(Reading time: 36 - 71 minutes)

முதலில் நீ இங்கிருந்து வெளியே போ.ஒரு பொண்ணோட அறைக்கு இரவு நேரத்தில் வந்திருக்கிறாய் என்று சொன்னவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்.

என்ன வது டார்லிங் என்ன பேசற நீ பொண்டாட்டி ரூமுக்கு புருஷன் வர என்ன தடை என்று கேட்டான்.அவன் சொல்வதை கேட்ட சுவாதி கடகடவென சிரித்து

என்னது பொண்டாட்டியா எனக்கு தெரியாமல் எப்போது திருமணம் ஆனது என்று கிண்டலாக கேட்டாள். அவள் இது போல்தான் ஏதாவது சொல்வாள் என்று தெரிந்ததால் அவளின் சிரிப்பை ரசித்து கொண்டே தாலி மட்டும்தான் கட்டவில்லை மற்றது எல்லாம் முடிந்துவிட்டதுதானே என்று அந்த எல்லாமில்......அழுத்தம் கொடுத்து அவளின் இதழ்களை பார்த்து கொண்டே சொன்னான்.அவனுக்குதானே தெரியும் அது தந்த போதை அந்த மயக்கம் இன்னும் இவன் கண்களில் தெரிந்தது.

அவன் வார்த்தையில் அவனை நிமிர்ந்து பார்த்தவள்.அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தடுமாறி தன் தடுமாற்றத்தால் ஏற்பட்ட கோபத்தையும் அவனிடமே காட்டினாள்.

நடந்துவிட்டது என்று சொல்லாதே நடத்தி கொண்டாய் என்று சொல்.உன்னை பார்க்கவே எனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னது நினைவு இருந்திருந்தால் இப்படி என் முன் வந்து நிற்கமாட்டாய் என்று கூறியவளை இழுத்து அவள் இதழ்களை சிறை செய்தவன் வெகு நேரம் கழித்தே அவளை விடுத்தான்.

தேவையில்லாமல் கண்டதையும் பேசினால் இதுதான் உனக்கு தண்டனை.பேசாமல் இருந்தால் நான் வந்ததற்கான காரணத்தை சொல்லிவிட்டு சென்று விடுவேன் இல்லை என்றால் இது போல் தண்டனை கிடைக்கும் இதற்கு மேலும் தண்டனைகள் செல்லும் அது என் கையில் இல்லை.உன் கையில்தான் இருக்கிறது.

நீ பேசாமல் மாமா சொல்வதை கேட்டால் நான் சீக்கிரம் சென்றுவிடுவேன் என்றவன் அவளை கூர்மையாக பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டான் நிதானமாக.அவள் எதுவும் சொல்லாமல் இருப்பதை பார்த்து இன்று சனி கிழமை அடுத்த வாரம் திங்கட்கிழமை நமக்கு முருகன் கோவிலில் திருமணம்.கல்யாணம் முடிந்த பிறகு எங்கள் வீட்டிற்கு செல்லலாம்.

அம்மா ஒத்து கொள்ளமாட்டார்கள் என்பதால் இந்த பிளான் இல்லை.அவர்கள் கண்டிப்பாக ஒத்து கொள்வார்கள் உன்னை சமாளிக்க இந்த திருமண ஏற்பாடு செய்ய இந்த இரண்டு நாள் என்றவன் சரி நீ தூங்கு நான் போகிறேன் என்று திரும்பியவன் திருமணத்துக்கு பிறகு உன்னை புத்திசாலியாக மாற்றி என் காதலை நிறுபிக்கிறேன் என்றவன் சென்று விட்டான்.

சனி கிழமை என்பதால் குளித்து முடித்து நிதானமாக வந்தவளை பார்க்க காத்திருந்தார் மாலதியின் தாய்.

வாங்க மா எப்ப வந்தீங்க ரொம்ப நேரம் காக்க வைத்துவிட்டேனா ஒரு குரல் கொடுத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்று சமையலறையை பார்த்து,டீ கொண்டு வாங்க அக்கா என்று சமையல் வேலை செய்யும் சரசை ஏவினாள்.

சுவாதியை அமைதியாக இருக்கும்படி கூறிய ஆண்டள் நான் டீ குடித்துவிட்டேன் வந்தவுடனே சரசு கொடுத்துவிட்டாள். நான் இப்போது வந்தது ஒரு நல்ல விஷயம் சொல்ல திருமணம் ஆகி ஒரு வருடம் ஆக போகிற நிலையில் ரம்யா நாள் தள்ளி போய் இருக்கிறாளாம்.

நாங்கள் அவளை பார்க்க நாளை செல்கிறோம் அதான் சொல்ல வந்தேன்.எல்லாம் எடுத்து வைக்க வேண்டும் நான் கிளம்புகிறேன் என்று சென்று விட்டார் ஆண்டாள்.

தனக்கு போலவே தன் மகளுக்கும் லேட்டாக குழந்தை பிறக்குமோ என்று பயந்து கொண்டு இருந்தவர்.இந்த நல்ல செய்தியை கேட்டவுடன் தலைகால் புரியவில்லை.அதனால் சுவாதியின் பேயறைந்தார் போன்ற முக பாவமும் இவள் பேசுவதை கவனிக்காமல் அவள் அதிர்ந்து அமர்ந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.அவர் சென்றவுடன் வேகமாக தன் அறைக்கு சென்றவள் தான் கடைசியாக தலை குளித்த நாளை கணக்கிட்டாள்.கிட்டதட்ட அறுபது நாட்கள் தள்ளி போய் இருந்தது.

நான் அம்மாவாக போகிறேனா?நான் அனாதை இல்லையா?என்று தன் வயிற்றை தடவி பார்த்தவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது.தோழியாகவும் தாயாகவும் இருந்த மாலதியின் நினைவில் கண் கலங்கி அவளுடைய ஒரு சேலையை எடுத்தாள்.அந்த சேலைக்குள் இருந்து ஒரு டைரியும்,போட்டோவும் கீழே விழுந்தது.என்ன அது என்று எடுத்த பார்த்தவளின் காலடியில் பூமி நழுவியது.அது அர்ஜூனின் போட்டோ.டைரியை பிரித்து பார்த்தாள்.அவன் அட்ரஸ்,குவாலிபிகேஸன் என அனைத்தும் இருந்தது.

நம்ப முடியாமல் அந்த போட்டோவை பார்த்து கொண்டு இருந்த சுவாதி.

குட்டிமா நீயும் அவரை காதலித்தாயா?ஏன் என்னிடம் சொல்லவில்லை.நீ எப்போது அவரை பார்த்தாய் என்று குழப்பி கொண்டவள்.இறுதியாக நீ நேசித்தவரை என்னால் மணக்க முடியாது.அவரும் கடமைக்காகதான் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார் என்று எனக்கு தெரியும்.

நான் இங்கு இருந்தால் தானே இந்த பிரச்சனை நாளையே நான் கிளம்புகிறேன் என்று சரியாக தவறான முடிவெடுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.