(Reading time: 11 - 22 minutes)

ந்த போலிஸ்காரன் கிட்ட வசந்த் என்ன சொன்னான் என்று நிலாவிடம் சைகையில் விசாரித்துக்கொண்டிருந்தாள் அமேலியா.

"மாமா உங்களை கல்யாணம் செஞ்சுக்க போறதா சொன்னாங்க"

அமேலியாவிற்கு புரியவில்லை. மீண்டும் மீண்டும் நிலாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

நிலாவிற்கும் எப்படி கூறுவது என்று தெரியவில்லை. ஒரு வழியாக தன் பாடப் புத்தகத்தை திறந்து பக்கங்களை புரட்டினாள். ஒரு பக்கத்தில் கணவன், மனைவி தங்கள் குழந்தைகளோடு இருக்கும் ஓவியம் தென்பட அதை அமேலியாவுக்கு காட்டினாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அமேலியாவிற்கு புரிந்துபோனது. அந்த ஓவியத்தை மெதுவாய் வருடினாள். ஓவியத்தில் இருப்பவர்களை அவளும் வசந்துமாக கற்பனை செய்து பார்த்தாள். மழலையின் முகத்தையும் பார்த்தபோது அவள் அடி வயிற்றில் லேசான வலி உருவானது. அந்த கற்பனை நீடிப்பதற்குள் மேகலா உள்ளே வந்தாள்.

"ஏய் நிலா, இன்னும் தூங்காம என்ன செஞ்சிட்டு இருக்க?"

"மாமா அமேலியா அக்காவதானம்மா கல்யாணம் செஞ்சிக்க போறாங்க?" என்று அப்பாவியாக கேட்டாள் நிலா.

மேகலாவிற்கு கோபம் பீறிட்டு வந்தது. "வயசுக்கு தகுந்த மாதிரியா பேசுற?" என்று நிலாவின் முதுகில் இரண்டு போட நிலா வலி பொறுக்கமுடியாமல் அழ அமேலியா நிலாவை அரவணைத்துக் கொண்டாள்.

மாடியில் வசந்த் ஃப்ராங்க்ளின் கூறியதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். யாரோ சொன்னதைக் கேட்டு அதற்கேற்றார் போல் நடந்து வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம் என்பதை வசந்த் புரிந்து கொண்டான்.

இங்கே ஜெயித்தவர்களின் அறிவுரைகளை கேட்டு நடந்தால் நாம் ஜெய்ப்பது சிரமம் தான் என எண்ணினான். அவர்கள் இருந்த காலகட்டம், நாம் இருக்கும் காலகட்டம், அவர்கள் சென்ற வழி என எல்லாமும் வேறு மாதிரியானவை. அவர்கள் சொன்னது போல் நடந்து கொண்டால் நாம் தான் முட்டாளாக காலத்தை தள்ளவேண்டும்.

நம் திறமை நமக்கான தகுதி என்னவென்று முதலில் நாம் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும். பொறுமை அவசியம். ஜெயிக்கும் வரையிலும் ஜெயித்த பின்னாலும் பொறுமை அவசியம்.

யோசித்தது போதும் என முடிவு செய்த வசந்த் போனை எடுத்தான். ஃப்ராங்க்ளினுக்கு போன் செய்தான். ரிங் ஆனது ஆனது ஆனது ஆகிக்கொண்டேயிருந்தது,

ஃப்ராங்க்ளின் போனை எடுக்கவேயில்லை. அதற்காக வசந்த் கோபம் கொள்ளவில்லை. அவன் வாழ்க்கையை புரிந்துகொண்டான்.

தொடரும்...

Episode # 56

Episode # 58

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.