Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes

அதற்குள் யாமினி அந்த வீட்டை சுற்றி முற்றி பார்க்க ஆரம்பித்தாள்.

ஆதி வீட்டின் முன்புறம் 5 படிகள் ஏறி சென்றால்தான் வீட்டின் நிலைகதவு இருக்கும். அந்த 5 படிக்கட்டுக்களின் இருபுறமும் திண்ணை இருந்தது.  அதன் மேற்புறம் ஓடு போன்ற அமைப்புள்ள கூரை இருந்தது

படிக்கட்டுகள் ஏறி வீட்டிற்குள் சென்றால் முதலில் நடைபாதை, அதன் இருபுறமும் வரிசையாக அறைகள் இருந்தது.  அதை தாண்டி உள்ளே சென்றால் பெரிய முற்றம் இருந்தது.  அதன் ஒருபக்கம் மாடிக்கு செல்ல படிக்கட்டுகள் இருந்தன. அதைக் கடந்ததும் ஒருபுறம் அறைகளும் மறுபுறம் சாமியறை, அடுத்து டைனிங் ஹால், சமையல் அறை, ஸ்டோர் ரூம் என வரிசையாக இருந்தது.  அதை அடுத்து கொல்லைக்குச் சென்றால் அங்கு ஒரு புறம் கிணறும் மறுபுறம் பசுமாடுகள் கட்டிவைக்கப்பட்டு புல்லை தின்று கொண்டிருந்தது.  அதை தாண்டினால் உள்ள காலியிடத்தில் வாழை, தென்னை, மருதானி, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற பல மரங்கள் இருந்தன.

முற்றத்திலிருந்து மாடிக்கு படிக்கட்டுகள் வழியாக சென்றால் முதலில் சிறிய ஹால் ஒன்றும் அதன் இருபுறமும் வரிசையாக அறைகள் இருந்தது.  அந்த வீடு முழுக்க முழுக்க அந்த கால பாணியில் ரெட் ஆக்சைடு கலந்த சிமெண்டினால் தரையில் பூசப்பட்டிருந்தது.  ஆங்காங்கு சிமெண்டில் பல அழகிய பூக்களை அச்சுகளாக தரையில் பதித்திருந்தனர்.  அதன் மேல் மாடியில் ஒரு பக்கம் டேங்க் இருந்தது. 

மணி 8 ஆன பின்பு வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஆதி முற்றத்திற்கு வர அங்கு தாத்தாவும் யாமினியும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு பயந்தவன் யாமினியையே முறைத்து பார்த்து அங்கேயே நின்றுவிட்டான்.

”தாத்தா இந்த வீடு சூப்பரா இருக்கு இப்பல்லாம் இந்த மாதிரி வீடுகளைப் பார்க்கவே முடியறதில்லை. சென்னையில வந்து பாருங்க, சின்ன இடம் கிடைச்சாகூட வீடு கட்டி வித்திடுவாங்க இந்த மாதிரி பழமை மாறாத வீடுகள் இருக்கறது அபூர்வம்தான் நீங்க எப்படி மெயின்டெயின் பண்றீங்க தாத்தா” என்றாள் வியப்புடன் யாமினி அதற்கு தாத்தா பெருமையுடன்

”அதைச் சொல்லு என் அப்பா கட்டின வீடு இது, எவ்ளோ உறுதியா கட்டியிருந்தா என் தலைமுறை தாண்டி என் பேரன் பேத்தி தலைமுறையிலயும் எப்படி நிக்குது பார்த்தியா, அந்தக்கால கட்டிட முறைம்மா இன்னும் 100 வருஷம்னாலும் உறுதியா நிக்கும் ஒரு விரிசல் கூட வராது”

”ஆமாம் தாத்தா ரொம்ப சூப்பர். ஆமா இந்த ஊர்ல நீங்க என்ன வியாபாரம் செய்றீங்க தாத்தா”

”நானாம்மா நமக்குன்னு நிறைய நிலம் இருக்கு, அரிசி மண்டிங்க இருக்கு, துணிக்கடை, மளிகைகடைன்னு இருக்கு, நிறைய வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கேன்”

”ஓ அப்படியா ம் ஆமா இங்க யார் யார் இருக்காங்க தாத்தா”

”நான் என் மனைவி, என் 2 பையன்கள், மருமகள்கள், என் 2 மகள்கள் மாப்பிள்ளைகள், அவங்க பசங்க பொண்ணுன்னு இருக்கோம். இங்க தானே இருப்ப ஒவ்வொருத்தரோடவும் நீ பழகிபாரு.”

”கூட்டுக்குடும்பம்னாலே ஒரு தனி கெத்துதான் தாத்தா, சென்னையில இப்படி கூட்டுக் குடும்பங்களை பார்க்கறது கஷ்டம். ஒரே வீட்ல இவ்ளோ பேர் எந்த சண்டை சச்சரவும் இல்லாம வாழறது சந்தோஷமாயிருக்கிறது உண்மையிலேயே சூப்பர் தாத்தா நீங்க இருக்கறதாலதான் இங்க இருக்கறவங்களும் ஒத்துமையா சந்தோஷமா இருக்காங்க போல”

”ஆமாம்மா பெரியவங்க வழி நடத்தனும் என்னை மாதிரி பெரியவன் வீட்ல இல்லைன்னா அந்த வீடு வீடா இருக்காதும்மா, இங்க இருக்கறவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் பாசமா இருக்காங்க, உண்மையா நடந்துக்கறாங்கம்மா, நாங்க எல்லாருமே ஒற்றுமையா இருக்கறதாலதான் எங்களுக்குள்ள சண்டை சச்சரவு வந்ததில்லை”

என சொல்லிவிட்டு எதேச்சையாக திரும்பி ஆதியை பார்த்தவர் அவளிடம்

”இன்னும் சில பேர் இருக்காங்க, அவனுங்களால குடும்பத்துக்கு எப்பவும் தலைகுனிவுதான் வரும், மானம் மரியாதையை காத்துல பறக்கவிடறதுக்காகவே பொறந்திருக்காங்க”

”யாரை தாத்தா சொல்றீங்க“

”இதோ இங்க நிக்கிறானே இவனைத்தான் சொல்றேன், இவனால என் குடும்ப மானமே காத்துல பறந்துச்சி”

”என்னாச்சி தாத்தா” என அவள் பாவமாக கேட்கவும் அவர் உடனே அவளிடம்

”அதை விடும்மா நீ இங்க ஜாலியா தங்க வந்திருக்க, உனக்கு ஏன் இதெல்லாம் நீ வாம்மா நாம சாப்பிடலாம்” என சொல்லிவிட்டு எழவும் அவளும் எழுந்து அவர் பின்னாலயே சென்றாலும் திரும்பி ஆதியைப் பார்க்க அவனோ அவளை தன்னிடம் வருமாறு கையாட்டி அழைத்தான்.

அவள் தாத்தாவிடம்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 04 - சசிரேகாAdharvJo 2018-11-26 19:58
Pei mathiri vandhu ninda ippadi thaan sasi ma'am nikka mudiyum :D Paati yen poi solluringa thatha-va ninga thana adhi-a police-kitta pudichi kuduka kudadhun sonnadhu ippo yen plate mathuringa steam Indha brutal punishment unga plan-thaan Sasi ma'am sollitanga :P Vandha first day yam's-k therindha vishyam ivangalukku theriyalai ena oru kodumai sarvana facepalm Aadhi oda motha life style-a maridiche silent cum action movie mathiri adhukuda ok but eating style too much :sad: Ippadi oru vidhi irundha life veruthudum :lol: Yamini oda approach is :cool: Sikrama andha nagaigalai kandu pidichittu unga pursharai kuttitu poiduma poidu but indha 5yrs-aga eppadi andha nagai vitulai-ye irukkum :Q: Nagaigal eduthadhu etharkaga any personal vengeance on Adhi idhai virkavum mudiyadhu use panalum culprit kandupidichiduvanga apo ethukku thirudinanga?? Adhi oda dad-k en punishment illa indha partiality ethukk sasi ma'am :o Interesting flow :clap: :clap: first epi la partha adhi-a vida
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 04 - சசிரேகாAdharvJo 2018-11-26 20:00
indha epi la vara adhi periya aala irukaru :D Mind voice-a ippadi na...action la eppadi iruparu :grin: Sasi ma'am indha velakaranai innum konjam pulinji edunga verum rendu scene la mattum thaa ayoo pavamn thonudhu :grin: Thank you for the entertaining update. Look forward to read the next one. Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 04 - சசிரேகாVAK 2018-11-26 18:36
Aadhiyoda brain ippothan velai seiyya start agi irukku. All the best yamini and aadhi :thnkx: update mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 04 - சசிரேகாராணி 2018-11-26 15:03
யாமினி அதிக சிரமப்பட்டுத்தான் திருடனை கண்டுபிடிக்க வேண்டும் நைஸ் ஸ்டோரி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 04 - சசிரேகாvijayalakshmi 2018-11-26 15:01
nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 04 - சசிரேகாமனஸ்ஸாக்ஷிந்த் 2018-11-26 15:00
aadhi yaminiya varnipathum sari avalai virata ninaipathum sari :Q: yamini innum childishaga irupathu :Q: nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 04 - சசிரேகாmahinagaraj 2018-11-26 12:31
அப்பா பயங்கரம் செமயா இருக்கு மேம்.. :clap: :clap:
யாமினி சூப்பர்..
ஆதி வீட்டுல இருக்கரவங்க தான் நகையை எடுத்து இருப்பாங்க போல.. :Q:
இந்த ஆதி கொஞ்சம் ஓவரா நடந்துகராரு யாமினிகிட்ட.. steam
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 04 - சசிரேகாsaaru 2018-11-26 07:48
nice update
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top