(Reading time: 36 - 71 minutes)

முடியாது செல்லம்.எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் வது.......... எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் என்று ஒரு படத்தில் சொல்வது போல் சொன்னவனை முறைத்து அதற்கு கையை என்று சொல்லவந்தவள் வாயை இறுக மூடி கொண்டாள்.

ஆம் வைத்திருந்த இடம் அப்படி.........

ம்.......... சொல் வது கையை ஏன் இடையில் வைத்திருக்கிறீர்கள் என்றுதானே கேட்க வந்தாய் நானே சொல்கிறேன்.

மற்றவர்கள் பொய் சொன்னாள் அவர்கள் மூச்சு சீரற்று இருக்குமாம்.உடலில் அதிகமாக வியர்க்குமாம்.மூச்சை வைத்து கண்டுபிடிப்பேன் நீ கோப படுவாய்.அதான் இடையில் வைத்து செக் செய்கிறேன்.

நீங்கள் மூச்சை வைத்தே கண்டுபிடியுங்கள் என்று தன் இடையில் இருந்த கையை தட்டிவிட்டாள்.

சரி உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்.நீ சொன்ன மாதிரியே செய்கிறேன் என்று அவள் மார்பை நோக்கி கைகளை கொண்டு செல்ல.

ஏய்......... என்று கத்திவிட்டிருந்தாள் சுவாதி.

ஸ்...........எதுக்குடி இப்படி கத்துற.வெளில இருக்கறவங்க என்னபத்தி என்ன நினைப்பாங்க.

நீ என்ன செய்ய வந்த.நீ உன்னை என்று சொல்ல தடுமாற

நீ தானே மூச்சை வைத்து செக் செய்ய சொன்னாய்.நீ சொன்னதைதான் நான் செய்தேன்.அதற்கு ஏன் கத்துகிறாய்.

இவன் இப்படியே பேச்சை வளர்க்க பார்க்கிறான் என்பதை உணர்ந்தவள்.சரி நான் இப்போது எதுவும் சொல்லவில்லை. அதனால் அது உண்மையா?பொய்யா?என்று கண்டுபிடிக்கும் கஷ்டம் உனக்கு இல்லை.எனக்கு தூக்கம் வருகிறது.நான் தூங்க போகிறேன்.எனக்கு தரையில்படுத்து பழக்கம் இல்லை.நீ வேண்டுமானால் கீழேபடுத்து கொள்.

என்ன நான் கீழேபடுக்க வேண்டுமா?முடியாது.எனக்கும் கீழேபடுத்து பழக்கம் இல்லை.

என்னவோ செய்.எனக்கு தூக்கம் வருகிறது.நான் படுக்க போகிறேன்.வேகமாக சென்று கட்டிலில் படுத்து கொண்டாள்.அவளும்தான் என்ன செய்வாள்.காதல் கொண்ட மனம் அவனிடம் மயங்கி நிற்க இனி சிறிது நேரம் பேசினாலும் தன் காதல் மனதை அடக்குவது கஷ்டம் என்று முடிவுக்கு வந்தே படுக்க சென்றவள்.மனதினுள் அவனை திட்டி கொண்டுதான் இருந்தாள்.

ராஸ்கல்.சரியான கேடிடா நீ.உன்னிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று வந்தவளை கொஞ்ச நேரத்தில் என்ன பாடு படுத்திவிட்டாய்.இன்று ஒரு நாளே கண்ணை கட்டுதே மிடியில்ல... என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் சொன்னவள்.சுவாதி ஸ்டடி ஸ்டடி அவன் மாலதியின் காதலன்.

ப்ச்ச்ச்ச்....எத்தனை முறை மனதில் பதிய வைத்தாலும் எனக்கு ஏன் அவனை பார்க்கும் போது

என்னவன் என்றே தோன்றுகிறதே என்று எண்ணியவள் தன் மீதே கோபம் கொண்டாள்.அந்த கோபத்தை அர்ஜூன் மேல் காட்ட ஆரம்பித்தாள்.

இங்கே பார் வது........

அர்ஜூன்.

உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ,நாம் இருவரும் கணவன் மனைவி.அதனால் என்றவனை சுவாதி இடைபுகுந்து

உங்களுடன் கொஞ்ச வேண்டுமா?

கொஞ்சினாலும் தப்பில்லை.என்றவனை சுவாதி முறைக்க நல்ல நண்பர்களாக இருக்க முயற்சிக்கலாமே என்றுதான் சொல்ல வந்தேன்.நீ தான் தவறாக நினைத்து கொண்டாய்.இந்த விஷயத்தில் மட்டும் இல்லை நிறைய விஷயங்களில்,நீ தவறாகதான் நினைத்து கொண்டு இருக்கிறாய்.

நண்பர்களாக இருந்து இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாமே.

உங்களை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ம்..........முதல் இரவில் காதல் கணவனிடம் உங்களை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாள்,அதற்கு முன்பே நன்கு புரிந்து வைத்திருப்பதாகதானே அர்த்தம்.

ஆமாம் உங்களைபற்றி எனக்கு நன்றாக தெரியும்.சொல்லவா என்று நக்கலாக அர்ஜூனை பார்த்து.நீங்கள் ஒரு பச்சோந்தி நிமிடத்திற்கு நிமிடம் மனதை மாற்றி கொள்ளும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்.ஆபத்து என்று உதவி கேட்டு வந்த பெண்ணை பயன்படுத்தி கொண்ட மாமனிதர்.தனக்கு ஒன்று வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் மற்றவரின் உயிரை பணயமாக வைத்து கூட அந்த காரியத்தை சாதித்து கொள்ளும் பெரிய பிஸ்னஸ் மேன் என்று அவனை வார்த்தை அம்புகளால் துளைத்தாள்.அப்புறம் என்று சொல்லி கொண்டே போனவள்.

அர்ஜூனின் அடிபட்ட பார்வையை கண்டு பேச்சை நிறுத்தினாள்.செத்த பாம்பை திரும்ப திரும்ப அடிப்பதில் பலன் இல்லை.நீ உண்மையை புரிந்து கொள்ளும் வரை நான் காத்திருப்பேன் என்று கூறியவன் கண்களை இறுக மூடி திறந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.