Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes

“ஆமாம் அம்மாவும் என்கிட்ட அதையேதான் சொன்னாங்க மீனா எனக்கு பயமாயிருக்கு”

”ஏன் பயம்”

“பாரின்ல இருந்து வர்றவங்களுக்கு என்னை பிடிக்கனும்னு கட்டாயம் இல்லையே”

“அக்கா நீ பேரழகி உன்னை பிடிக்காதுன்னு யார் சொல்வா சொல்லு அப்படி அவன் சொன்னா அவன் கண்ணுலதான் கோளாறு”

”பழக்க வழக்கம் மாறுபடுமே”

“எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அதுக்கு ஏத்தமாதிரி மாறிக்க உனக்கு நல்லாவே வருமே அக்கா அப்புறம் என்ன”

“ஒருவேளை கல்யாணம் ஆனா நான் பாரினுக்கு போகனுமாம் அம்மா சொன்னாங்க”

“தாராளமா போக்கா இத்தனை வருஷம் இந்த தஞ்சையை கட்டி காப்பத்தினியே போதாதா”

“எனக்கு இது சரியா வருமான்னு தெரியலை மீனா ஒரே குழப்பமா இருக்கு” என குழம்பியபடியே புலம்ப அதைக்கேட்டு மீனா பெருமூச்சு விட்டாள்

”அங்க மாமா என்னடான்னா புது ப்ரான்ச் வைக்கறதுல குழம்பி தவிக்கறாரு இங்க நீ கல்யாணத்தை பத்தியும் பாரின்கு போறதை பத்தியும் நினைச்சி குழம்பற அக்கா பொறுமையா இரு

அவங்க முதல்ல வரட்டும் உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லட்டும் ப்ரான்ச் ஆரம்பிக்கட்டும் 6 மாசம் இங்கதானே தங்கியாகனும் அதுக்குள்ள அவங்களை பத்தி நீ தெரிஞ்சிக்குவ அப்படி ஓரளவுக்கு உனக்கு தெரிஞ்சாலே போதுமே அக்கா

உன் பயமெல்லாம் போயிடும் ப்ரான்ச் ஓபனிங் முடிஞ்சதும் அவங்களும் இங்கிருந்து கிளம்புவாங்க கிளம்பறதுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் முடிஞ்சிடும்னு எனக்கு தோணுதுக்கா

கவலையை விடு எல்லாம் நல்லதாவே நடக்கும் நாளைக்குதான் அவங்க வர்றாங்களாம் அத்தை சொன்னாங்க இப்படியே குழப்பமான முகத்தோட அவங்க முன்னாடி நிக்காதக்கா அவங்க வந்தது ப்ரான்ச் ஆரம்பிக்க உனக்காக இல்லைன்னு மனசுல நினைச்சிக்க இந்த கவலை பயம் குழப்பம் எல்லாம் ஓடிப்போயிடும்

அவங்களா உன்னை தேடி வருவாங்க நீ எப்பவும் போல வீட்ல சுதந்திரமா இருக்கா அவங்க இருக்காங்களேன்னு பயந்து ஒளிஞ்சி ஓடாத தைரியமா அவங்க முன்னாடி நில்லு, பேசு, பழகு, தப்பில்லைக்கா இது உன் வீடு”

“நீ சொல்லிட்ட ஆனா எனக்கு பயமா இருக்கே”

“பயமெல்லாம் நாள் போக போக தன்னால போயிடும் இப்ப குழம்பாம போய் தூங்குக்கா காலையில எனக்கு நிறைய வேலைகள் இருக்கு”

”ஓ சரி நீ தூங்கு உன்கிட்ட பேசினதில பாதி பயம் போயிடுச்சி”

”மீதி நாளைக்கு அவங்க வந்ததும் போயிடும்”

“போகாம அதிகமானா என்ன செய்றது”

“ஒண்ணும் ஆகாதுக்கா பயப்படாத வர்றவங்க எப்படிப் பட்டவங்க என்னமாதிரியான குணம்னே தெரியலை எதுவும் தெரியாம நீயா குழம்பி தவிக்காத அமைதியா போய் படுத்து தூங்குக்கா வரட்டும் வானத்தில இருந்து பறந்து வர்ற 2 ராஜகுமாரன்கள் எந்த லட்சணத்தில இருக்கானுங்கன்னு தெரியலையே” என அலுப்பாக சொன்ன மீனாவிடம் கோபப்பட்டாள் ஆனந்தி

“மரியாதையில்லாம பேசாத மீனா, 2 பேருமே பெரிய அந்தஸ்துல இருக்கறவங்க ஒருத்தர் டாக்டர் இன்னொருத்தர் பெரிய பிசினஸ்மேன்” என பொங்க அதைக்கண்டு சிரித்த மீனாவோ

”ஓ சாரிக்கா பிசினஸ்மேன்க்குதானே உன்னை பேசப்போறதா சொன்னாங்க எதுக்கும் அவரோட பேசிப்பாரு ஒத்துவரலையா டாக்டர்கிட்ட பேசிப்பாரு அவரும் சரியில்லையா விட்டுடு உனக்கென்னக்கா குறைச்சல் இங்கயே மாப்பிள்ளை கிடைப்பாங்க” என நம்பிக்கையாக சொல்ல அவளது முகத்தையே தீர்க்கமாக பார்த்த ஆனந்தியிடம் சிரித்தபடியே

”சரிக்கா எனக்கு புரியுதுக்கா இந்த முறை உன் கல்யாண விசயத்தில நான் தலையிடமாட்டேன் என்னால எந்த பிரச்சனையும் வராது என்னை நம்புக்கா எனக்கு லீவு விட்டிருக்காங்க நான் வீட்லயே இருந்துக்கறேன் அம்மா கூடவே இருந்துக்கறேன்

பாரின்காரங்க முன்னாடி கூட நான் வரலை நீயே அவங்களை பார்த்துக்க நல்ல பேர் எடு அவங்க மனசுல இடம் பிடி சரியாக்கா நான் வரப் போற பரிட்சைக்கு படிக்கனும் பரிட்சை நல்லபடியா எழுதனும் வேலைக்கு போகனும் எனக்கு நிறைய கடமைகள் இருக்கு” என சொல்லவும் அதைக்கேட்டு சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றாள் ஆனந்தி

”ம் எல்லாருக்கும் ஆசை இருக்கத்தானே செய்யுது ஆசைகள் நிறைவேறினா சந்தோஷம்தான் அதுவே ஆசைகள் பேராசையா மாறினா கஷ்டம்தான் இந்த கல்யாண விசயத்தில நிராசை வராம இருக்கனும் பார்த்துக்கலாம் எனக்காகவா ராஜகுமாரன் வர்றான் அவனை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கறதுக்கு

அக்காவுக்குதானே அவன் வரான் வரட்டும் அவளே பத்திரமா பார்த்துக்கட்டும் டாக்டர் வரானே எப்படியும் பொறுப்பானவனாதான் இருக்கனும் வீட்ல இருப்பான் இல்லை ஊர் சுத்துவான் என்னவாவது செய்யட்டும் நமக்கென்ன நாம ஒதுங்கி இருப்போம்

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 03 - சசிரேகாsaaru 2018-11-29 22:53
Nice update sasi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 03 - சசிரேகாராணி 2018-11-29 09:21
பாவம் ஈஸ்வர் கனவுகளா வந்து அவனை டார்ச்சர் பண்ணுது நைஸ் ஸ்டோரி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 03 - சசிரேகாvijayalakshmi 2018-11-29 08:22
nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 03 - சசிரேகாமனஸ்ஸாக்ஷிந்த் 2018-11-29 08:21
மீனு தன் மாமாவிடம் சொல்வது அனைத்தும் யதார்த்தமான ஒன்று.
தர்னேந்திரன்தான் ஈஸ்வரனா? மாதவனுக்கும் தர்னேந்திரனுக்கும் என்ன பிரச்சனை நிரஞ்சன் பாடு திண்டாட்டம்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 03 - சசிரேகாAdharvJo 2018-11-28 21:33
Sasi ma'am every dream scenes are portrayed in different style idhu ellam Ishwar oda life la eppadi connect agi irukkum :Q: eppadi venumnalum irukatum but your expressing it nicely :clap: :clap: but baby bro-oda thookathaiyum serthu disturb panuringale ji facepalm Kumar uncle veedula ovvartharum oru oru plan la irukangale ethu than niraverum….Kumar uncle rombha fickle minded aga irukaru….apro valli aunty velaikku rendu alu podunga adha vittu unga ponnungalai velai karungala mathuringale steam

As always Niranjan oda scenes was very cute and aunty oda advise super :D Looks like Niranjan has to take care of his big bro...let me wait and watch wat happens next. thank you for this cool update. Keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 03 - சசிரேகாmahinagaraj 2018-11-28 17:47
சூப்பர் மேம்... :clap: :clap:
காணும் கனவுகள் முற்பொரு காலம் நிகழ்தவையாக இருக்குமோ.. :Q:
படிக்க படிக்க ஆர்வம் மிகுதியாகிறது தோழி.. :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top