(Reading time: 18 - 35 minutes)

அனைவரும் காதலியுங்கள்.. அனைவரையும் காதலியுங்கள்.. அனைத்தையும் காதலியுங்கள்.. என மென்மையான குரலில் இனிமையாக கூறி..

இனிமையான கனவுகளும்.. ஆழமான உறக்கமும் உங்கள் அனைவருக்கும் சொந்தமாகட்டும்.. நன்றி... எனக்கூறிவிட்டு விளம்பரமும் அதை தொடர்ந்து பாடலையும் ஓடவிட்டு அனைவரிடமும் விடைபெற்று வெளியில் வரும் போது அவளுக்காக காத்திருக்கும் ராகுலை பார்த்து புன்சிரிப்புடன் காரில் ஏறி வீட்டை நோக்கி சென்றார்கள்..

என்ன மனுகுட்டி இன்னைக்கு ரொம்ப அழகா பேசுனபோல.. கேட்க கேட்க நல்லாயிருந்துச்சுடா..

உனக்கு பிடிச்சு இருக்கா டப்பா.. நான் நல்லா பன்னினேனா.. நான் எதும் தப்பா பேசலைல்ல..

ரொம்ப நல்லா பேசுன மனுகுட்டி.. உனக்கு காதல் பிடிக்கும்ன்னு தெரியும்.. ஆனா அதை அனுபவிச்ச மாதிரி ரொம்ப நல்லா பேசுனியே அதான் கேட்டேன்..

நான் அதை அனுபவிக்கலைன்னாலும் என்னைசுத்தி நிறையாபேர் அதை அனுபவிக்கரதை கண்ணால பாத்துயிருக்கேன் டப்பா..

அதைவச்சு தான் நான் இன்னைக்கு பேசினேன்..

ஓ.. நான் கூட அனுபவிச்சிருப்பியோன்னு நினைச்சேன்..

நான் அனுபவிக்கலை.. ஆனா என்னோட தகரடப்பாவின் அனுபவங்களை நான் கண்டிருக்கிரேன்.. அதனால தப்பா இருக்காதுன்னு நினைக்கிறேன்.. நீ என்ன சொல்லர தகரடப்பா..

சரி.. சரி.. நான் சரண்டர்ம்மா தாயே... தயவு செஞ்சு நீ ஐஸ்சை மட்டும் இழுக்காதம்மா.. அவளுக்கு என்னைவிட உன்னை தான் ரொம்ப பிடிக்கும்.. உன்னை எதாவது சொன்னா நான் அவ்வளவு தான்..

சரி ஐஸ்கிட்ட பேசுனியா.. என ஐஸ் என்னும் ராகுலின் அத்தை மகளான ஐஸ்வர்யாவை பற்றி கேட்டாள்..

இல்ல மனுகுட்டி.. இன்னைக்கு மீட்டிங்முடிச்சு உன்னை பார்க்க வீட்டுக்குபோனப்ப தான் மாமா நீ வீட்டுல்ல இல்லைன்னு சொன்னாங்க நான் உள்ளகூட போகலை அப்படியே உன்ன பார்க்க வந்துட்டேன்.. அப்போ தான் ரேடியோ கேட்டேன்.. செமையா இருக்கு செல்லம்..

அட ஆமால்ல உன்னோட மீட்டிங் எப்படி போச்சுன்னு சொல்லவேயில்ல..

அது எல்லாம் ரொம்ப நல்லா தான் போச்சு செல்லம்.. அதை விடு எனக்கு சீக்கரம் சொல்லு.. வீட்டுல அத்தை எப்படி உன்னவிட்டாங்க.. கேடி நீ என்ன வேளத்தனம் பன்னுன..

அதுவா ரொம்ப சுலபம்டா டப்பா.. உண்மைய சொன்னேன்.. என அவள் ஒரு கையை உயர்த்தி கூறவும்..

ஆமா இவங்க பெரிய பாட்ஷா.. இவங்க உண்மைய சொன்னாங்களாம்.. எப்படி அத்தைய சமாளிச்சன்னு கேட்டா.. இவ பாத்த படத்தை எல்லாம் இங்க ஓட்டரா..

ரொம்ப அலுத்துகாத.. சொல்லரேன்.. நான் காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு போனதும் அம்மா நான் நொண்டிகிட்டே வரத பாத்து பயந்து என்ன ஏதுன்னு விசரணை எல்லாம் முடியவும் நான் என்னோட நிகழ்ச்சிய சொல்லவும் அம்மாக்கு சந்தோஷம் தான்.. ஆனா நைட் தான் போகனும் அதுவும் 10.30-க்குன்னு தெரியவும் முடியவே முடியாதுன்னு பிடிவாதம்.. அப்பா எனக்கு உதவர மாதிரி தெரியல்ல.. அதுவும் இல்லாம அம்மா பெண்னுங்க பாதுகாப்பு அது இதுன்னு பேசவும் கொஞ்சம் குரலை உயர்த்தி தப்பு பன்னர அவங்க சுதந்திரமா இருகாங்க.. எதுவும் பன்னாத நாங்க தான் எங்க கனவுகளை எல்லாம் தொலைக்கிரோம்ன்னு சொல்லவும்.. நான் எப்பவும் உன்னோட கனவுக்கு தடையா இருக்கமாட்டேன்னு சொல்லி எழுந்து போக பார்த்தாங்க அப்போ நான்..

அம்மா தேவையில்லாம் பயபடறீங்க.. தப்பு பன்னர அவங்க எல்லாம் சுதந்திரமா இருகாங்க.. தப்பே பன்னாத நாங்க ஏன்ம்மா எங்க கனவுன்னு எல்லாத்தையும் விடனும்..

உன்னோட கனவுகளை நீ விடனும்ன்னு நான் எப்பவும் நினைச்சது கூட இல்லா மனு உனக்கு என்னால ஆன உதவிகளை தான் பன்னிருக்கேன் கலைக்கனும்ன்னு நான் எப்பவும் நினைக்கமாட்டேன் இனி உன்னோட விருப்பம் மனுகுட்டி கூறிவிட்டு எழுந்து செல்ல முயன்ற கமலாவின் கையை பிடித்து இழுத்து மீண்டும் அமரவைத்து அவர் மடியில் படுத்துக்கொண்டாள்..

எதுக்கு இப்போ மிசஸ்.கேகே கோச்சுக்கரீங்க.. நான் உங்களை என்னைக்கும் குறைசொன்னது இல்லம்மா அப்பா எனக்கு ஹீரோன்னா நீங்க தான் என்னோட ஹீரோயினி மிசஸ்.கேகே நான் உங்களை குறை சொல்லுவனா நீங்க எனக்கு சப்போர்ட் பன்னாமலா நான் இந்த அளவு வளர்ந்து இருக்கமுடியும்.. எனக்கு அவ்வளவு சப்போர்ட் பன்னி என் கூடவே எனக்கு துணையா இருந்த என்னோட அம்மா இப்படி சொல்லரது தான் ரொம்ப வருத்தமா இருக்கு ம்மா.. நீங்க ரெண்டுபேரும் தான் என்னோட பலம்.. இப்போ நீங்களே என்னை பலவீனபடுத்தலாமா.. இதுக்கு அப்பறம் உங்க விருப்பம் அம்மா நான் எதுவும் சொல்லமாட்டேன் என கமலாவின் மடியில் இன்னும் சவுகரியமாக படுத்துக்கொண்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.