(Reading time: 36 - 71 minutes)

அவனின் தெளிவான முகத்தை பார்த்தவள்.நிஜமாகவே நான் சொன்னது இவனுக்கு கேட்கவில்லையா?பொய் சொல்கிறானா? இவன் முகத்தை பார்த்தால் கேட்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.கீது உன் வாயே உனக்கு எதிரி அதை முதலில் அடக்கு என்று தனக்குள் பேசி கொண்டே குழப்பமாக நகுலனை பார்த்து கொண்டு இருந்தாள்.

அவள் முகத்திற்கு நேராக சொடக்கு போட்டவன்,

என்ன மேடம் எந்த உலகத்தில் இருக்கீங்க?வந்தவுடனே பொறிஞ்ஜீங்க?இப்ப சைலண்ட் ஆகிட்டீங்க? நகுலன்.

ஸ்......... கீது என்று ஒரு கண் மூடி,தன் பற்களால் இதழை கடித்து தன்னையே தலையில் தட்டி கொண்டாள்.

நகுலன் அவள் செயலில் தடுமாறிதான் போனான்.இவளுக்கு வேறு வேலை இல்லை.திருமணத்தன்று அப்படிதான் என்னை வேர்த்து விறு விறுக்க வைத்தாள்.இப்போது இப்படி கண்ணடிக்கிறாள்.இவளது அசைவு என்னை கட்டி அவளிடம் இழுத்து போய்விடும் போல இருக்கிறதே,

இல்லை இது சரிபட்டு வராது என்ற முடிவுக்கு வந்தவன்.

நீ இப்படியே யோசித்து கொண்டு இரு நான் தூங்குகிறேன் என்று எழுந்து கட்டிலுக்கு அந்த பக்கம் சென்று படுத்து கொண்டான்.

நகுலன் நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போய்படு என்று அவனை நெருங்கி கேட்டாள்.

ஏய்....ஏண்டி இப்படி படுத்துற? நகுலன்.

என்னது டி யா?நானும் டா போடுவேன் நகுலன். கீதா.

நீ என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு.இப்போது எதற்கு என் தூக்கத்தை கெடுக்கிறாய்?

ஏண்டா வெளிய என்ன ரவுண்டு கட்டி அடிச்சு அனுப்பராங்க.நீ என்னன்னா.நான் கேட்கற கேள்விக்கு கூட பதில் சொல்லமாட்டிக்கிற.

என்னது அடிச்சாங்களா?யாரு அடிச்சா?எதற்கு அடிச்சாங்க? என்று பதறி போய் கேட்டான்.

அவனை பார்த்து நக்கலாக சிரித்து “என்னை அடிக்க எல்லாம் முடியாது கிண்டல்பண்ணாங்க அததான் அப்படி சொன்னேன்”.

கிண்டலா?எனக்கு புரியவில்லை.

நகுலன்.

காதலித்தவனையே மணந்துவிட்டாய்.முன்பை போல் இருக்காதே.சீக்கிரம் அபிக்கு விளையாட ஒரு ஆளை ரெடி பண்ணு பிளா......பிளா.....பிளா........இதை எல்லாம் கேட்கும் போது எனக்கு எவ்வளவு அன்னீசியா இருந்தது தெரியுமா?நீ பாட்டுக்கு கூலா உள்ள வந்து உட்காந்துகிட்ட வெளில நான்பட்ட பாடு எனக்குதானே தெரியும்.

இதுதான் சமயம்.இவள் என்னிடம் பொய் சொன்னதற்கான தண்டனை கொடுக்க என்று மனதுக்குள் முடிவுக்கு வந்தவன். அவள் சொன்னதையே திருப்பி அவளிடம் படிக்க ஆரம்பித்தான்.தான் சொல்லும் பொய்யால் தான் பல கஷ்டங்களை பட போகிறோம் என்பதை அறியாமல்.அவள் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்.

இங்க பார் பேபி.. நகுலன்.

நான் ஒன்றும் பேபி இல்லை.எனக்கு இருபத்து இரண்டு வயது வர போகிறது.என் பெயரை சொல்லி கூப்பிடுங்கள்.

முடியாது.இப்போது இதுவா முக்கியம்.நான் சொல்ல வந்த விஷயத்தை நன்றாக கேட்டு கொள்.எல்லோரிடமும் நாம் காதலர்கள் என்று நான் சொல்லவில்லை.அம்மா சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இந்த அம்மா ஏன் தான் இப்படி செய்கிறார்களோ இந்த விஷயம் என் லட்டு காதுக்கு போனது நான் எப்படி சமாளிப்பேன் என்று ஓர கண்ணால் அவளை பார்த்து கொண்டே புலம்பினான்.

ஹே........நீ லவ் பண்றியா?கவல படாதே உன் லவ்வரை நான் சமாளிக்கிறேன். கீதா

நகுலனின் நிலமை அட கடவுளே என்று ஆனது.

ஏண்டி நான் ஒருத்திய காதலிக்கிறேன்னு சொல்றேன்.உனக்கு உடனே கோபம் வர வேண்டாம் கொஞ்சம் ஏமாற்றத்தையாவது உன் முகத்தில் பார்த்திருந்தாள் நம்பிக்கை வந்திருக்கும்.சரியான தத்தி போல,,,,டேய் நகுலா...எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தியோ இப்படி ஒரு தத்தி பொண்டாட்டியா கிடைக்க என்று மனதுக்குள் புலம்பியவன்.

டேய் முதலில் இந்த அழகு எனக்கு இல்லையா?என்று பெரு மூச்சுவிட்டு அதற்கு எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னாய் என்ற மனசாட்சி தலையில் தட்டி அவள் என் பொண்டாட்டி நான் என்ன வேண்டுமானலும் பேசுவேன் தேவையில்லாமல் ஆஜர் ஆகாதே என்று அமுக்கினான்.

கீதாவை பார்த்து கொண்டே என் லட்டு ரொம்ப பொசசிவ்.என்னிடம் பெண்கள் அட்ரஸ் கேட்டாளே அவர்களை ஓட ஓட விரட்டுவாள்.அதனால் நானே பார்த்து கொள்கிறேன்.நீ அவர்கள் பேசியதை மனதில் வைத்து கொள்ளாதே.

நாம் இருவருக்குமே இது ஒரு காண்ரேக்ட் போடாத பிஸ்னஸ்.எப்போது வேண்டுமானாலும் அர்ஜூன் அண்ணாவும்,சுவாதி அண்ணியும் சேரலாம்.அதன் பிறகு நாம் பிரிந்து தானே ஆக வேண்டும் என்று சத்தமில்லாமல் அவளுக்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு.நான் தூங்குகிறேன் மை லட்டு இஸ் வெயிட்டிங் பார் மை டிரீம் என்று படுத்து கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.