Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

”நீ ஏன் சிரிக்கறேன்னு எனக்குப் புரியுது, இருந்தாலும் நான் உன் கிட்ட கேட்கமாட்டேன், நீ வேணும்னே எதையாவது பேசி என்னை கலாய்ப்ப, நான் கிளம்பறேன் கதவை சாத்திக்க” என சொல்லிவிட்டு பயமில்லாமல் சென்றுவிட தேஜாவிற்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே சமையல் செய்துக் கொண்டிருந்தாள்.

சங்க கட்டிடத்துக்குள் நுழைந்த மூவரும் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்துக் கொள்ள புது வரவான கௌதமை அழைத்து பேச வைத்தார்கள்

”சரி சொல்லுப்பா உன் கஷ்டம் என்ன, தீர்த்து வைக்க நாங்க தீர்வு சொல்றோம்” என ஒருவர் கேட்க அங்கு இருப்பவர்களை கலாய்க்க எண்ணிய கௌதமும்

”நான் என்னத்த சொல்வேன் ஏதுன்னு சொல்வேன் என் வாழ்க்கை இப்படியா பட்டுப்போகனும்” என புலம்ப கூட்டத்தில் இருந்த ஒருவர்

”அட விடுப்பா கவலைப்படாத என்னத்த செய்றது, ஆனது ஆச்சி போனது போச்சி, விசயத்துக்கு வா என்னாச்சி” என கேட்க அவன் அனைவரையும் பார்த்து

”இங்க இருக்கற எல்லாருமே எனக்கு முன்னாடி இங்க சேர்ந்தவங்க, அனுபவசாலிங்க அதனால என் கஷ்டம் உங்களுக்கும் கண்டிப்பா நடந்திருக்கும்னு நம்பி, நான் சொல்றேன் நேத்து ராத்திரி என் பொண்டாட்டியோட நான் இருந்தப்ப என ஆரம்பித்தவன் வேண்டுமென்றே தேஜாவை பேயாக்கி தான் கண்ட கனவை நிஜம் போல சொல்லி வைக்கவும் அங்கிருப்பவர்கள் அனைவரும் கண்களில் பயத்துடனும் வேர்த்துக் கொட்டியபடி கதையை கேட்டு முடித்தார்கள்.

”இதான் பிரச்சனை நான் என்ன செய்றது இப்ப சொல்லுங்க” என கேட்க அவர்கள் யாருக்கும் மூச்சு பேச்சு இல்லை நடேசன் கௌதமிடம் வந்தான்

”டேய் என்னடா பண்ற பாவி, எல்லாரையும் இப்படியா பயமுறுத்தி வைப்ப”

“பின்ன என்ன எப்ப பாரு என்னையே தொல்லை பண்ணா அதான் நான் எல்லாரையும் கலாய்ச்சேன்”

“அப்படியா அப்ப நீ சொன்னது பொய்யா”

”ஆமாம்”

“டேய் வாடா முதல்ல இங்கிருந்து போகலாம்” என அவசரமாக அவனை அழைத்துக் கொண்டு வீடு திரும்ப கோதாவரி ரெடியாக சண்டைக்கு நின்றாள்

”மணி என்னாகுது”

“பத்து”

“இந்த ராத்திரி நேரத்தில பேய் பிசாசுங்க மாதிரி ஊரை சுத்திட்டு வர்றீங்களா நீங்க மூன்று பேரும்” என கோபத்துடன் கேட்க

”இல்லை ஓனரம்மா அது சாப்பிட்டது செரிக்க கொஞ்சம் காலாற வாக்கிங் போனோம் அவ்ளோதான் வாடா வினோ போலாம்” என நடேசன் வினோதனுடன் சேர்ந்து சென்றுவிட தனியாக விடப்பட்ட கௌதம்  கோதாவரியிடம்

”தேஜா சொன்னா நீ ஏதோ பேய் பார்த்து பயந்தியாம்”

“அது வந்து ஆன்ட்டி” என தடுமாற

“சரி சரி இந்தா தாயத்து இதை அரைஞான் கயிறுல கட்டிக்க பயம் போயிடும், பேய் உன்கிட்ட கூட வராது சரியா” என சொல்லித்தரவும் அதை பக்தியுடன் வாங்கிக் கொண்டு தன் போர்ஷனுக்கு வந்தான். உள்ளே இருந்த தேஜா அவனிடம்

”ஏன் இவ்ளோ லேட்டு”

“ம் ஒரு வேலை பண்ணிட்டு வந்தேன் அதான் லேட்டு”

”என்ன செஞ்சீங்க”

சங்கத்துல என்னை நிக்க வைச்சி கேள்வி கேட்டானுங்களா, அதான் அவனுங்ககிட்ட நான் கண்ட பேய் கனவை சொல்லி பயமுறுத்திட்டு வந்துட்டேன்” என சொல்லவும் அவள் சிரித்துக் கொண்டே அவனுக்கு டிபன் பரிமாற

“எதுக்கு சிரிக்கற நீ, ஆமா சாப்பிட்டியா”

”நான் சாப்பிட்டேன், ஆமா நீங்க பாட்டுக்கு அங்கிருக்கிறவங்ககிட்ட பேய் கதையை சொல்லிட்டு வந்துட்டீங்களே இப்ப உங்களுக்கு பயமா இல்லை”

“அதுக்குத்தான் ஆன்ட்டி எனக்கு இந்த மந்திரிச்ச தாயத்து கொடுத்திருக்காங்களே, இதை நான் வெச்சிக்கிட்டா பேய் பிசாசு என்கிட்டகூட வராது” என சொல்லவும் அதற்கும் சிரித்தாள் தேஜா

”இந்த வயசுல நீங்க இப்படியா பயப்படுவீங்க”

”ஏய் என்ன எனக்கு ஒண்ணும் எல்லாத்து மேலயும் பயமில்லை பார்த்தல்ல அன்னிக்கு அந்த மேலதிகாரி போலீசை எப்படி விரட்டினேன்னு வீரன்டி நானு”

“ஆமாம் வீரன்தான், அப்ப நாளைக்கு நாம பேய் படத்துக்கு போலாமா” என கேட்க அத்துடன் அமைதியாகி வேகமாக சாப்பிட ஆரம்பித்தான் கௌதம், அதைக் கவனித்த தேஜா இன்னும் பலமாக சிரித்தாள். சாப்பிட்டு முடித்த கௌதம் சோபாவில் படுத்துக் கொள்ள தேஜாவும் நைட்டிக்கு மாறி மெத்தையில் படுத்துக் கொண்டாள். அவனின் அருகாமை மிகவும் பிடித்துவிட்ட தேஜாவிற்கு இன்று தனியாக படுத்திருப்பதைக் கண்டு உறக்கம் வராமல் புரண்டாள். அரை மணி நேரம் ஆனதும் கௌதம் தேஜாவிடம் வந்தான்

”தேஜா தேஜா” என அவளை உலுக்கி எழுப்பினான். அவசரமாக எழுந்தவள் அவனை பார்த்தாள்.

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகாmahinagaraj 2018-11-02 09:51
நல்லாயிருக்கு மேம்.. :clap: :clap:
தேஜாவும் விரும்பராங்களா.. இல்லை ஈர்ப்பா.. :Q:
கௌதம் இவ்ளோ வருத்தப்படராரே... :sad:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகாராஜேந்திரன் 2018-11-02 09:17
supera irukku
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகாvijayalakshmi 2018-11-02 09:16
nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகாராணி 2018-11-02 09:06
கௌதம் செய்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது :grin:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top