(Reading time: 18 - 35 minutes)

மிகவும் மென்மையாக எல்லாருக்கும் வணக்கம்.. இன்னைக்கு பன்னர இந்த புரோகிராம் எனக்கு ரொம்ப ஸ்பெசல்.. நான் ஒரு விஷயத்தை உங்க எல்லார்கூடவும் பகிர்ந்துக்க நினைக்கிரேன்.. அதை சொல்லியே இந்த நிகழ்ச்சியை தொடங்குரேன்.. அவளின் மென்மையான குரலில் கேட்போர் அனைவரும் கட்டுண்டு இருந்தனர்..

இந்த நிகழ்ச்சியின் தலைப்பும் காதல்.. கண்டிப்பா காதல் இல்லைன்னா எல்லாரும் மனிதர்களா இருந்திருக்கமாட்டோம்.. உங்களுடைய காதல் நினைவுகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் தோழமைகளே.. காதல் எல்லாரும் அனுபவிக்க வேண்டிய ஒரு இதமான சுகம்..

காதல் ஒன்னும் ரொம்ப புதுவிஷயம் கிடையாது.. ரொம்ப பழமையானது.. இப்போ இருக்கர நடைமுறையில்ல சொல்லனும்ன்னா.. ஆதிகாலம் முதல் இப்போ வரை காதல் இருக்கு.. நமக்கு எல்லாருக்கும் இப்போ வரைக்கும் லைலாமஜ்னு காதல் தெரிஞ்சுயிருக்கு தானே..

 காதல்.. வார்த்தைகளால் அதை விவரிக்க முடியாது என்னும் போது நான் மட்டும் எப்படி அதை உங்களுக்கு கூறமுடியும் என்று தெரியவில்லை.. அதனால உங்களின் காதல் அனுபவங்களை என்னோட.. இல்லை எங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..

விவரிக்க முடியாத ஓர் உணர்வு அன்பர்களே.. நான் பஸ்சிற்காக காத்திட்டு இருந்த போது ஒரு 68 இல்லை 70 வயசு இருக்கர தாத்தாவும் அந்த பஸ்-க்காக வந்து நின்னாங்க.. அந்த வயசுல்லையும் சொந்தகாசுல சம்பாதித்து உண்ணும் திறமை உள்ளவர்.. கொஞ்ச நேரம் போனதும் அந்த தாத்தா நடந்து வந்த வழியில்ல ஒரு பாட்டி கையில்ல எதையோ எடுத்துக்கிட்டு கொஞ்சம் ஓட்டமும்,நடையுமாக வந்தாங்க.. அவங்க வருவதை பார்த்த தாத்தா உடனே இவரும் அவங்ககிட்ட போயி எதுக்கு வந்த என்ன ஆச்சுன்னு கேட்டாங்க..

இந்தாங்க தயிரு எடுக்க மறந்துட்டீங்க அதை கொடுக்க தான் வந்தேன் இந்தாங்க..

நான் இதை கடையில்ல கூட வாங்கிக்குவேன் இதுக்காக நீயேன் வந்தன்னு எனக்கு வரைக்கும் அந்த வார்த்தைகள் காதில் விழுந்தது.. அதுக்கு அப்பரம் தான் அவங்க இருந்த இடம் ரோடுன்னு தெரியவந்தது.. அதன் பிறகு அவங்க பேசின ஒரு வார்த்தையின் சத்தம் கூட வெளியில்ல வரவேயில்லை..

அந்த காலைபொழுதில் அந்த அற்புதமான காட்சி என் மனசுல இன்னமும் நீங்கா இடம்பிடித்துள்ளது அன்பர்களே.. என்ன ஒரு அழகான காதல் காட்சி..

நாம் இன்னும் காதலை பற்றி நிறையா பேசிதெரிஞ்சுக்கலாம்.. இப்போது ஒரு பாடலை கேக்கலாம்.. என கூறி பாடலை ஓடவிட்டாள்..

ஆ : மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே..

      மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே..

பெ : பேசும் வார்த்தை உண்மை தானா? பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா..

       பேசும் வார்த்தை உண்மை தானா? பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா..

ஆ : கண்ணிலே மின்னும் காதலே கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே..  

      நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே..

பெ : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே..

      பேசும் வார்த்தை உண்மை தானா? பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா..

மாசிலா உண்மை காதலே மாறுமா செல்வம் வந்த போதிலே..

ஆ : கண்ணிலே மின்னும் காதலே கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே..

       உனது ரூபமே உள்ளந் தன்னில் வாழுதே..

பெ : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே..

         இனிய சல்லினால் எனது உள்ளம் மகிழுதே..

ஆ/பெ : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்..

  மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே..

எவ்வளவு அற்புதமான பாடல்.. எனக்கு ரொம்ப பிடித்த பாடலும் கூட.. என்னமோ தெரியது இதை கேக்கும் போதெல்லாம் என்னை மறந்து முகத்துல புன்னகை தன்னால வரும்.. இந்த இரவு நேர தென்றல் காற்றோடு இந்த பாடலை கேக்கும் போது மனசுலேசாயிருக்கும்..

காதல்.. இது வெறும் மூன்று எழுத்து வார்த்தை மட்டும் இல்லை.. ஒரு ஆண்னோட காதலை பெற்ற பெண் கொடுத்துவைத்தவள்.. அதே போல ஒரு பெண்னோட காதலை முழுமையாக தெரிந்து கொண்ட ஆண்மகன் ரொம்ப கொடுத்துவைத்தவர்... ஹாஹா நான் சொன்னது உங்களுக்கு புரியனும்ன்னா அதுக்கு ஒரு பெண்னின் காதலை பற்றி முழுமையா தெரிஞ்சுயிருக்கனும்..

பலவந்தமாக காதலை எப்பவுமே பெறவேமுடியாது.. பலவந்தமாக கிடைக்கும் காதல் நிலையானதும் அல்ல அன்பர்களே..

இதுவரை என்னுடைய தொல்லையை கேட்டுக்கொண்டு இருந்த என்னுடைய தோழமைகளே நான் விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டமையால் நான் சென்றுவருகிறேன்.. இன்னும் காதலை பற்றிய உங்களின் கருத்துக்களை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டுள்ளேன்.. இப்போது சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு எனக்கு பிடித்த பாடல் வரும் அதை அனைவரும் கேட்டு ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.