Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

தாவின்  அலறலை கேட்ட புவன் ஓடிவந்து பார்த்தபோது அவள் சுவற்றின் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளுடைய கண்கள் மூடியிருந்தன.

“சதா என்னாச்சு?” அவளை உலுக்கிய புவன் அவள் சில்லிட்டிருந்ததை கவனித்து திகைத்தான்.  முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.

அவனை மிரண்டு போய் பார்த்தவள் “அது எங்கே?” என்று கேட்டுக் கொண்டு அவன் மீதே துவண்டு விழுந்தாள்.

“எது?”

“அந்த ஆவி?”

“ஆவியா…?”

“வைசாக்கை போன்று இருந்ததே…” அவள் சொல்லவும் புவனுக்கு ஐயோடா என்று இருந்தது.

இப்போதைக்கு அவளிடம் வாதிடுவதில் பயனில்லை என்று புரிந்து கொண்டவனாக, “இப்போ பயப்படாமல் தூங்கும்மா… நான் உன் அருகிலேயே இருக்கிறேனே” என்றான். அவன் கையை பிடித்துக் கொண்ட சதாவும் உறங்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலையில் பழைய அமைதிக்கு திரும்பியிருந்தாள். நேற்று இரவு அவள் கண்டதை நினைத்து பார்க்கும்போது இப்போது உடல் உதறவில்லை… இதயம் அடித்துக் கொள்ளவில்லை… கொஞ்சம் தெளிவாக இருக்க முடிந்தது.

காலை உணவை முடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளிடம் புவன் பேச ஆரம்பித்தான்.

“நேற்று இரவு என்ன நடந்தது சதா?”

அவள் கண்ட காட்சியை விவரித்தாள். பொறுமையாக கேட்ட புவன்,

“தொலைவில் வைசாக்கை போன்ற உருவம் தெரிந்தது என்கிறாய்… அடுத்த நொடியே உன்னுடைய ஜன்னல் அருகே ஒளிக்கீற்றாக அந்த உருவம் தெரிந்தது என்கிறாய். இந்த எல்சீடி புரஜெக்டர் போல் எதையாவது வைத்து இதை செய்திருக்கலாம் அல்லவா…?”

“இருக்கலாம்… ஆனால் அது புரொஜெக்டர் போலில்லை. புரஜெக்டரை நான் செமினார் தரும்போது பயன்படுத்தி இருக்கிறேன். புரொஜெக்டருக்கு திரைக்கும் இடையே ஒளிகற்றை பாய்ந்திருக்கும் அதை நாம் பார்க்கவும் முடியும்”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சரி இந்த லேசர் பிம்பம்….”

“அதுவும் இல்லை. அதற்கு ஒரு முப்பரிமானம் ஒளி வடிவம் மட்டுமே வரும். இது வெளிச்ச புகைபோல இருந்தது. அந்த இடத்தில் குளிராக இருந்தது. என்னால் அந்த குளிரை உணர முடிந்தது”

“அல்லது புகை மூட்டத்தில் ஒரு  ஒளிபிம்பத்தை தெரிய வைத்திருக்கலாம் அல்லவா?”

“இதற்கு அறிவியல் விளக்கம் தர என்னால் முடியவில்லை. ஆனால் அது வைசாக்கின் ஆவிபோலதான் தெரிந்தது.”

“இல்லை சதா உன் மனதில் வைசாக்கின் மரணம் பற்றி ஆழ்ந்த பாதிப்பு இருக்கிறது. அதுதான் இப்படிப்பட்ட பிரமையை தூண்டி விடுகிறது.”

“இத்தனை நாட்கள் கழித்து எப்படி வரும்?”

“ம்… நாம் ஒரு சைக்ரியாடிஸ்டை பார்ப்போம்” சொன்னதுடன் அவன் நிற்கவில்லை. அவளை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றான். அவளை பரிசோதித்தவர்,

“சதா பேய் ஆவி என்பதெல்லாம் மனித மனம் செய்யும் மாயைதான். இதை ஆழமாக மனதில் பதிந்து வையுங்கள். அப்போதுதான் நீங்கள் காணும் காட்சிகளுக்கு விளக்கம் கிடைக்கும். குழம்பிய மனதுடன் பார்க்கும்போது சாதாரண காட்சிகூட அமானுஷ்யமாக தெரியும். யோசித்து பாருங்கள் இதெல்லாம் இரவில்தான் நடக்கிறது. அப்படியென்றால் பகலில் பேய் வராதா…. உறங்கப் போய்விடுமா?”

“அது பகலில் நான் கொஞ்சம் தைரியமாக இருக்கிறேன்.”

“அது அப்படியல்ல… ஒரு விசயத்தை மனம் நினைத்து பயப்படும்போது, இருளில் நம் நண்பர் ஒருவர் பக்கத்தில் வந்தால்கூட பயந்த மனம் அவரை ஒரு பேயாகத்தான் நினைக்கும். நம்முடைய ஊகிக்கும் திறன் அப்படி….” என்றவர்,

“சதா  நீங்கள் கொஞ்சம் வெளியில் இருக்கிறீர்களா? புவனிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றார். அவள் வெளியே சென்றதும் அவர் ஆரம்பித்தார்,

“இந்த விசயத்தில் சதாவிற்கு இரவில்தான் பயம் வருகிறது… அப்போதுதான் வைசாக்கின் நினைவு வருகிறது. அவன் ஆவியாக வந்து  நிற்பதுபோல தோன்றுகிறது…ஏன் தெரியுமா?”

“ஒருவேளை வைசாக்கின் மரணத்திற்கு தான் காரணம் எனு நினைப்பதால் இருக்குமோ டாக்டர்”

“அது இரவில்தான் வரவேண்டுமா?’

“அது தனிமையில்….”

“உண்மை என்னவென்றால் அவர் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று  நினைக்கிறார்.”

“கதை விடாதிங்க. நான் அவள் அருகில் சென்றாலே முறைத்து பார்க்கிறாள்.”

“அது வேறு… ஆனால் உங்களை அவர் நினைக்கும்போதுதான் இந்த மனசிக்கல் ஏற்படுகிறது.”

“எனக்குப் புரியவில்லை”

“அவருக்கு உங்கள் மீது கோபம் இருக்கும் ஆனால் வெறுப்பு இல்லை. “

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்Tamilthendral 2018-12-19 03:25
Sadha FB-la ippadiyellam nadanthatha! Appo Sadha poi sollave illa.. intha Buvan loosu eppotha ithaiyellam kandu pidikkurathu :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்saaru 2018-12-19 00:10
Oh nice baby... :clap:
Sada ponnu unnoda deep lv :clap: :hatsoff: ha ha
Puvan chellam valakkampoala sodapita :grin: :grin:
Thodai nadungi ayuis enna solaa poran :Q: :Q:
Enakku pei irukan oru doubt tan... :lol: :lol:
Karan tan sariyana Padilla yosika madiri triudu...
Waiting ivarkalidaya ariviyal araichikaga :grin: :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்AdharvJo 2018-12-18 21:36
Achado as always kalakitinga :D :D interesting flow Ms Sagampari :clap: :clap: Okay logic-la lorry vidama as always on track (y) and enga enga engalukku clarity thevai patadho correct aga suspense unlock seithutinga...Karan ena chandramuki la vara ranjini sir range la ethavdhu araychi panuraro :Q: Mrs sadha, buvan kodutha mangalsuthra-k kudtha importance naduvula kanamal ponalam (like thought of marring erumai) ;-) current la marubadiyum regain seivathu :cool: Indha pshy dr ena consult panaro let us wait and watch the pei story. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # சாகம்பரிSagampari 2018-12-18 22:02
Thank you AdhavJo...
Logic Loryya... Ha..Haha.. coment la kavithai.. :-)
Ok.. pei sikkala thirakka enakku oru support venum.. athuthan karan role.. irukkunnu nanbanum illennum nanbanun.. :cool:
buvan.. mangal sutha.. erumai.. ellamey ethical drama than..
Final epi i ll give more clarification.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்SAJU 2018-12-18 19:22
YETHO ORU MUDIVUKKU SIKIRAM VAANGAPAAAAA PAI IRUKKAAAAAA ILLAIYAAAAAAA
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-12-18 21:49
Thank you saju..
Pei irukkunu sonna ungalota matti open.. illainu sonna peikitta mattippen.. what to do... :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்madhumathi9 2018-12-18 18:37
:Q: what mam,kathai interesting aaga poguthu.but kuraivaana pages kodukkareenga kooduthal pages kodungalen.adutha epila kooduthalaana pages kodukka mudiyuma?waiting to read more. :thnkx: 4 this epi. (y) :clap:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-12-18 21:47
Hai Madhu mathi how r you.. :thnkx:
Ok... Ok.. i will give... Soon i want to complete this story.. :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்Sahithyaraj 2018-12-18 18:04
Kathai eduthutu selling virham arumai. Give us more pages mam pls :P
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-12-18 21:45
Thank you sajithya..
Kandippa koduthal page thara parkkiren..
This time I have spend more time to paint the new tittle image .. how is sadha baby...? ☺️
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-12-18 17:48
எபி நல்லாயிருந்தது மேம்....👏👏 :clap:
சதா புவன் மனம் விட்டு பேசினாள் நன்மை..
:thnkx:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-12-18 21:41
நன்றி மகி
பேசினால் நல்லதுதான.. இந்த பேய் சிக்கல் தீரட்டும்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 16 - சாகம்பரி குமார்Srivi 2018-12-18 17:29
So finally andha mangal suthra FB vandhachu , aana buvan kood vandhadhu Parikshith wife a kooda irukkalam , namma oorla than yaaravadhu rendu perum serndhu pudavai kadaiki ponale , ippide decide pannirangale .. many possibilities ..illati simple frienda kooda irukkalam..paapom.. pop cutting devathai ya thiruppi paathomnu buvan ku suthama gyabagam irukkadhu ..eppide onnu serka poreenga.. i am waiting for next episode.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-12-18 21:39
Thank you Srivi...
About that girl... In next epi bhuvana will tell something.. i hope... And pop cutting girla bhuvana kku adaiyalam theriyalayamapa... Girls growth factor is higher than boys in teen age..
Kanna moodi therikka thukkula periya manushia valarnthuttannu solvangaley...
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top