Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஞ்சை

அரக்க பரக்க கண்விழித்த ஈஸ்வரனின் இதயத் துடிப்போ வேகமாக துடிக்க வேகமாக மூச்சு வாங்கியபடியே வேர்த்து விருவிருத்திருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் கோபமாக தன்னை எழுப்பிய நிரஞ்சனைப் பார்த்து முறைத்தபடியே

”என்னடா” என கத்த

”வீடு வந்துடுச்சிண்ணா” என்றான் இயல்பாக சிரித்தபடியே

“போடா டேய் உன்னோட” என அதற்கு மேல் திட்ட மனமில்லாமல் நிப்பாட்ட

”என்ன அண்ணா என்னாச்சி ஏன் இப்ப கத்தறீங்க ஓ சாரிண்ணா தூக்கத்தை கெடுத்துட்டேனா” என பாவமான முகத்துடன் கேட்க அவனின் குழந்தை முகத்தைக்கண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் ஈஸ்வரன். மெதுவாக நிரஞ்சனிடம்

”இல்லைடா ஒரு கனவு வந்திச்சி” என்றான் இயல்பாக அதைக்கேட்ட நிரஞ்சனோ கண்கள் விரிய நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு

“போச்சிடா எப்படிண்ணா சிங்கிள் கேப்ல கூட உனக்கு கனவு வருது” என பதட்டமாக கேட்க

“வருதே” என்றான் சுவாசத்தை அமைதியாக விட்டபடியே

“சரி என்ன கனவு வந்துச்சிண்ணா” என ஆர்வமாக கேட்க அதற்கு ஈஸ்வரனோ

”அட போடா இன்னிக்கு கனவுல பத்மாவதி அந்த தர்னேந்திரன் முன்னாடி வந்து நெருக்கமா நின்னாடா அவள் கண்களை பார்த்தேன் அப்படி ஒரு பவர் தெரியுமா இது போல கண்களை நான் எந்த பொண்ணுக்கிட்டயும் பார்க்கலை அவ்ளோ அழகு” என சொல்ல அதைக்கேட்ட நிரஞ்சனோ கண்கள் விரிய ஆச்சர்ய சிரிப்புடன்

“ஓ சூப்பர் ஆளு எப்படியிருந்தாள்ணா” என ஆர்வமாக கேட்டவனைப் பார்த்து முறைத்தவன்

“எங்கடா பார்க்க விட்ட கண்ணை பார்த்தேன் அப்புறம் முகத்தை பார்க்கலாம்னு இருந்தப்ப என்னை உலுக்கி எழுப்பி விட்டுட்ட” என நொந்தப்படி சொல்ல நிரஞ்சனோ

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”அய்யோ சே மோசம் போயிட்டேனே மோசம் போயிட்டேனே” என புலம்பினான்

”என்னடா ஆச்சி நீ எங்க மோசம் போன”

“இல்லைண்ணா இதுவரைக்கும் நீயா கனவு கண்டு பயந்து எழுந்து உட்காருவ இன்னிக்கு பார்த்து நீ பத்மாவதியை சைட் அடிக்க ஆரம்பிச்ச அதுக்குள்ள நான் எழுப்பிட்டேன் இல்லைன்னா அந்த முகத்தையாவது நீ பார்த்திருப்ப கரெக்டா”

“சரி விடு வா போலாம்” என சொல்லிய ஈஸ்வரன் அவசரமாக சட்டை பட்டனை போட்டுக் கொண்டு பத்திரமாக வைத்திருந்த கோட்டையும் மாட்டிக் கொண்டான். அதைப்பார்த்த நிரஞ்சனோ

”நீ கவலையே படாதண்ணா அடுத்த முறை கனவு வரும் போது நான் உன்னை எழுப்பவே மாட்டேன் நீ ஃப்ரீயா பத்மாவதியை சைட் அடிக்கலாம் ஓகேவா” என்றான் குதூகலமாக அதைக்கேட்ட ஈஸ்வரனோ சிரிப்புடன்

“சரி சரி வா இறங்கு” என சொல்லி இருவரும் மாட்டு வண்டியில் இருந்து இறங்கி நின்றார்கள்.

அந்த கால வீட்டு முன் நின்ற ஈஸ்வரனோ வீட்டையும் வீட்டிற்கு முன் போடப்பட்டிருந்த கோலத்தையும் மாறி மாறி பார்த்தான். அவனது பார்வையைக் கண்ட நிரஞ்சனோ உற்சாகமாக

”அண்ணா இந்த வீடுதான் உன் கனவுல வந்த வீடா” என கேட்க

”இல்லையே” என சொல்ல அதைக்கேட்டு ஏமாற்றமடைந்த நிரஞ்சனோ

“அப்புறம் எதுக்கு வீட்டையே பார்த்துக்கிட்டு இருக்க வா உள்ள போலாம் வாண்ணா” என சொல்ல

அந்நேரம் ஈஸ்வரனோ சுற்றி முற்றும் பார்த்தான். இடது பக்கம் திரும்பியவன் கண்களுக்கு தூரத்தில் பத்மாவதி நிற்பது போல தெரியவே அதிர்ந்தான். வாயை ஆவென பிளந்தபடி கண்களை கூர்மையாக்கி அவன் யார் என பார்ப்பதற்குள் நிரஞ்சனோ

”அண்ணா அங்க என்ன வேடிக்கை இங்க பாருங்கண்ணா” என சொல்லி உலுக்கவும் அதில் தலையை திருப்பிய ஈஸ்வரனோ நிரஞ்சனை ஒரு முறை முறைத்துவிட்டு அவரசமாக திரும்பி பார்த்தான். அங்கு யாரும் இல்லாமல் போகவே அதிர்ந்தான்.

மெல்ல அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் பட்டுப்புடவை சரசரக்க பளபளவென நகைகள் மின்ன முகமெல்லாம் மலர்ச்சியுடன் சிரித்தபடியே வள்ளி  ஆரத்தி தட்டுடன் அவர்கள் முன் வந்து நின்றாள்

”இருங்க மாப்பிள்ளை ஆரத்தி எடுக்கறேன்” என ஈஸ்வரனிடம் சொல்ல பக்கத்தில் இருந்த நிரஞ்சனோ

”ஹலோ ஆன்ட்டி நானும்தான் இருக்கேன் எனக்கு ஆரத்தி எடுக்க மாட்டீங்களா” என கேட்க

”உனக்கும்தான்பா சேர்ந்து நில்லுங்க” என சொல்லவும் நிரஞ்சனும் சந்தோஷமாக ஈஸ்வரன் பக்கத்தில் நிற்கவும் இருவருக்கும் சேர்த்தாற் போல் ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தார் வள்ளி.

அவருக்கு பின் குமரவேலும் அவருக்கு பக்கத்தில் ஆனந்தி வெட்கத்துடன் முகத்தை தாழ்த்திக் கொண்டு ஓரக்கண்ணால் ஈஸ்வரனைப் பார்த்தபடி இருந்தாள். மீனாவோ மாட்டு வண்டியை அழைத்துக் கொண்டு ஒரு ஓரமாக நிற்க வைத்து விட்டு வீட்டிற்குள் செல்ல நடந்து வந்தவள் அங்கு வள்ளி ஆரத்தி சுற்றுவதைக்கண்டு வியந்தாள்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகாsaaru 2018-12-14 06:11
Nice update...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகாAdharvJo 2018-12-13 13:18
:eek: ivaru ena kanavu kandute irukaru sasi ma'am :D Anyway kadhai kula varum kadhai thrilling+suspense filled aga irukku but ippadi bits and pieces aga varadhala sariya relate pana mudiyalai main story oda idhu thaan highlight aga irukku madam ji :clap: :clap: super drive!
Iswar and Meena naduvil varum fight nala thaan pogudhu :dance: sema nose cut vanguraru...Baby bro meena unga thangachi not anandhi oda thangachi mind it mind it :D :lol: vazhidhu konjam thodachikonga…..adutha indha scene sinnappa ena panuporarun therindhu kola waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகாmahinagaraj 2018-12-13 11:15
அட்டகாசமா இருக்கு மேம்....👏👏 :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top