Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Change font size:

என்ன செய்வது என யோசித்தவன் உடனே ஃபோனை எடுத்து அவளது தந்தைக்கு ஃபோன் செய்தான்.

”நல்லவேளை ஃபோனை ரீசார்ஜ் பண்ணது நல்லதா போச்சி இந்த சமயத்தில யாமினியை அடக்க அவள் அப்பாவாலதான் முடியும்” என நினைத்துக் கொண்டான்.

ரிங் செல்லவும் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டவன் அவளைப் பார்த்தான்

”யாருக்கு ஃபோன் பண்றீங்க இந்த நேரத்தில” என சொல்லி அவள் அருகில் வரவும் உடனே அவளை தடுத்தவன் ஃபோனைப் பார்த்தான்.

ரிங் முடிந்து சோமசுந்தரம் குரல் கேட்டது

”ஹலோ மாப்பிள்ளை சொல்லுங்க” என அவர் பேச அவனோ

”ம்” என கத்தினான். அவன் கத்துவதை வைத்தே அங்கு ஏதோ பிரச்சனை என புரிந்துக் கொண்டவர்

”என்னப்பா என்ன ஆச்சி ஏதாவது பிரச்சனையா”

”ம் ம் ம்” என அவசரமாக 10 ம் கொட்டவும் அவர்

”என்னாச்சி யாருக்கு என்ன பிரச்சனை யாமினிக்கா”

”ம்ஹூம்”

”அப்ப உனக்கா”

”ம்” என்றான் அவசரமாக

”யாராலப்பா உன் வீட்டு ஆளுங்களாலயா”

”ம்ஹூம்”

“அப்புறம் யாரால என் பொண்ணாலையா”

”ம்” என் அழுத்தமாக

”என்னாச்சி என்ன செஞ்சா அவள்ட்ட ஃபோனை கொடுப்பா” என சொல்லவும் உடனே ஃபோனை அவளிடம் நீட்ட அவள் அவனைப் பார்த்து எதுவும் புரியாமல்

”ஹலோ அப்பா” என்றாள் உடனே அவர்

”என்னம்மா என்னாச்சி ஆதி ஏன் இப்படி நடந்துக்கறான்”

”அதான்ப்பா எனக்கும் புரியலை ஆதி ஏன் இப்படி நடந்துக்கறான்னு”

”என்னம்மா சொல்ற எப்படி நடந்துக்கறான்”

”வித்தியாசமா நடந்துக்கறான் கோபமா என்னைப் பார்த்து முறைக்கிறான்”

”அவன் அப்படி செய்ற மாதிரி அந்த வீட்ல என்னம்மா நடந்திச்சி”

”இன்னிக்கு வெள்ளிக்கிழமை நிறைஞ்ச பௌர்ணமின்னு ஆதியோட அம்மாவும் பாட்டியும் இங்க எங்களுக்கு முதலிரவு வெச்சாங்கங்கப்பா நான் ஓகே சொல்லிட்டேன். ஆனா இந்த ஆதிதான் கிட்ட போனாக்கா முறைக்கிறான் கோபமாக பார்க்கறான். எதுக்கு உங்களுக்கு ஃபோன் பண்ணான்னு கூட புரியலை ஒருவேளை உங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கனும்னு நினைக்கிறான் போலப்பா இப்பதான் எனக்கும் புரியுது சே நான் இதை மறந்தே போயிட்டேன். அப்பா ஃபோன்லயே எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா” என அவள் சொல்லவும் ஆதியும் சரி சோமசுந்தரமும் சரி இருந்த இடத்திலேயே பூகம்பம் வந்ததாக உணர்ந்தனர்.

சோமசுந்தரம் உடனே அவளிடம்

”இதப்பாரு முதலிரவு நடக்காது நான் அப்பவே ஆதிகிட்ட தெளிவா சொல்லிட்டேன். அங்க பிரச்சனை முடிஞ்சி ஆதி நிரபராதின்னு முடிவானதும் அவனை கூட்டிட்டு சென்னைக்கு வா. வந்ததும் இங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு சின்னதா ரிசப்ஷன் வைக்கனும் அதுக்கப்புறம்தான் முதலிரவு ஹனிமூன் எல்லாம் அதுக்கு ஆதியும் சரின்னு சொல்லிட்டான். நீயும் ஒழுங்கா இரு அவன்ட்ட போகாதேன்னு நீ சென்னையை விட்டு கிளம்பறப்பவே நான் சொன்னேனே மறந்துட்டியா”

”அப்பா இருக்கட்டுமே பரவாயில்லைப்பா” என கெஞ்ச

”ஒண்ணும் வேணாம் நல்ல நேரம் காலம் பார்க்காம தாலி கட்டியாச்சி முதல்ல ஜோசியம் பார்க்கனும் நல்ல நாள் குறிக்கனும் உன் இஷ்டப்படி எல்லாம் பண்ணிட்ட இனிமே உன் அப்பாவுக்கு மரியாதை கொடுக்கற வழியை பாரு. நான் நல்ல நாள் குறிக்கற வரைக்கும் நீ ஆதியை எதுவும் செய்யக்கூடாது புரியுதா சீக்கிரமா நகைகளை கண்டுபிடிச்சிட்டு ஆதியோட ஊரு வந்து சேரு அப்புறமா நானே நாள் குறிச்சி எல்லாத்தையும் முறையா செய்றேன் புரியுதா” என அவர் கத்தவும் அவளும்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”ம் சரிப்பா” என சோகமாக சொல்லவும் அதில் திருப்தியடையாதவர் அவளிடம்

”ஃபோனை ஆதிகிட்ட கொடு”

”அவரும் கேட்டுக்கிட்டுதான்பா இருக்காரு ஃபோன் ஸ்பீக்கர்ல இருக்கு”  என்றாள் வெறுப்பாக

அவரோ ஆதியிடம்

”ஆதி நான் உங்களை மாப்பிள்ளையா இல்லை மகனா பார்க்கறேன் என் பேச்சை நீங்க மீறமாட்டீங்கன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு ஆனா யாமினியை நான் நம்பறதாயில்லை. ஒருவேளை அவள் என் பேச்சை மீறி உங்ககிட்ட வந்தாள்னா யோசிக்க வேணாம் அவளை விரட்டிடுங்க புரியுதா”

”ம்” என்றான் பலமாக அதைக் கேட்டு முறைத்தாள் யாமினி

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகாAdharvJo 2018-12-10 14:45
:D Yam's indha mega bulb thevai thana :P unga husband mele ivalo than nambikai-a 😋 anyway no worries aadhi is all URS 😍😍 mil and sil Oda understanding Seema sema sasi ma'am (y) :o shocking one yams Oda prichanai idhai vida perusa irukkun sonadhu :eek: idhuve innum kandupidikala adhai epo solve panuvanga but adhi scores in d epi :clap: :hatsoff: hey hero engineer ah?? Idhai than therindhukola waiting 😁😁 yams Oda map parthu Aadhi Oda reaction 😂😂 interesting update ma'am :clap: :clap: muttai thukura scene katalaye :sad: :D thank you and keep rocking. Apro aunty and paati silent aga irungama 😃
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகாmahinagaraj 2018-12-10 14:44
சூப்பரா இருக்கு மேம்.... :clap: 😋
ஆதி செம..😍😄
:thnkx:
Reply | Reply with quote | Quote
# Ha ha haPriyadharsini 2018-12-10 13:41
So sad yamini. Feel pannadha. Aadhiya pali vangidalam. Eppadiyo yamini propose pannita. Kavala padadha yamini Aadhium un Mela feel aaitapula. So Ne kavalaiye padadha Aadhi unaku matum tha. Aadhi yamini ta eppadi yavadhu avan feel ah velipaduthita yamini ku indha Bayam poidum. Indha episode LA yamini ku James Bond vela edhum illa pola. Eppo da nagaiya kandu pidipa.? Sasireka eppavum pola super episode nu solla thonamatengudhu. Yen na idhu cute episode. So sweet.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகாsaaru 2018-12-10 06:34
Nice
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top