Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 02 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - சுஷ்ருதா – 02 - சித்ரா

sushrutha

வனுடைய  இத்தனை  வருட அனுபவத்திலும் ,ஹவுஸ்  சர்ஜென்சி  கால கட்டத்திலும் ,நிறைய , அடிப்பட்டு  ரத்தக்களரியாக  வந்த  ஆட்களை  பார்த்திருக்கிறான் .

ஆரம்பத்தில்  ,அதிர்ச்சியும்  ,அவர்களை பார்த்தால்  எழும்  ஐயோ பாவம் என்ற எண்ணமும்  நாளடைவில்  மாற   ,தன்  உள்ளத்து  உணர்வுகளை   மறைத்தபடி ,அவர்களுக்கு நம்பிக்கை தரும் மொழிகளை கூறியபடியே  தேவைப்பட்ட  மருத்துவத்தை கொடுக்க பழகி இருந்தான் ,

இருந்தும்  அனைத்து  பக்குவத்தையும் தாண்டி அவன் அதிரும் அளவு இருந்தது இன்று கண்ட  அவள் முகம் .

முன் இருபதுகளில்  இருந்தனர்  வந்த இருவரும் ,அதில் முதலில்  நுழைத்தவள் கதவை திறந்து பிடிக்க ,உள்ளே நுழைந்தவள்  தன்  முக்காடை  நீக்கியபடி இவன் முன் வர ,

அவள் முகம் ... அதன்  கோலம் தான் அவனை அதிர்ச்சிக்கு உள்ளாகியது .

ஒரு பாதி  முகம்  வரைந்தது போல் அழகாக ,நீண்ட புருவமும் , பெரிய  கரிய கண்களும் ,அது அமைத்திருந்த  சற்று தூக்கிய கன்ன  கதுப்பு ,ஒரு  அரிஸ்டோகிராடிக்  லுக் தர ,

அடுத்த பாதியில்  கண் இமை சிவந்து ,தடித்து முக்கால்வாசி மூடி இருக்க ,அந்த பக்கத்து  கன்னமும் சிவந்து கன்றி ,உதட்டோரம் ரத்தம் கசிந்து உறைந்து கருப்பு  கலரில் காய்ந்திருக்க ,

அவள் முகம் ஏதோ  விசித்திரமான  அர்த்தநாரீஸ்வரர்  வேடத்துக்கு  தயார் செய்தது போல் இருந்தது ,

ஆனால்  இத்தனையும் தாண்டி ,முகத்தில் வேதனையின் சாயலோ ,வலியின் சுவடோ  தெரியவில்லை ,அது அவள் மன  உறுதியையும் குறிக்கலாம் அல்லது எல்லாவற்றையும் கடத்த ஒரு மரத்த  நிலையையும் குறிக்கலாம் என்று  எண்ணியபடியே ,தன்னை கொஞ்சம் சமாளித்து  அவனது வழக்கமான 

'' உட்காருங்க ,சொல்லுங்க ''என்று ஆரம்பிக்க 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இருவரும் அமர  ,கூட வந்தவள்  அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு , சற்று தயக்கத்துடன் இவனை பார்த்து ''அடி   பட்டிருக்கு ,அதனால   ஏதும்  பாதிப்பில்லையான்னு ..''என்று இழுக்க 

இவன் அவளை தனக்கு நேர் எதிரே இருந்த ஸ்டூலில் அமருமாறு பணிந்து ,அமர்ந்தவுடன்  அவளை பரிசோதித்தான் .

கண்களை லேசாக பிரித்து பார்த்து ,உள்ளுக்குள் அடி  பாதிப்பு  இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான் ,அப்படி ஏதும் இருந்தால் ,அவளை ஒரு கண் மருத்துவரிடம் அனுப்ப வேண்டி இருக்கும் ,

கண் ,கன்ன  கதுப்பு ,வாய் ,பற்கள் என்று அனைத்தையும் அவன்  முழுமையாக  பரிசோதித்து  முடிக்கும் போதே அவனுக்குள் சுறு சுறுவென்று  கோபம் எழுந்தது ,

அவளுக்கு அந்த அடி  சும்மா  படவில்லை ,யாரோ அவளை  அடித்திருக்கிறார்கள்  என்பது தெளிவாக தெரிந்தது ,

பொதுவாக இது போல் அடி  வாங்குபவர்கள் ,வைத்தியம் பார்க்க வருவதில்லை ,தங்களுக்கு தெரிந்த விதத்தில் அதை சரி செய்து கொள்வர் ,தாள முடியாமல் இப்படி வரும்போது உண்மையை ஒரு போதும் கூற மாட்டார்கள் .

ஒரு முறை  அவன் தாத்தாவை தேடி  வீட்டுக்கு ஒரு ஜோடியும் ,ஒரு சிறுவனும் வந்திருந்தார்கள் .

அதில் அந்த அம்மாவுக்கு ஒரு கண் இது போல் வீங்கி சிவந்திருக்க ,கூட வந்திருந்த சிறுவன் முகம் வெளிற அவன் அம்மாவை ஒட்டி நிற்க ,சற்று தள்ளி  இறுக்கமான  முகத்துடன் அந்த ஆள் ,அப்பாவாக தான்  இருக்க வேண்டும்  நிற்க ,

தாத்தா கேட்ட  டார்ச் லைட் ,எழுத பாட்  போன்றவைகளை எடுத்து கொடுத்து கொண்டு அங்கே தான் இவன்  நின்ற போதும் ,தாழ்த்த குரலில் அவர் தாத்தாவிடம் பேசியது எதுவும்  இவன்  காதில் விழவில்லை,கேட்கும் எண்ணத்திலும் இவன் இல்லை ! .

அவர்களுக்கு தேவையான மருந்தை எழுதி கொடுத்து அனுப்பிய பிறகே ,தாத்தா இவனிடம்  விசயத்தை  பகிர்ந்தார் .

''அவர் தன்  முஷ்டியை மடக்கி அந்த அம்மாவை  குத்தி  இருக்கிறார் ,அப்போது அவர் கையில் போட்ருந்த  மோதிரம்  பலமாக கண்ணில் பட்டு இந்த காயம் என்று ''

தெரிந்தோ ,இல்லை கண் மண்  தெரியாத கோபத்திலோ  ,எப்படி செய்திருந்தபோதும் அது அவன் மனதில் அசூயையை  கொடுத்தது ,

அவன் முக சுளிப்பை பார்த்த தாத்தா 

''தப்பு தான் ,சூழ்நிலை என்னனு நமக்கு தெரியாது இல்ல  ,அதோட அவர் தானே கூட்டியும் வந்திருக்கிறார் ,அத்துடன் அவரே இதை கூற தானே நமக்கு தெரிவந்திருக்கு ,அதுவே  பெரிய விஷயம் அதோட ரொம்ப வருத்தத்தில் இருந்தார் ''என்று முடித்த போதும் 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Like Chitra Kailash's stories? Now you can read Chitra Kailash's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment

Comments  
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 02 - சித்ராsaaru 2018-12-08 06:32
Nice update chithu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 02 - சித்ராBindu Vinod 2018-12-07 21:14
Teaser text kodutha curiosity'la padithen. Interesting field Chitra. Domestic violence sutri nadaka pogum kathaiya or vera kaaranam irukkuma?

And consultation time'la patient pakkam irunthu yosithiruken, ezhuthi iruken, aanal doctors mananilai patri yosithathe illaai. Sila vishyangalai taken for granted aga eduthupom pola iruku. Antha vithathilum Sasi oda thoughts train antha profession'la avanga evalavu face seivanganu yosika vachathu :-)

Interesting concept, looking forward to read the story.
Reply | Reply with quote | Quote
# Sushrutha by ChitraSahithyaraj 2018-12-07 13:16
Superb update. Doctor oda mananilaya appadiye Padam pidichu kattiyirukkeenga. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 02 - சித்ராmahinagaraj 2018-12-07 11:18
நல்லாயிருக்கு மேம்... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 02 - சித்ராAdharvJo 2018-12-07 10:55
:clap: :clap: nice update chitra ma'am (y) Dr sir oda mega doubt-a sikrama clear panungal ji :D (enakkum same doubt :P ) Sasi oda analysis and his observation abt patients is too cool. what's the problem with Sita? Look forward to see what happens next. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top