Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

”சரிங்க மாப்பிள்ளை நான் ஃபோன் வைச்சிடறேன் இனிமே நீங்க பயப்படாம தூங்குங்க” என நிம்மதியாக சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார்.

ஆதியும் யாமினியை பார்த்தான் ஏமாற்ற முகத்துடன் அமைதியாக இருந்தவளைப் பார்த்து பரிதாபப்பட்டான்

”அய்யோ பாவம் எனக்கு என் தாத்தான்னா உனக்கு உங்கப்பாவேதான் எதிரி. என்ன செய்றது பொறுமையா இரு உனக்காகவே நான் சீக்கிரமா நகைகளை தேடறேன். அதுவரைக்கும் அமைதியா இரு மொத்தமா சேர்த்து உன் ஊர்ல முதலிரவு வெச்சிக்கலாம்” என தனக்குள் சொல்லிக்கொண்டே கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த ஊதுவத்தியை தண்ணீர் விட்டு அணைத்து ஓரமாக வைத்துவிட்டு சொம்பு பாலை கடகடவென குடித்துவிட்டு கட்டிலில்  படுக்காமல் போர்வை தலையணையுடன் தரையில் படுத்துக் கொண்டான்.  

ஏற்கனவே காலை முதல் நிறைய வேலைகள் செய்ததால் சோர்வு காரணமாக தன்னை மறந்து படுத்த உடனே உறங்கிவிட்டான் ஆதி. அவன் செய்வதைப் பார்த்த யாமினிக்கு வெறுப்பே வந்தது

”அடப்பாவி நீயும் அப்பாவும் சேர்ந்து பிரகாசமா எரிய வேண்டிய விளக்கை இப்படி அணைச்சிட்டீங்களே சே  ஒரு சொம்பு புல்லா இருந்த பாலை வேற குடிச்சிட்டு நிம்மதியா படுத்திருக்கியா படு உன் மேல இருக்கற தப்பு போய் நீ நல்லவன்னு ஊர் சொல்லட்டும் அப்ப உன்னை சென்னைக்கு கூட்டிட்டு போய் உனக்கு வேப்பிலை அடிக்கிறேன்” என கோபமாக நினைத்துக் கொண்டு தன்னையே ஒரு நிமிடம் பார்த்தாள்.

”சே எவ்ளோ அழகா அலங்காரம் செஞ்சிக்கிட்டேன் பட்டுப்புடவை நகைங்க எவ்ளோ அழகாயிருக்கேன் என்னை இப்படி பார்த்துமா இவனுக்கு எப்படி தூக்கம் வருது  5 வருஷமா இங்க அடிமையா இருந்து இருந்து சூடு சுரனையே இல்லாம இருக்கானே இவனை வைச்சி எப்படித்தான் வாழப்போறேனோ.” என நொந்துக் கொண்டே புலம்பியபடியே தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி பத்திரமாக பீரோவில் வைத்தவள்.

அவன் கண்கள் மூடியிருக்கவும் கோபமாக அவனை முறைத்துவிட்டு நைட்டியை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்கு சென்று உடையை மாற்றிக்கொண்டு திரும்பி வந்து லைட் அணைத்துவிட்டு கட்டிலில்  படுத்துக்கொண்டு கஷ்டப்பட்டு எதை எதையோ நினைத்து எதுவும் நடக்காமல் போன துக்கத்துடன் நேரம் கழித்து தன்னை மறந்து உறங்க ஆரம்பித்தாள் யாமினி...

தொடரும்...

Episode # 05

Episode # 07

Go to En vazhvu unnodu thaan story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகாAdharvJo 2018-12-10 14:45
:D Yam's indha mega bulb thevai thana :P unga husband mele ivalo than nambikai-a 😋 anyway no worries aadhi is all URS 😍😍 mil and sil Oda understanding Seema sema sasi ma'am (y) :o shocking one yams Oda prichanai idhai vida perusa irukkun sonadhu :eek: idhuve innum kandupidikala adhai epo solve panuvanga but adhi scores in d epi :clap: :hatsoff: hey hero engineer ah?? Idhai than therindhukola waiting 😁😁 yams Oda map parthu Aadhi Oda reaction 😂😂 interesting update ma'am :clap: :clap: muttai thukura scene katalaye :sad: :D thank you and keep rocking. Apro aunty and paati silent aga irungama 😃
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகாmahinagaraj 2018-12-10 14:44
சூப்பரா இருக்கு மேம்.... :clap: 😋
ஆதி செம..😍😄
:thnkx:
Reply | Reply with quote | Quote
# Ha ha haPriyadharsini 2018-12-10 13:41
So sad yamini. Feel pannadha. Aadhiya pali vangidalam. Eppadiyo yamini propose pannita. Kavala padadha yamini Aadhium un Mela feel aaitapula. So Ne kavalaiye padadha Aadhi unaku matum tha. Aadhi yamini ta eppadi yavadhu avan feel ah velipaduthita yamini ku indha Bayam poidum. Indha episode LA yamini ku James Bond vela edhum illa pola. Eppo da nagaiya kandu pidipa.? Sasireka eppavum pola super episode nu solla thonamatengudhu. Yen na idhu cute episode. So sweet.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகாsaaru 2018-12-10 06:34
Nice
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 18 Mar 2019 03:50
கடலூர்

மாலை 6 மணிக்கு ஆதியின் வீட்டை அடைந்த 10 கார்களும் வரிசையாக வீட்டின் போர்டிகோவில் நின்றன. வீட்டில் வேலை செய்பவர்கள் அவசரமாக அந்த கார்களிடம் சென்றனர். கார்களை விட்டு இறங்கிய இரண்டு குடும்பமும் தங்களின் லக்கேஜ்கள் கூட எடுக்காமல் வீட்டுக்குள் தடாலாடியாக நுழைந்தனர்.

ஆதியோ முற்றத்தில் அமர்ந்துக் கொண்டு வெறும் வேட்டியுடன் பனியன் சட்டையில்லாமல் நிம்மதியாக காத்து வாங்கிக் கொண்டிருந்தான்.

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...thaan-sasirekha-20_1
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 11 Mar 2019 05:46
ஆதித்யவர்மன் வீட்டை விட்டு சென்ற ஒரு வாரம் கழித்து சோமசுந்தரம் வீட்டிற்கு ஒருவன் வந்தான் கையில் பெரிய பையுடன், வீட்டு வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்த சந்திரன் கோபத்துடன் அவனிடம் சென்று கத்தினான்

”டேய் நீயாடா பாவி உன்னை நான் எவ்ளோ நம்பினேன், என்னை மோசம் பண்ணிட்டியே, நம்ப வைச்சி கழுத்தை அறுத்திட்டியேடா பாவி, இங்க எதுக்கு வந்த இன்னும் எதையாவது பேசி என்னை ஏமாத்தலாம்னா போடா வெளிய” என அவன் பாட்டுக்கு கத்தவும் சோமசுந்தரம் சந்திரனைத் தடுத்தார்

*****

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-19
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 04 Mar 2019 06:57
தனலட்சுமியின் மனதை நன்றாக குழப்பிவிட்ட சந்தோஷத்தில் மகாவின் அறை கதவைத் தட்டினான் ஆதி. அதைக் கேட்டு மகா கதவு திறக்க வெளியில் இருந்த ஆதி உள்ளே வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவன் முகம் வெறுப்புடன் இருப்பதைக் கண்டு அதிர்ந்த மகாவோ அவனிடம்

”ஆதி” என பாசமாக அழைக்க அவனோ

“நீ எப்ப வீட்டைவிட்டு போற” என கோபமாக கேட்க அவள் அதிர்ந்தாள்.

******
படிக்கத் தவறாதீர்கள்!!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-18
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 25 Feb 2019 05:33
காலையில் அவசரமாக யாமினி உறங்கிக் கொண்டிருந்த ஆதித்யவர்மனை எழுப்பினாள்.

”ஆதி எழு ஆதி” என கத்த அவனும் உறக்கம் கலைந்து மெல்ல கண்களை கசக்கிக் கொண்டு எழுந்த ஆதி தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து

”என்ன இங்க உட்கார்ந்திருக்க”

”ஏன் நான் உன் கூட இருக்க கூடாதா” என ஆசையாக பேசியபடியே அவனது தோளில் சாய்ந்துக் கொண்ட யாமினியைக் கண்ட ஆதியோ

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-17
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 18 Feb 2019 07:03
கஜலட்சுமியை அனுப்பிவிட்ட சந்தோஷத்தில் குஷியாக வீட்டுக்குள் வந்த ஆதித்யவர்மனிடம் முதல் ஆளாக எதிர்பட்டு பேசினாள் மகாலட்சுமி

”என்ன ஆதி நீ வந்தது எதுக்கு, உன் கல்யாணத்துக்கா இல்லை இங்கிருக்கற பிரச்சனைகளை சரிசெஞ்சி எல்லாரையும் அனுப்பி வைக்கிறதுக்கா” என மகா சந்தேகமாக கேட்க அதற்கு ஆதி

“ரெண்டும்தான்” என சிரிப்புடன் சொன்னவனை சந்தேகமாகப் பார்த்தவள் அவனிடம் அதிகாரமாக

”எப்படி” என கேட்டதும் ஆதி அவளை கலாய்க்கலானான்.

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-16

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top