவளோ விடாமல் கதிர் கதிர் என்று கத்த, இது தனக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என்று எண்ணியவன் அவளை கட்டிப்போடும் நோக்கோடு வர,

அவளோ கதிரை உதவிக்கு அழைக்கும் எண்ணத்தில் “கதிர்.. கதிர் ..எங்க போய் தொலைஞ்சீங்க” என்று கத்தவும், அவன் போதையில் பாட்டியின்  ரெஸ்ட் ரூமில் இருந்து வரவும், அவனை அங்கு பார்த்ததில் சிறிது வியப்பும், சிறிது நிம்மதியும் அடைந்தவள் “கதிர் இவன்” என்று அவன் அருகே போக 

அந்த திருடனோ , “என்ன கதிர் இது?  உனக்கு வேணும்ங்கிறதை எடுத்துக்கோன்னு நீ சொன்ன? இப்ப இவ என்னடான்னா என்னை எடுக்க விட மாட்டேங்குறா” என்று அவன் இளம்பிறையை குறை சொல்ல,

“கதிரோ ஹே அவன் என் பிரெண்டு, நான் தான் அவனை இங்க கூட்டிட்டு வந்தேன், அம்மா ரூம் லாக்கர் எல்லாமே பூட்டி இருக்கு, ஹனி எனக்காக பூட்டாம விட்டிருக்காங்க போலிருக்கு, ஷி இஸ் ஆல்வேஸ் மை ஸ்வீட் ஹனி.  அவனுக்கு வேணும் அவன் எடுத்துக்கிறான் உனக்கென்ன? என்று இவளிடம் போதையில் சொல்லிவிட்டு “நீ எடுத்துக்கோ ..நீ எல்லாத்தையும் எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு அவன் மதுவை நாடி சென்றுவிட்டான்.

கதிரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று யோசித்தவள் அவனிடம் கூச்சலிட்டபடி மல்லுக்கு நிற்க

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# Unnil tholainthavan nanadeeNageswari sudharsan 2018-10-08 19:01
Hi such a nice update.actually I start to reading chillzee stories from your story only this one.i like this very much. And now I readout all stories from chillzee.this credits to you only. And in begining I read all episodes which ever updated but after that I was confused where is the balance episodes oh my god 😂😂😆.because I am new that's why.after that I sent mail to chillzee regarding balance episodes very funny LA 😁😁😁.keep rocking and thank you for your lot of efforts .and all chillzee writers also. And one more thing I love baby moon name. How you get this idea. I will consider in my future baby name if girl means because I don't know I love this name a lot 😍😍😍😍.i like Tamil names. Thank you so much. Pls update rest of episodes monthly twice. 👍👍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையாsaaru 2018-10-05 23:09
Nice update
Ila kubenna problem
Kathir super
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையாAdharvJo 2018-10-05 18:53
:eek: Kathir ippadi thirudan-i ellam frnd aga vachikitta ippadi thaan facepalm Ketadhil oru naladhu so hero form-k ini vandhudu varu :dance: Ila oda dad ila meethu vaithu irukkum pasam awesome :hatsoff: thank god she is out of danger. Also as a frnd ashok, kadhir-k suportivaga irupadhu super (y) Ini ena agum therindhu kola waiting. Thank you for the interesting updates ma'am :clap: :clap:
Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையாmahinagaraj 2018-10-05 11:44
ரொம்ப நல்லாயிருக்கு... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையாmadhumathi9 2018-10-05 06:08
:Q: ilaavukku enna pirachinai? Nice epi.kathir seithirukkum nalla kaariyam kudi marakka vaikkum nilaiyathirkku sendrathu.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top