Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

“ஆமாம்”

“சரி வா நாம போவோம் அவங்க மெதுவா வரட்டும்” என அவளை அழைத்துக் கொண்டு தன் போர்ஷனை விட்டு வெளியே வர நடேசனும் வினோதனும் இவர்களுடன் சேர்ந்துக் கொண்டார்கள். அனைவருமாக வெளியே சென்று பால், காய்கறி, மாவு என வாங்கிக் கொண்டு வீடு திரும்ப வாசலில் பாரதி, திலகா, கோதாவரி நின்றிருந்தார்கள். கௌதம் வரவும் அவனை பிடித்து உலுக்கினார்கள்

”என்னாச்சி இப்ப”

“ஏன்டா உனக்கு அறிவில்லை எதுக்குடா காலையில தேஜாவை இழுத்துக்கிட்டு பால் வாங்க போன” என கோதாவரி கேட்க

”ஏன் அவள் வந்தா என்ன, நான் மட்டும்தான் போய் பால் வாங்கனுமா”

“அவள் பொண்ணுடா விடிகாலையில அவளை கூட்டிட்டு போறியே அறிவிருக்கா உனக்கு” என கோதாவரி கத்த அதற்கு கௌதம்

“ஆன்ட்டி இப்ப என்ன மாசம்”

என கேட்க அதற்கு பாரதி

”மார்கழி மாசம்” என்றாள்

”ஆ இந்த மார்கழி மாசத்திலதான் காத்து சுத்தமா வீசுமாம், அந்த காத்தை சுவாசிச்சா உடம்புக்கு நல்லதாம். அதனாலதான் மார்கழி மாசம் கோலம் போட சொல்றாங்க. புரியுதா என் பொண்டாட்டி ஆரோக்கியமா இருக்கனும்னு இந்த மார்கழி முடியறவரைக்கும் கூட்டிட்டு போறேன் இது தப்பா நான் ஒண்ணும் உங்க புருஷன்ங்க மாதிரியில்லை நீங்க எக்கேடு கெட்டு போட்டும் நாம ஆரோக்கியமா இருக்கலாம்னு நினைக்க

நான் குடும்பஸ்தன் எனக்கு என் பொண்டாட்டியோட ஆரோக்கியம் முக்கியம் நான் வரேன் நேரமாச்சி” என தேஜாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் செல்ல பாரதி தன் கணவரிடமும் திலகா தன் கணவரிடமும் சண்டையிட ஆரம்பித்தார்கள்.

“ஏன்யா நாங்க எல்லாம் நல்லா இருந்தா உனக்கு பொறுக்காதா” என பாரதி கத்த

”நீ மட்டும் நல்ல காத்தை சுவாசிச்சிட்டு 100 வருஷம் வாழ்வ நான் மட்டும் 80 வயசுல அல்பாயுசுல சாவனுமா”

“அய்யோ அதுக்கு எங்களை ஏன் திட்டறீங்க, நீங்களும் வர்றதாயிருந்தா வாங்களேன்” என சொல்ல அவர்களும் அமைதியானார்கள்.

குளித்துக் கொண்டிருந்த கௌதமிற்கு ரஞ்சித் போன் செய்யவும் தேஜா கௌதமை அழைத்தாள்

”கௌதம் உங்களுக்கு போன்”

“போன் கொண்டா” என சொல்ல அவளும் கொண்டு வந்து

”இந்தாங்க” என கேட்க அவனும் கதவை திறந்து வாங்கினான். அவனை அந்த கோலத்தில்  பார்த்த தேஜாவிற்கு சட்டென நாணம் வந்து அந்த இடத்தைவிட்டு ஓட அதைப் பற்றி கவலையில்லாமல் போன் பேசினான்

”ஹலோ”

“நண்பா நீ ஆபிசுக்கு போறப்ப கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டு போடா”

“ஏன் என்ன”

“நேத்து பிடிச்சி தந்தியே ஒரு திருடன், உன் வீட்ல நுழைஞ்சதால நீதான் புகார் தரனும்”

“சரிடா நீ எழுதி வைச்சிடு நான் வந்து கையெழுத்து போடறேன்” என சொல்லிவிட்டு போனை எங்கு வைப்பது என தெரியாமல்

”தேஜா இந்தா இந்த போன் வாங்கிக்க”

“நான் வரமாட்டேன்” என்றாள்

”வரமாட்டியா தேஜா விளையாடாத போன்ல ஈரம் படும் வாங்கிக்க”

“நான் வரலை” என கத்தவும் என்னாச்சி இவளுக்கு என யோசித்துக் கொண்டே போனை கொண்டு வந்து டேபிள் மீது வைத்தவன் நேராக கிச்சனுக்குச் சென்றான்

“தேஜா” என அழைக்க அவள் திரும்பி பார்த்து அவன் இருந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்து வெட்கத்தில் முகத்தை திருப்ப

”என்னாச்சி உனக்கு”

“ஒண்ணுமில்லை”

“ஏன் என் முகத்தை பார்க்க அவ்ளோ கசக்குதா உனக்கு, போ பார்க்காத என்னை” என திட்டிவிட்டு சென்றுவிட தேஜா நொந்தே போனாள்.

அவசரமாக டிபன் செய்து கொண்டு வந்து டேபிளில் வைக்க அதை சாப்பிடாமல் ரெடியாகிக் கொண்டிருந்த கௌதமை பார்த்து

”டிபன் சாப்பிடுங்க”

“வேணாம்”

“ஏன் என்னாச்சி”

”நீதான் என் முகத்தை பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டியே, அப்புறம் நீ செய்றத நான் ஏன் சாப்பிடனும்” என சொல்ல தேஜா அவன் முன் நின்று அவன் முகத்தை நன்றாக உற்று பார்த்துவிட்டு

”பார்த்துட்டேன் போதுமா இப்ப வந்து சாப்பிடுங்க”

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகாmahinagaraj 2018-11-02 09:51
நல்லாயிருக்கு மேம்.. :clap: :clap:
தேஜாவும் விரும்பராங்களா.. இல்லை ஈர்ப்பா.. :Q:
கௌதம் இவ்ளோ வருத்தப்படராரே... :sad:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகாராஜேந்திரன் 2018-11-02 09:17
supera irukku
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகாvijayalakshmi 2018-11-02 09:16
nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகாராணி 2018-11-02 09:06
கௌதம் செய்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது :grin:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top