(Reading time: 36 - 71 minutes)

அர்ஜூன் இங்கு திருமணத்துக்கு ராஜாவின் மூலம் ஏற்பாடு செய்தான்.திருமணம் முடிந்த பிறகு ஒரு ரிஷப்ஷன்மாறி வைத்து ஊருக்கு தெரியபடுத்தலாம்.முதலில் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று அந்த வேலையில் பிஸியாக இருந்தவன்,சுவாதியை கவனிக்க தவறினான்.

ராஜாவுக்கு முன்பே அர்ஜூனின் காதல் தெரியும் என்றாலும் சுவாதிக்கு அண்ணனாக எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்தான்.

ஞாயிற்று கிழமை நடு இரவில் நாகபட்டினத்துக்கு முழுக்கு போட்டு திருச்சி செல்ல ஆரம்பித்தாள் சுவாதி.கடந்த நினைவுகளை நினைத்து பார்த்து கொண்டிருந்த சுவாதி.குட்டிமா நான் எப்படி அவரை மணப்பேன் நீ காதலித்தவரை நான் எப்படி.

இந்த திருமணத்துக்கு ஒத்து கொண்டிருக்கவே கூடாது.ஆனால் வள்ளி அம்மா,ராகவ் அப்பா முக்கியமாக கீதா இவர்களுக்காக சம்மதிக்கிறேன்.என்வாழ்கை இனி எப்படி போக போகிறது என்று பயமாக இருக்கிறது குட்டிமா என்று வாய்விட்டு புலம்பியவள் தலையை ஆதரவாக தடவியது ஒரு கரம் யார் என்று நிமிர்ந்து பார்த்தாள்,கீதாதான் அமர்ந்து இருந்தாள்.

கண்டதை போட்டு யோசிக்காமல் கொஞ்சநேரமாவது தூங்கு கண்ணெல்லாம் சிவந்து இருக்கு என்று சொல்ல,மந்திரத்துக்கு கட்டுபட்டவள் போல் உறங்க ஆரம்பித்தாள்.

காலை வெகு நேரம் கழித்து எழுந்தவள்.காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே சென்றாள்.அங்கு சுவாதி புது புடவை சகிதம் கல்யாண பெண்ணாக ரெடியாகி ஏதோ யோசித்து கொண்டு இருந்தாள்.அவளை நெருங்கிய சுதி என்ன மேடம் இப்பயே டூயட் பாட போய்டீங்களா?எங்க சுவீஸா?இல்ல காஷ்மீரா? என்று கிண்டல் செய்தவளை பார்த்து முறைத்தவள்.

போடி போய் நீ கிளம்பி வா உனக்குதான் வெயிட்டிங்.நேராக கோவிலுக்கு நம்மை வர சொல்லிவிட்டார்கள். அம்மா நார்மல் வார்டுக்கு வந்ததால்,கோவிலுக்கு செல்ல பர்மிஷன் வாங்கிவிட்டார்கள் என்று சொன்னாள்.

கண்களை இறுக ஒரு முறை மூடி திறந்தவள்.தலையை ஆட்டிவிட்டு தனக்காக சுந்தரி கொடுத்தனுப்பிய புடவையை எடுத்து கொண்டு சென்றாள்.பின்பு அனைத்து வேலைகளும் வேகமாக நடக்க மண்பத்தில் அமர்ந்த சுதிக்கும் சரி,கீதாவுக்கும் சரி இது சரி வருமா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.இதை கவனித்த இருவரின் கணவர்களும் அவர்களது கையை அழுத்தி அமைதிபடுத்தினர்.

மாங்கல்யதாரணம் முடிந்து பெரியவாக்கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க என்ற அய்யரின் குரலுக்கு ஏற்று வள்ளி,ராகவ் காலில் விழ போன சுதியை தடுத்த ராகவ்.

உன் அப்பாவை இப்போதாவது மன்னிக்க கூடாதா?சொந்த பொண்ணு கல்யாணத்துக்கு வேற்றாளுமாதிரி இருக்கிறார்.நான் வற்புறுத்தவில்லை உனக்கு விருப்பம் இல்லை என்றால் வேண்டாம் என்று முடித்துவிட்டார்.

ராகவ் சொன்னதை கேட்டு நிமிர்ந்து பார்த்த சுவாதியின் கண்களில் முதல் வரிசையில் கண்ணீரோடு அமர்ந்திருந்த கோவிந்தன் பட்டார். முன்பைவிட அதிகம் இளைத்து,கண்கள் குழி விழுந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.

அர்ஜூன் சுதியை நெருங்கி சொத்து அனைத்துக்கும் பொறுப்பை நீ அவரிடம் ஒப்படைததால்,மிகவும் நொந்து போனார்.இப்போது உன் அம்மா பெயரில் டிரஷ்ட் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறார்.தப்பை உணர்ந்தவர்களை தண்டிப்பதில் பயன் இல்லை.இது என் விருப்பம் என்று கூற ராகவ்வை பார்த்த சுவாதி கோவிந்தனை நோக்கி சென்று ஆசிர்வாதம் வாங்கினாள்.

மகள் தன் கால்களில் விழுந்ததால் கண் கலங்கிய கொவிந்தன்.என்னை மன்னித்துவிட்டாயா சுதி என்று கண் கலங்கினார்.

ஒரு வழியாக அனைவரும் கீதாவின் வீட்டுக்கு சென்றனர். வள்ளிக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.இரு பெண்களும் கண் நிறைய கணவனுடன் அம்ர்ந்திருப்பதை பார்த்த அந்த தாய் மனம் பூரிப்படைந்தது.

கீதாவின் நிலையோ பரிதாபமாக அய்யோ எப்படா இத கழட்டுவீங்க,திடீர் கல்யாணத்துக்கு யாரு இவ்வளவு பெரிய மாலையை ஆர்டர் செய்தது என்று நெளிந்து கொண்டு இருந்தவளை பார்த்த ராகவ் கீது நீ இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம்.

நீ உன் அறைக்கு சென்று ஓய்வெடு என்று சொல்ல,அவர் எப்போது சொல்வார் என்பது போல் இருந்தவள்.வேகமாக எழுந்து தன் அறைக்கு சென்றாள்.அறைக்கு வேகமாக சென்றவள் செய்த முதல் வேலை மாலையையும்,கட்டியிருந்த புடவையை கழட்டி கட்டிலில் போட்டதுதான்.ஏசியை ஆன் செய்து சிறிது நேரம் கண்களை மூடி அப்படியே அமர்ந்தாள்.கதவு திறக்கும் சத்ததில் சுவாதிதான் வந்திருப்பாள் என்று நினைத்து.

எப்படி டி இந்த புடவையை கட்டியிருக்க என்னால் சுத்தமாக முடியவில்லை.இதில் மாலை வேறு என்று கண்களை திறக்காமலே புலம்பினாள்.

தன் புலம்பலுக்கு எந்த பதிலும் வராமல் போகவே என்னடி நான் பாட்டுக்கு பே....... என்றவள் பேச்சை நிப்பாட்டிவிட்டு வேகமாக தான் கட்டிலில் போட்ட புடவையை எடுத்து மேலே போர்த்தி கொண்டு அவனை பார்த்து முறைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.