(Reading time: 36 - 71 minutes)

சுதியை பார்த்த அர்ஜூனுக்கு கவலைபடாதே வதுமா உனக்கு நான் இருக்கிறேன்.யார் சொன்னா நீ அனாதை என்று உனக்காக என் குடும்பம் மொத்தமும் காத்திருக்கிறது. என்னைபற்றி நினைக்கவே மாட்டாயா வது நான் என்ன செய்வேன் என்று அவளின் துடிப்பை பார்த்து இவன் துடித்து கொண்டு இருந்தான்.

ஆயிற்று இதோ சுவாதி அம்மா இறந்து ஒரு மாதம் முடிந்து அனைவரும் வந்து சாமி கும்பிட்டுவிட்டு சென்று விட்டனர்.வீடே வெறுச்சோடி கிடந்தது.கோவிந்தன் சுவாதிக்கு தட்டில் உணவை போட்டு எடுத்து வந்து சாப்பிடுமா என்று அன்பாக கூறினார்.

ஆம் மனைவியின் இறப்பு அவரை வெகுவாக மாற்றி இருந்தது.ஆனால் அப்பாவின் பாசத்துக்கு ஏங்கிய சுவாதிக்கு இந்த பாசத்தை பெற தான் கொடுத்த விலை அதிகம் என்று நினைத்து அவரை ஏற்று கொள்ள முடியாமல் இருந்தால்.இனி இங்கு இவருடன் இருக்க முடியாது இவரது அன்பை என்னால் ஏற்க முடியாது.

ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு சொத்து மேல்தான் விருப்பம் அதற்கு ஒரு வழி பண்ணிவிட்டு எங்காவது செல்ல வேண்டும் என்று பழைய சுவாதி வெளிவந்தாள்.அம்மாவால் ஏற்பட்ட கோழைதனத்தை அம்மாவே அவளிடம் இருந்து எடுத்து சென்றுவிட்டதாக நினைத்தாள்.அந்த வார பேப்பர் எல்லாம் செக் செய்து வேலைக்கு அப்ளை செய்துவிட்டு இண்டர்வியூக்கு காத்திருந்தாள்.

சுதி நினைத்தது போல் ஆன்லைனிலேயே இண்டர்வியூ அட்டண் செய்து செலெக்ட் ஆனாள்.வேலைக்கு வரும்படி வந்த ஆபிஸ் சென்னை என்பதை பார்த்து திருச்சிக்கு கேட்டாள்.அவர்களும் ஒரு மாதம் கழித்து வேகண்ட் வரும் அப்போது உங்களை அங்கு அப்பாயிண்ட் பண்ணுகிறோம் என்று சொல்லிவிட்டனர்.அவளது திறமையை பார்த்து.

இதோஅதோ என்று ஒரு மாதம் முடிந்து வேலையில் சேர சொல்லி கடிதம் வந்தது.

தன் அம்மாவின் படத்தின் முன் அமர்ந்தவள் அடுத்து நான் என்ன செய்யட்டும் அம்மா.நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும் என்று புலம்பிவிட்டு வெகுநேரம் கழித்தே படுக்க சென்றாள்.

காலையில் அவளது மொபைல் விடாமல் அடிக்கவும் யார் இந்த நேரத்தில் என்று யோசித்து கொண்டே போனை எடுத்தவளை கீதாவின் படபட பேச்சே எதிர் கொண்டது.அவளிடம் பேசி அங்குதான் தனக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் அடுத்த வாரம் வருவதாக சொல்லி வைத்தாள்.தன் அம்மாதான் தனக்கு இப்படி ஒரு வழியை வழங்கினார் என்று யோசித்து குளித்துவிட்டு கீழே வந்தவளை பார்த்த கோவிந்தன்.என்னமா சீக்கிரம் எழுந்துவிட்டாயா என்று கேட்க தலையை மட்டும் ஆட்டிவிட்டு சென்றுவிட்டாள்.

தான் செய்த தவறுக்கு தன் மகள் தன்னை வெறுப்பதில் தவறில்லை என்று நினாத்தாலும் அவருக்கு அவளின் ஒட்டாத தன்மை கவலையை அதிகரித்தது.அன்று வெளியே சென்று வருவதாக சென்ற சுவாதியை பின் தொடர்ந்து சென்ற ராமின் ஆட்களை மாட்டிவிட தருணம் பார்த்து கொண்டு இருந்தவள். பிக்பாக்கெட் கேசில் உள்ளே தள்ளிவிட்டு தனது குடும்ப வக்கீலை சந்தித்து சிலபல வேலைகளை செய்துவிட்டுவந்தாள்.

இதற்கிடையே அவளை சந்திக்க வந்த அர்ஜூனை சந்திக்க மறுத்தாள்.கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று அவன் சொல்லும் போது வீட்டு வேலைகார அம்மா அல்லது அவளது அப்பாவை உடன் வைத்து கொண்டு பேசினாள்.மற்றவர்கள் முன்பு என்ன பேசுவது.அவளை சமாதானம் செய்து திருமணத்துக்கு ஒத்து கொள்ள வைக்க வேண்டும் என்றுதான் வந்தான் ஆனால் உடன் அவர்கள் இருப்பதால் எதுவும் பேசாமல் சாதாரண ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு வருவான்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் ஒரு நாள் இரவு அவர்கள் வீட்டு மாடி ஏறி குதித்து அவளது அறையை அடைந்தான்.அவள் நன்றாக தூங்கி கொண்டு இருப்பதை பார்த்தவன்.

என் தூக்கத்தை கெடுத்துவிட்டு நீ நன்றாக தூங்குகிறாயா என்றவனின் காதல் உள்ளம் விழித்து கொண்டு அவளை முழுவதுமாக ரசித்தது.அவள் திரும்பி படுக்கும் போதுதான் தன்னிலை உணர்ந்தவன் ஆள் மயக்கி இப்படி நீ மயக்கினாள் நானா பொறுப்பு இருந்தாலும் நீ இவ்வளவு அழகா இருக்க கூடாதுடி என்று கூறி அவளை எழுப்பினான்.

யார் தன்னை எழுப்புவது என்று அரை கண் விழித்து பார்த்தவள்.அடித்து பிடித்து எழுந்தாள்.

ஏய் நீ எப்படி உள்ளே வந்தாய்?எதற்கு வந்தாய்?நான்தான் உன்னை எண் கண் முன்னே வர கூடாது என்று சொன்னேனே?மீண்டும் எதற்கு வந்தாய்?என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க அவன் அவளை தொட கையை நீட்டினான்.ஏய் என்று கத்தி அவன் கையை தட்டிவிட்டவள் என்ன செய்ய போகிறாய் என்று பயத்துடன் கேட்டாள்.

அவளின் பயந்த பார்வை அவனை பாதித்தாலும் இப்போது அதை வெளிகாட்ட கூடாது.அவள் என்ன செய்தாலும் இதுதான் என்முடிவு என்பதை அவளுக்கு நிறுபிக்கும் வரை நான் பழைய அர்ஜூனாக மாற வேண்டும் இவளுக்காக உருகும் அர்ஜூனை பார்த்தால் இவளுக்கு கொழுப்பு ஏறி விடுகிறது இல்லையென்றால் எத்தனை முறை பேச வந்தேன் ஒரு முறையாவது என்னுடன் பேசினாளா என்ற முடிவோடு இருந்ததால்,அவளை பார்த்து சிரித்து கொண்டே

அது ஒண்ணும் இல்ல செல்ல குட்டி நீ அடுக்கடுக்கா கேள்வி கேட்டு டயர்டாகி மூச்சு வாங்கினாய் அதான் நான் சரி செய்யலாம் என்று கண்ணடித்து கூற அவளுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.