(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 22 -முன்னோட்டம் - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

ன்பு நட்பூக்களுக்கு இந்தவார எபியை கொடுக்க முடியாமைக்கு முதலில் வருந்துகிறேன். ஏனோ என்னால் கடந்த ஒருமாதமாக மனச்சோர்வின் காரணமாகவும் என் சூழ்நிலை காரணமாகவும் கதை எழுத இயலவில்லை. போன epi கூட ஒரே இரவில் ஒருமணிநேரம் பேயாக வேகத்தில் எழுதி சரியாக நானே கூட ஆழ்ந்து வாசித்து பார்க்காமல் தளத்தில் தருவிக்க அனுப்பியது எனக்கு நிறைவாக இல்லை.

இன்னும் இரண்டு அல்லது மூன்று எபிகளில் கதையை முடிக்க நான் முடிவெடுத்து விட்டேன் இந்த ஒரு வாரம் மட்டும் கதை கொடுக்காமல் அடுத்த வாரத்திற்கான முன்னோட்டத்தை மட்டும் கொடுத்து உங்களை ஏமாற்றிவிட்டதுக்கு மனிக்கவும்.

ஆனால் அதற்கும் சேர்ந்து நீங்களே அசந்துபோகின்றமாதிரி மிக அதிக பக்கங்களுடன் அடுத்து வரும் எபிகளில் சந்திக்கிறேன்.

மேலும் கடந்த இரண்டு எபிக்கும் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் என் நன்றி. அகிலா அவர்கள் தோரியம் பற்றி அப்பிடி ஒரு தனிமம் உள்ளதா? என்று கேட்டு எழுதியிருந்தார்கள். அதற்கு விடை ஏற்கனவே 2வது எபியில் கூறியிருக்கிறேன். வாட்சபில் வந்த தோரியம் என்ற தனிமத்தை பற்றிய பதிவை வைத்து நான் கதை ஜோடிதிருக்கிறேன். அப்படி ஒரு தனிமம்  உண்மையிலேயே இருக்குதா என்று நெட்டில் நான் தேடிபார்த்த போது அது வதந்தியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.(மேலும் அதுபற்றி தெரிந்துகொள்ள இரண்டாம் எபியில் அது பற்றிய விளக்கத்தை கொடுத்திருக்கிறேன் அதை பார்க்கவும் )

ஆனால் பொருளாதார அடியாள் பற்றி நான் கூறியிருப்பது முற்றிலும் உண்மை Confessions of an Economic Hitman by John Perkins:2004 என்ற புத்தகத்தின் தமிழாக்கம் போப்பு என்பவரின் மொழிபெயர்ப்புவை நான் வாங்கி படித்தேன் ஜான் பெகின்ஸ் அவரை ஒரு பொருளாதார அடியாள் என்றும் ஜான்பெர்கின்ஸ் தனது அடியால்பனிக்கு கியாட்டோ ஈகுவடாரின் தலைநகருக்கு வரும்போது அந்நாடு இருந்த அழகையும் செழிப்பையும்  நிலைமையையும் வர்ணித்து கூறியிருந்தார்.     பின் பொருளாதார அடியாளாகிய ஜான்பெர்கின்ஸ் தனது அடியால்பனிக்கு கியாட்டோ ஈகுவடாரின் தலைநகருக்கு வரும்போது அந்நாடு இருந்த அழகையும் செழிப்பையும்  நிலைமையையும் வர்ணித்து கூறியிருந்தார்

இதுபோன்ற கோரதாண்டவம் நம் நாட்டிலும் அரங்கேரிகொண்டிருகிறதோ என்ற அச்சமும் அந்த கோர தாண்டவத்தை நம் மண்ணில் காற்பறேட்டர்கள் ஆடிகொண்டிருகிரார்களோ என்ற கேள்வியும்   இனையதளத்தில் நான் தேடிய தேடல் மூலம் கண்ட தொகுப்புக்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்

1991 ம ஆண்டுமுதல் தாராள மயமாக்கல் என்ற கொள்கையில் இந்தியாவில் பல பணக்காரர்கள் உருவாக ஆரம்பித்தார்கள் இதற்கு தொழில் கொள்கையில் பல விதிகள் தளர்த்தப்பட்டன.இதனால் இந்தியாவின் வளர்ச்சியை அவர்கள் (அப்புதிய பணக்காரர்கலாகிய கார்பரேட்)  புதிதாக கட்டமைக்கத் தொடங்கினார்கள்.இந்தியா போன்ற நாடுகளின் தனியார் மயமாதல் என்ற கொள்கையின் அடிப்படையில் நாடு படுவேகமாக வளர்ச்சியடையும் நாடு இந்தியா என்று புள்ளிவிவரங்கள் கூறப்பட்டது .இதற்கு முக்கியகாரணம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான கனிமங்கள் .பூமியை குடைந்து எடுக்கப்பட்ட வளங்கள் மூலம் கார்பரேட் தங்களது வளங்களை பெருக்கிகொண்டன.இதனால் செல்வங்கள் மிகச்சில நபர்களிடம் மட்டுமே குவியத்தொடங்கின .அந்த கார்பரேட்டர்கள் எங்கெல்லாம் லாபம் ஈட்ட முடியும் என்று நினைத்தார்களோ அங்கெல்லாம் அறுவடை செய்ய ஆரம்பித்தனர்.இதற்கு விதிகள் என்ற பெயரில் ஏதேனும் முட்டுக்கட்டைகள் வந்தால் அந்த விதிகளையும் மாற்றிகொண்டார்கள். இவ்வாறு கார்பரேட்டார்களின்  தாக்கம் நாடெங்கும் வேகமாகபரவத் தொடங்கியது .இது நாட்டின் வளர்ச்சிக்கென்று ஒரு சாராரும் இல்லை ஒருநோய் என்று ஒரு சாரரும் குரல் கொடுத்தனர்.உண்மை எதுவென்று ஆராய்ந்து பார்த்தால் இன்றைய கார்பரேட் நிறுவனங்களோ நம்மை ஆளுபவர்களின் உதவியோடு கொள்ளையடிக்கும் கூட்டமாகவே இருப்பதாக நமக்கு தெரிகிறார்கள்.அதை உறுதிபடுத்தும் விதமாக இந்தியாவில் அரங்கேறிய சம்பவம் ஏராளம். விஜய் மல்லையா முதல் நீரவ் மோடி வரை இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் பெரும்பாலனவர்கள் ஊழல்வாதிகள் என்றே நிரூபணம் செய்யப்பட்டனர்.தலைவர்களும் அதிகாரிகளும் கடமையை சரியாக செய்யாததன் காரணமாகவே இதுபோன்ற தொழிலதிபர்கள் வளர்வதற்கு காரணமாக இருப்பது மறுக்க முடியாத ஒன்று .எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை தேர்ந்த்தேடுப்பதில் கார்பரேட் முக்கிய பங்கை ஆற்றி வருகின்றனர்.மத்திய ஆட்சியாளர்கள் முதல் மாநில ஆட்சியாளர்கள் வரை இந்தியாவின் பெரிய கட்சியாளர்கள் அனைவரும்  கர்பரேட்டர்களிடம் நிதியை பெறுகின்றனர். ஆளும்கட்சிமுதல் எதிர்கட்சிவரை அனைவருக்கும் கார்பரேட் பணத்தினை அள்ளி கொடுக்கின்றனர் அவ்வாறு அல்லிகொடுப்பதற்கு அவர்கள் தொண்டு நிறுவனம் ஒன்றும் நடத்தவில்லை அவர்களின் ஒரே நோக்கம் லாபம் என்ற ஒரே இலக்கிற்காக மட்டுமே கோடிகோடியாய் பணத்தை பெரியகட்சிகளுக்கு அள்ளி கொடுக்கின்றனர்

முன்னோட்டம்:

த்திய மூர்த்தி தன்னிடம் பகிர்ந்த வார்த்தை வானவராயருக்கு அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.

உன் மகனை நான் பார்த்தேன் வானவா என்று சத்திய மூர்த்தி கூறியதும் என் மகனா என்ன சொல்ற சத்தி என்று குழப்பத்துடன் அவரை கேள்விகேட்ட வானவராயரிடம்.

உன் காதில் விழுந்த வார்த்தை சரிதான் உன் மகனைத்தான் பார்த்தேன் உனக்கும் பத்மினிக்கும் பிறந்த தீரமிகுந்தனை சந்தித்துவிட்டுத்தான் இப்போ வருகிறேன் என்றார் சத்திய மூர்த்தி.

என்ன பத்மினிக்கும் எனக்கும் மகன் பிறந்தானா? என் மகனை நீ பார்த்தாயா? அவன் பேர் தீரமிகுந்தனா? எப்போ பார்த்த? எங்க பார்த்த? என்னை அங்க கூட்டிட்டு போ சத்தி என பரபரத்தார்.

தனது நண்பனின் நிலையை பார்த்த சத்தியமூர்த்திக்கு கண் கலங்கியது எப்பொழுத்தும் நிதானத்துடனும் கம்பீரத்துடனும் வளம் வரும் வானவராயரிடம் கண்ட இந்த தடுமாற்றம் இந்த படபடப்பு அவரின் நிலையை அவருக்கு தெளிவாக விலக்கியது.

தன மனைவியின் நடத்தை விமர்சிக்கபடுவதை பொருக்காமல் அவளை அடக்க தான் பேசிய வார்த்தையை சந்தேகம் என்று புரிந்து விளகிச்சென்ற பத்மினியை நினைத்து  வருத்தத்தில் தேடி அழைந்தவனின் காதில் விழுந்த பெரியவீட்டு மருமகள் ஓடிப்போய்விட்டால் என்று  ஊர் பேசிய வார்த்தையில் ஒடிந்துபோனவனை கண்டு தேவகி {வானவராயரின் அக்கா மகள்தான் பத்மினி } தனது மகளினால் நிலைகுலைந்துபோன தன பெற்ற வீட்டின் நிலையை சீர்படுத்த தன மகள் இருந்த இடத்தில் பொறுமையே உறைவிடமான வெள்ளையம்மாளை இருத்த போராட ஆரம்பித்தாள்.

 

பத்மினியின் அப்பா சேதுபதி அம்மா தேவகி இருவரும் மேட்டுப்பா;லயத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரும் காதலித்தனர் தேவகியோ ஜமீந்தாரின் மகள்

சேதுபதியோ தகப்பன் இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஒழுக்கம் மிகுந்த சிறு விவசாய குடும்பத்தில் வாழ்பவன்

அவனது அம்மா மகனை கஷ்ட்டப்பட்டு படிக்க வைத்து பெரிய மனிதனாக்கவேண்டும் என்று ஆசையோடு இருந்தவர் அவரது பள்ளிபடிப்பு முடிந்த தருவாயில் இறந்ததால் தாத்தா பாட்டியுடன்  வசித்துவந்தவர் தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கஷ்ட்டப்பதட்டு நல்ல மதிப்பெண் பெற்று காலர்சிப்பில் கல்லூரியில் சேர்ந்து படித்துகொண்டிருந்தார்.

அவரது வீடு இருந்த தெருவில் இருந்த கோவிலுக்கு வரும் தேவகி பார்வையில் அமைதியாக நல்ல பண்புகளுடன் கல்லூரியில் படித்துகொண்டிருந்த சேதுராமனின் மேல் காதல் கொண்டாள்

சேதுராமனும் தன்னை கடைகன்னால் கண்டபடி கோவிலுக்கு வரும் ஜமீன்தாரின் மகளின் மீது மையல் கொண்டார்.

சேதுராமனின் கல்லூரி வாழ்கையின் முடிவில் இந்திய அளவில் நடைபெற்ற கவர்மென்ட் பொறியாளர் தேர்வில் வெற்றிபெற்று பொறியாளர் வேலை கிடைத்தது. அப்பொழுது தங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் தங்களால் ஜமீன்தாரை எதிர்த்து திருமணம் செய்து வாழமுடியாது என்று அவருக்கு பணியிடத்தை நார்த் இந்தியாவில் விருப்பமாக கூறி விண்ணப்பித்து போஸ்டிங் பெற்றார்.

அதனை தொடர்ந்து  தேவகிஇடம் தனக்கு வேலைகிடைத்த விஷயத்தை கூறி வீட்டிற்குத் தெரியாமல் கூடிக்கொண்டு நார்த் இந்தியாவிற்கு சென்று கல்யாணம் முடித்து வாழ்க்கையை தொடங்கினர் .

அவர்களின் வாழ்க்கைக்கு பரிசாக பிறந்தவள்தான் பத்மினி. பத்மினியின் பக்கத்து வீடு தமிழ்நாட்டு பாரம்பரிய பிராமின் குடும்பத்துடன் நெருங்கி பழகிவந்தனர்

அந்த பிராமின் வீட்டு வாரிசான விசாலியும் பத்மினியும் நெருங்கிய தோழிகளாக வளர்ந்தனர்.

தலைநகர் டெல்கியில் பிறந்து வளர்ந்த பத்மினி நடை உடை பேச்சு அனைத்தும் நாகரீகமாக ஆண் பெண் நட்புகள் கூட அந்த காலர்த்திலேயே இயல்பாக ஏற்று பழகும் பணக்கார கூட்தத்தின் அங்கமாக மாரிபோனால்.

தீரமிகுந்தனின் அதிரடியான இதழ் முத்த யுத்தம் யாழிசையை பெரிதும் சஞ்சலபடுத்தியிருந்தது. யாழிசைக்கு இரவு நெருங்க நெருங்க ஒருவித பயமும் எதிர்பார்ப்பும் ஒருங்கே எழுந்தாலும் இப்பொழுது அவளுக்கு அவனின் மேல் காதல் மயக்கம் கூடியிருந்தாலும் தன அப்பா மற்றும் பாட்டி அங்கே தன்னை நினைத்து தவித்துகொண்டிருப்பதை நினைத்து வருந்திகொண்டிருப்பதவளிடம்  சத்தியமூர்த்தியின்  வேறு உன்ன பெத்து வளர்த்தவங்களுக்கு நல்.....ல பேரை  இப்படி ஓடிவந்து சம்பாதித்து கொடுத்துட்டேமா என்ற குதர்க்கமான வார்த்தை அவளை அவனின் மீது உண்டான மயக்கத்தை அழுத்தி வைக்கவே முயன்றது .

ஆனால் அவனின் ஆழுமையை ஓர் முத்ததிலேயே கண்டுகொண்ட யாழிசை அவனை தன்னால் தடுக்க முடியுமா? என்ற எண்ணமும் தன இந்த ரெண்டுகெட்டான் மனநிலையில் அவன் தன்னை நெருங்கினால் தன்னால் முழுமையாக அவனுடன் ஒன்ற முடியுமா இதை எப்படி தவிர்ப்பது என்று என்னிகொண்டிருகும்போது கதவு திறந்து தீரமிகுந்தன் அடியெடுத்து உள்ளே வந்தான் அவன் அருகில் வரவர அவன் கண்ணின் சிகப்பும் பேபி என்று கூறியபோது அவன் வாயிலிருந்து வந்த ஆல்ககால் வாசனையும் அவன் குடித்திருக்கிறான் என்ற உண்மையை அவளுக்கு பறைசாற்ற பூப்போன்ற பெண்ணவள் புயலைகண்டதுபோல் மருண்டுவிழித்தாள்.

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her next episode.

Episode # 21

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.