(Reading time: 36 - 71 minutes)

தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்? - 05 - சுதி

Uyire yen pirinthaai

விரிந்திருந்த தலை முடியை அள்ளி கொண்டையாக போட்டவள்.அவன் சட்டையை பிடித்து உளுக்கி என்ன சொன்னாய்?மறுபடியும் சொல்.உன்னை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?என்னிடம் இதை சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னிடம் இப்படி சொல்வாய்.என் அக்காவை காதலித்தாய் அவளைதான் மணப்பேன் என்றாய்.இன்று என்னை மணக்க கேட்கிறாய். இவ்வளவுதான் உன் காதலா.

குளிரால் நடுங்கினாய் வேறு வழி இல்லாமல் என்றாயே,உன்னிடம் வரும் எல்லா பேசண்டிடமும் இப்படிதான் நடந்து கொள்வாயா?உன்னை எவ்வளவு நம்பினேன்.அந்த அயோக்கியர்களிடம் இருந்து தப்பிக்க உன்னிடம் வந்தேன். கடைசியில் அவர்கள் என்ன நினைத்து எனக்கு மயக்க மருந்து கொடுத்தார்களோ,அதை நீ செய்து விட்டாய்.

உனக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.என்னை பொருத்தவரை இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.இந்த நிமிடம் நான் சொல்வதை நன்றாக காதில் வாங்கி கொள்.

இந்த உலகத்தில் நான் அதிகமாக வெறுக்கும்,மீண்டும் சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் ஒரே ஆள் நீ .நீ மட்டும்தான் இனி என் முகத்தில் முழிக்காதே என்றவள் வெளியே செல்ல திரும்பியவளுக்கு மயக்கம் வருவது போல் இருக்க தலையை பிடித்து கொண்டு அங்கிருந்த சுவரில் சாய்ந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சுவாதியின் ஒவ்வொரு கேள்விக்கும் ஆமாம் டி நீ என்னுடையவள் என்னை மணந்து கொள்.எனக்கானவளை மணந்து கொள்ள கேட்பதில் எதுக்குடி வெட்கம்.என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் வது நீ என்னுடையவள் என்ற உரிமைதான் என்னை உன்னிடம் அப்படி நடந்து கொள்ள வைத்தது.

உன்னை தவிர வேறு யாராக இருந்தாலும் என்னால் என்னால் நல்ல டாக்டராக அவர்களை பாதுகாத்திருக்க முடியும். ஆனால் நான் ஏன் அப்படி செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

யாராக இருந்தாலும் இப்படிதான் செய்வீர்களா? என்று கேட்டதற்கு பதிலாக நீ உன் கையாலேயே என்னை கொன்னு போட்டு இருக்கலாம் என்று அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் மனதுக்குள் பதில் சொல்லி கொண்டு இருந்தான்.

சுவாதி சுவரில் சாய்ந்து நிற்பதை பார்த்து

என்ன வதுமா என்ன ஆச்சு என்று அவளின் கையை பிடித்து பார்த்தான்.அவன் தொட்ட வேகத்தில் கையை உதறியவள்.இனி ஒருமுறை என்னை தொட்டாய் அதுதான் நீ என்னை கடைசியாக பார்ப்பதாக இருக்கும்.

நீ தொட்ட கரை நீங்க என்னை நானே எரித்து கொள்வேன் என்று சொன்னவுடன் அவள் கையைவிட்டவன் அடிபட்ட பார்வை பார்த்தான்.இப்போது பேச கூடிய நிலையில் அவள் இல்லை என்பதை உணர்ந்து பிறகு பேசி கொள்ளலாம் என்று அமைதி ஆனான்.

அவளின் சோர்ந்த நிலையை உணர்ந்தவன் அவளை நெருங்கி உனக்கு ரொம்ப டயர்டாக இருக்கும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு போ.நான் உனக்கு சூடாக ஏதாவது எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவன் திரும்பி வந்து பார்க்கும் போது வெறும் அறையே வரவேற்றது.

அதற்குள் சென்று விட்டாளா?என்று நினைத்தவன் நீ செய்த வேலைக்கு இங்கிருந்து போகாமல் நீ சொல்வதை எல்லாம் கேட்பாள் என்று நினைத்தாயா?என்ற மனசாட்சியின் கேள்வியில் தப்புதான் நான் செய்தது மிக பெரிய தப்புதான்.எதனால் எனக்கு அந்த சூழ்நிலையில் அப்படி தோன்றியது என்று புரியவில்லை.

ஆனால் ஒன்று உறுதி சுவாதி சொன்னது போல் அவளிடத்தில் வேறு யாரு இருந்திருந்தாலும் நிச்சயம் நான் அப்படி நடந்து கொண்டிருக்கமாட்டேன்.அவளை விரைவில் மணமுடிப்பேன்.அவளுக்கு விருப்பம் என்றாலும் இல்லை என்றாலும் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தவனை நோக்கி வேகமாக ஓடி வந்தான் ராஜா.

என்ன ராஜா ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்று கேட்க.

சார் அந்த லட்சுமி அம்மா இறந்துட்டாங்க சார்.

 சுவாதி பொண்ணு எப்பவும் போல் பார்க்க போய் இருக்கும் போதுதான் பார்த்தது போல,என்று சுவாதி இங்கு வந்தது,அப்போதுதான் அங்கிருந்து சென்றாள் என்பதை அறியாமல் பேசி கொண்டே இருந்தான்.

அர்ஜூன்தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டு இருந்தான்.இனி அந்த மனுசன் யார வச்சு அந்த புள்ளைய பிளாக்மைல் பண்ணி காசு வாங்குவான்.என்ன இருந்தாலும் இனி இந்த பொண்ணு தனியாகதான் இருக்க வேண்டும்.

இரண்டு பொண்ண பெத்து ஒரு பொண்ணுக்கு கூட கல்யாணம் பண்ணி பார்க்கும் குடுப்பனை இல்லாமலேயே அந்த அம்மா போய் சேந்திருச்சு என்று அங்காலாய்ப்பாக கூறினான்.இருவரும் சுவாதி வீட்டுக்கு போன போது சுவாதி இனி எனக்கு யார் இருக்க என்னையும் உங்களுடன் கூட்டி போயிருக்கலாமே அம்மா இப்படி என்னை அனாதை ஆக்கிவிட்டீர்களே என்று அழுது கொண்டு இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.