(Reading time: 13 - 26 minutes)

மொழிபெயர்ப்பாளன் வீடு வந்து சேர்ந்தான், அவன் மனைவி தான் அன்று கதவைத் திறந்தாள். எப்பொழுதும் போல அவள் முகத்தில் கடுகடுப்பு. அவளை திருமணம் செய்ததற்காக மொழிபெயர்ப்பாளன் வருத்தப்பட்டிருக்கிறான்.

தினமும் வார்த்தைகளால் வறுத்தெடுப்பாள். எப்படியோ இரண்டு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்துவிட்டாள். 'இந்த சண்டைக்காரியிடம் எப்படி தான் குடும்பம் நடத்தி குழந்தை

பெற்றுக்கொண்டானோ' என அக்கம்பக்கத்தினர் கேலி பேசுவதும் உண்டு.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"என் தூக்கத்தை கெடுக்குறதுக்குதான் இவ்வளவு நேரம் கழிச்சு வரியா?"

"அமெரிக்ககாரர்கள் வர சொன்னாங்க" என்றபடி உள்ளே நுழைந்தான் மொழிபெயர்ப்பாளன்.

"எதுக்கு? இன்னும் சில மனநலம் இல்லாத பசங்கள வளக்குறதுக்கா?"

"போதும் நிறுத்து. எப்போ பாரு எரிஞ்சு எரிஞ்சு விழுந்துட்டு. ஒரு நாளாச்சும் சிரிச்சு பேசிருக்கியா? வீட்டுக்கு வந்தாலே நரகத்துக்கு வந்தது போல இருக்கு"

"நீ தினமும் பொன்னும் பொருளும் மூட்டை கட்டி கொண்டு வா. சிரிச்ச முகத்தோட உன்னை வரவேத்து வாழ்த்து பாடுறேன்"

'இவகிட்ட போய் பேச்சு கொடுத்தேன் பாரு' என நொந்துகொண்ட மொழிபெயர்ப்பாளன் தன் சட்டையைக் கழட்டி துணியால் தன் உடலைத் துடைத்தான்.

"நான் எல்லாம் பேசிட்டேன். மாலிகாவை அவ வீட்டுல விட்டுடலாம்"

மனைவியின் முகத்தில் ஆச்சர்யம். "உண்மையாவா சொல்லுற?"

"ஆமா"

"காலையில அவளை கூட்டிட்டு போறேன்"

"எதுக்கு காலையில? இப்போவே அவளை எங்கயாச்சும் கூட்டிட்டு போய் விட்டுட்டு வா"

"இந்த நேரத்திலயா?" மொழிபெயர்ப்பாளன் அதிர்ந்தான்.

"காலையில அவளை அழைச்சிட்டு போனா அவ நிலையை பாத்து ஊர்க்காரங்க திரும்ப அவளை நம்ம தலையிலையே கட்டிடுவாங்க"

"என்ன இருந்தாலும் சின்ன பொண்ணு இல்லையா? காலையில கூட்டிட்டு போறனே. மழை வேற அதிகமா இருக்கு"

"ஆமாய்யா, நம்மளை பாத்து இரக்கப்பட நாதியில்லை. இதுல அவளுக்கு நீ இரக்கம் காட்டுற. இதோ பாரு, நான் சொல்லுறபடி கேட்டா நமக்கு நல்லது. அவளை கூட்டிட்டு போய் எங்கயாச்சும் விட்டுட்டு வந்திடு"

வேறு வழியில்லாமல் மொழிபெயர்ப்பாளன் சம்மதித்தான்.

டக்கப்போவதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மாலிகா உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் கனவில் ஜான்சன் வந்தான். அவனோடு விளையாடினாள். ஜான்சன் அவளை தன்னோடு அழைத்துச் சென்றான். அந்த இடமெல்லாம் அழகாய் இருந்தது.

இன்னொன்றும் மாலிகாவிற்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அந்த கனவில் அவள் மற்றவர்களைப் போல் இயல்பாய் நடந்தாள், ஓடினாள், ஆடினாள். ஜான்சனால் அவளைப் பிடிக்க முடியவில்லை. சந்தோசத்தில் ஓ வென கத்தினாள்.

அவள் களைக்கவில்லை. மேலும் மேலும் வேகமாய் ஓடி மகிழ்ச்சியைக் கொண்டாடினாள். நீண்ட நேரம் விளையாடி விளையாடி இறுதியில் இருவரும் களைத்தார்கள்.

உறக்கம் அவர்களை அழைத்தது. உறங்கினார்கள்.

ஜான்சனின் சவப்பெட்டியில் மாலிகா…..

தொடரும்...

Episode # 58

Episode # 60

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.