(Reading time: 36 - 71 minutes)

கட்டில் பெரியதுதானே இருவருமே படுத்து கொள்ளலாம்.முறைக்காதே.என் சுண்டு விரல் கூட உன் மேல்படாது என்று அவனும் படுத்துவிட்டான்.

சற்று நேரம் உறங்குவது போல் படுத்திருந்தவள்.புது இடம் மனதுக்கு பிடித்தவனே என்றாலும் ஒரு ஆண் மகனுடன் ஒரே படுக்கையில் படுத்திருப்பது அவளுக்கு என்னவோ போல் இருந்தது.அதுமட்டும் இல்லாமல் கடைசியாக பார்த்தானே ஒரு பார்வை.என்ன பார்வை அது என்னை பார்த்து நீ என்னை புரிந்து கொண்டது அவ்வளவுதானா என்பது போல் அதே அதேதான்.அந்த பார்வை என்னிடம் அதே கேள்விதான் கேட்டது.கடைசியில் கண்ணை மூடி திறந்த போது சிவந்திருந்த மாதிரி தெரிந்ததே,அழுதிருப்பானோ.

நன்றாக பார்க்கும் முன் போய் படுத்துவிட்டான்.

தான் பேசிய வார்த்தை அவனை எந்த அளவுக்கு காயபடுத்தியிருக்கும் என்பதை அறிந்த அவளது காதல் மனது அவனுக்காக கண்ணீர் சிந்தியது.நான் என்ன செய்ய அஜூ நீ என் உயிர்.ஆனால் உன்னிடம் நெருங்கவிடாமல் என் சகோதர பாசம் தடுக்கிறது.நான் நன்றாக பேசினால் எங்கு தடுமாறிவிடுவேனோ என்ற பயம்தான் உன் மேல் கோபமாக திரும்புகிறது என்று கண்களை மூடி கொண்டு அழுதாள்.

அவளின் கண்ணீரை மென்மையாக ஒரு கரம் துடைக்கவும் திடுக்கிட்டு விழித்து எழுந்தாள்.அவன் அவளையே பார்த்து கொண்டு இந்த கண்ணீர் எனக்கானது என்றால் தேவையில்லாமல் உன் கண்ணீரை வீணாக்குகிறாய் என்றுதான் அர்த்தம்.

என் செயல்கள் உன்னை எந்த அளவு பாதித்திருக்கும் என்றும் என் மேலான உன் காதலின் அளவும் இப்போது எனக்கு நன்றாக புரிகிறது.என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்து உட்கார்ந்து அவனை பார்த்தாள்.

என்ன பார்க்கிறாய்?என்னை காயபடுத்த நீ கூறிய வார்த்தைகள் உன்னுடைய காதல் மனதையும் பாதித்திருக்கிறது. அதற்கான கண்ணீர்தான் இது.நீ எதற்காக என்னிடம் இப்படி பேசினாய் என்று என்னால் உணர முடிகிறது.

உன் விருப்பம் இல்லாமல் இங்கு எதுவும் நடக்காது.நான் முதலில் சொன்னது போல் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம். நம் மகனுக்காக நீ இந்த முயற்சி செய்வாய் என்று நம்புகிறேன். இப்போது படுத்து தூங்கு என்றவன் எழுந்தான்.

நான் சோபாவில் படுக்கிறேன்.என் மீது பயமில்லாமல் தூங்கு என்று சிரிப்புடன் சொன்னாலும் அவனது கண்களை அந்த சிரிப்பு எட்டவில்லை என்பதை அறிந்து கொண்டவள் ஒன்றும் சொல்லாமல் படுத்து கொண்டாள்.

இவர்கள் நிலை இப்படி இருக்க மற்றொரு அறையில் கீதாவிடம் மாட்டி முழித்து கொண்டு இருந்தான் நகுலன்.

நகுலனின் அறைக்குள் வேகமாக நுழைந்த கீதா அவனை கண்டு கொள்ளாமல் பெட்டில் அமர்ந்து வேக வேக மூச்சுக்களை எடுத்து தன்னை சமாளித்து கொண்டு இருந்தாள்.

என்ன பேபி என்ன ஆச்சு? நகுலன்.

யார் மேல் இவ்வளவு கோபம்?என்று அவள் அருகில் டிரஸிங் டேபிள் சேரை இழுத்து போட்டு உட்கார்ந்து கேட்டான்.

உங்கள் மேல்தான் என் கோபம்.

கீதா

நீ கோபப்படும் அளவிற்கு நான் இப்போது என்ன செய்தேன். பார் இப்போது கூட உன்னைவிட்டு இரண்டு அடி தள்ளிதானே உட்கார்ந்து இருக்கிறேன்.

உங்களை யார் நாம் காதலர்கள் என்று எல்லோரிடமும் சொல்ல சொன்னது.

ஏன்? உன் காதலன் எதுவும் சந்தேகபடுகிறாரா?போன் செய்து கொடு நான் பேசுகிறேன்.

ஹம்ம்...........ரொம்ப கஷ்டம் இல்லாத காதலனை நான் எங்கு பேச சொல்வது இதில் என் மீது சந்தேகம் வேறுபடுகிறானா?

இவனது கற்பனை திறனுக்கு அளவே இல்லையா ஆண்டவா? என்று வாய்விட்டே முணுமுணுப்பாக புலம்பியவள்.தன் தலையில்தட்டி கொண்டு வேகமாக நகுலனை பார்த்தாள்.அவள் சொல்வது அனைத்தையும் கேட்காதவன் போல் முகத்தை வைத்து கொண்டு ஏதாவது சொன்னாயா?என் காதில் சரியாக விழவில்லை கொஞ்சம் சத்தமாக சொல் என்றான் அப்பாவியாக.

நான்தான் திருமணத்திற்கு முன்பே உன் காதலனுடன் பேசுகிறேன் என்றேன்.நீதான் அவருக்கு டைம் இல்லை என்றாய்.

கீதாவின் புலம்பல் காதில் விழுந்த பிறகே நிம்மதியானான் நகுலன்.பின்னே தான் காதலித்தவள் வேறு ஒருவனை காதலிப்பதாக சொன்னாள் எந்த காதலன்தான் நிம்மதியாக இருப்பான்.

கிராதகி ஒருவனை காதலிக்கிறேன் என்று சொல்லி என்னையே ஏமாற்றிவிட்டாயே?நானும் அப்போது இருந்த குழப்பத்தில் நீ சொன்னதை எல்லாம் நம்பி.அதற்கு ஏற்றார் போல் டைவர்ஸ் பிளான் வேறு.உன்னை என்ன செய்கிறேன் பார்.நீ செய்த வேலையை உனக்கே திருப்புகிறேன் என்று மனதுக்குள் கருவி கொண்டு வெளியில் ஒன்றும் தெரியாதவன் போன்று அவளின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.