(Reading time: 21 - 41 minutes)

அவளுக்கோ, யாராவது ஏதாவது சொன்னால் கோவிச்சுகிட்டு சிணுங்கும் சிறு பிள்ளை  போல இருந்தது அவனின் செயல்...

“ஹ்ம்ம்ம்  மீசை வச்ச குழந்தை போல.. “ என்று உள்ளுக்குள்  சிரித்துகொண்டவள்

‘ஹ்ம்ம்ம் நீங்க இப்ப குடிக்கலைனா நான் அத்தைக்கு போன் பண்ணுவேன் .. “என்று மிரட்டினாள்...

“ஏய்... இப்ப எதுக்கு அவங்களை இழுக்கிற..”  என்றான் பதறியவாறு...” இவ பாட்டுக்கு போன் பண்ணி ஏதாவது உளறி வைக்க போறா.. “ என்ற பதட்டத்துடன்

“ஹ்ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.. “ என்று மனதுக்குள் நினைத்தவள்

“ஹா ஹா ஹா.. நான் இன்னும் இழுக்கவே இல்லையே... அதுக்குள்ள எதுக்கு அலறீங்க... நீங்க குடிக்கலைனா தான் நான் சொல்லுவேணாம்...  நீங்க தான் சமத்தா குடிச்சிடுவீங்களாம்.. அதனால நான் சொல்ல மாட்டேனாம்.. “ என்று சிரித்தாள்...

அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

. இலலை என் பையன திட்டினியா??? " என்று அவளை  மடக்கினார் சுசிலா

"ஹீ ஹீ ஹீ.. மனசுக்குள்ள திட்டிகிட்டு இருந்தேன் டாக்டர்... " என்று உண்மையை சொன்னாள்

"ஹா ஹா .. பார்த்தியா.. நீ என் புள்ளைய திட்டறது அவன் புள்ளைக்கு பொறுக்கலை.. அதான் உன்னை உதைக்க ஆரம்பிச்சுட்டா... " என்று சிரித்தார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.